என் மலர்
திருவள்ளூர்
- சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த திலகவதி நேற்று பரிதாபமாக இறந்தார்.
- மப்பேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் விசாரணை நடத்தி வருகிறார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் உளுந்தை காலனி, நேரு தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி திலகவதி (34) இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திலகவதி அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார்.
கடந்த 7 -ந் தேதியன்று குமார் தனது மனைவி திலகவதியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு அவர் வேலை செய்யும் இடத்தில் விடுவதற்காக சென்றார்.
உளுந்தை சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையில் இருந்த பள்ளத்தில் இருசக்கர வாகனம் ஏறி இறங்கிய போது பின்னால் அமர்ந்திருந்த திலகவதி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த திலகவதி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மப்பேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் விசாரணை நடத்தி வருகிறார்.
திருவள்ளூர் அடுத்த வெள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் சாலமன் (49). இவர் அப்பகுதியில் உள்ள கோவிலில் பணி செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 6-ந் தேதியன்று அவர் மோட்டார் சைக்கிளில் திருத்தணி சென்றுவிட்டு திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். திருவள்ளூர் அடுத்த நாராயணபுரம் ஜங்ஷன் அருகில் வந்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த சாலமனுக்கு சென்னை அரசு ஆஸ்பத்தி ரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சாலமன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.
- மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
- தீ விபத்தில் ரூ.20 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகி இருக்கும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தைச் சேர்ந்த மோகன்குமார்(வயது43). இவர் பெரியபாளையம் பஸ் நிலையம் எதிரே ஜெய் ஸ்ரீவாரி மிட்டாய்ஸ் என்ற பெயரில் ஸ்வீட் ஸ்டால் மற்றும் பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு இவர் வழக்கம் போல் கடையை மூடிக்கொண்டு வீட்டிற்கு சென்றார். புயல் காரணமாக இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடிக்கடி இப்பகுதியில் மின்தடையும் ஏற்பட்ட வண்ணம் இருந்தது. இன்று விடியற்காலை இக்கடையில் இருந்து கரும்புகை வெளியேறுவதாக பெரியபாளையம் காவல் நிலைய போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.
எனவே, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அக்கடையின் கதவை திறக்க முயன்றனர். ஆனால், அரை மணி நேரமாக போராடியும் கதவை திறக்க இயலவில்லை. இதனால் ஜே.சி.பி இயந்திரம் வரவழைக்கப்பட்டு இரும்பு கதவை உடைத்து பார்த்தபோது கடையின் உள்ளே தீ மளமளவென கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.
தகவல் அறிந்த தேர்வாய் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு நிலைய நிலைய அதிகாரி செந்தில்குமார் தலைமையில் 10 பேர் கொண்ட தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்க போராடினர்.
ஆனால், இந்தக் கடையில் ஸ்வீட், காரம், பேக்கரி பொருட்கள் ஆகிய அனைத்தும் இயந்திரத்தைக் கொண்டு செய்வதால் இவை அனைத்தும் தீயில் எரிந்ததால் இத்தீயை விரைவாக அணைக்க இயலவில்லையாம். சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். போக்குவரத்து நிறைந்த பெரியபாளையம் பஸ் நிலையம் அருகே நடைபெற்ற இந்த தீ விபத்தால் பெரியபாளையம்-சென்னை நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த தீ விபத்தில் ரூ.20 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி இருக்கும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. விடியற்காலை ஏற்பட்ட இந்த தீ விபத்து இப்பகுதியில்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மீட்பு குழுவினர் மழை வெள்ளம் பாதிக்கும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
- கனமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.
திருவள்ளூர்:
வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் காரணமாக இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு மிக கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து உள்ளது. இதையொட்டி புயல், மழையை எதிர்கொள்ள தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவடத்தில் புயல் மழையை எதிர்கொள்ள மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் உத்தரவுப்படி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 40 பேர் கொண்ட குழுவினர் திருவள்ளூர் வந்தனர்.
அவர்கள் இன்ஸ்பெக்டர் ரவி மேற்பார்வையில் காவலர்கள் விஷ்ணு, கோகுல், ரவிச்சந்திரன் ஆகியோரின் தலைமையில் 3 குழுவாக பிரிக்கப்பட்டு மாவட்டத்தில் மழை பாதிப்பு அதிகம் உள்ள முக்கிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கயிறு, ரப்பர் படகு, லைப் ஜாக்கெட், முதலுதவி மருந்து பெட்டகம், ஜெனரேட்டர், விளக்குகள் உள்ளிட்ட மீட்பு உபகரணங்களுடன் அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, மீட்பு குழுவினர் மழை வெள்ளம் பாதிக்கும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அங்கு தங்கி மீட்பு பணியில் ஈடுபடுவார்கள். கனமழையை எதிர்கொள்ள அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என்றனர்.
- யுவராஜ் சினிமாத்துறையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
- மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் திடீரென யுவராஜின் விலை உயர்ந்த செல்போனை பறித்து சென்று விட்டனர்.
மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். சினிமாத்துறையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு பணி முடிந்து அதே பகுதி எம்.ஜி.சக்ரபாணி நகர் வழியாக செல்போனில் பேசியபடியே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் திடீரென யுவராஜின் விலை உயர்ந்த செல்போனை பறித்து சென்று விட்டனர்.
இது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருவள்ளூர் நகர பா.ஜ.க. இளைஞரணி தலைவர் உதயா கார்த்திகேயனிடம் பார் ஊழியர் பிரசாத் பணம் கேட்டார்.
- மது பாரில் நடந்த தாக்குதல் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியில் மதுக்கடை பார் உள்ளது. இங்கு சிக்கன் மற்றும் பொருட்கள் வாங்கியது தொடர்பாக திருவள்ளூர் நகர பா.ஜ.க. இளைஞரணி தலைவர் உதயா கார்த்திகேயனிடம் பார் ஊழியர் பிரசாத் பணம் கேட்டார்.
இதில் ஏற்பட்ட தகராறில் பிரசாத் தாக்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் உதயா கார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர் பரந்தாமன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மது பாரில் நடந்த தாக்குதல் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
- சென்னையை நெருங்கிவரும் மாண்டஸ் புயலால் இன்று முதல் 4 நாட்கள் தமிழகத்தில் மழை பெய்யும்.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
சென்னையை நெருங்கிவரும் மாண்டஸ் புயலால் இன்று முதல் 4 நாட்கள் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
- நண்பர்களான கோபிசந்தும், நகுலும் நேற்று மாலை வெளியே சென்றனர். பின்னர் அவர்கள் திரும்பி வரவில்லை.
- 2 மாணவர்கள் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள குருராஜா கண்டிகை பகுதியை சேர்ந்தவர் கோபிசந்த் (வயது 13). அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த நகுல் (12) என்பவர் புதுராஜா கண்டிகை அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்தார். நண்பர்களான கோபிசந்தும், நகுலும் நேற்று மாலை வெளியே சென்றனர். பின்னர் அவர்கள் திரும்பி வரவில்லை. அவர்களை பெற்றோர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை அப்பகுதியில் உள்ள கிணற்றில் கோபிசந்தும், நகுலும் பிணமாக மிதந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் கவரப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் மற்றும் தேர்வாய் கண்டிகை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கிணற்றின் அருகே அவர்களது உடைகள் கழற்றி வைக்கப்பட்டு இருந்தது. எனவே நண்பர்கள் இருவரும் கிணற்றில் குதித்து குளித்தபோது தண்ணீரில் மூழ்கி இறந்து இருப்பது தெரியவந்தது.
2 மாணவர்கள் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கவர ப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பழவேற்காடு பகுதியில் கடல் அலை பலத்த சீற்றத்துடன் வீசுகிறது.
- மாமல்லபுரம், கோவளம், கல்பாக்கம் கடலோர பகுதிகளில் இன்று காலை சாரல் மழை பெய்ய தொடங்கியது.
பொன்னேரி:
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறி உள்ளது. இதற்கு மாண்டஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து எண்ணூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
பழவேற்காடு பகுதியில் கடல் அலை பலத்த சீற்றத்துடன் வீசுகிறது. புயல் காரணமாக பழவேற்காட்டை சுற்றி உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள், மீன்பிடி உபகரணங்களை அவர்கள் பத்திரமாக கடல் கரையில் கட்டி வைத்து உள்ளனர். மேலும் இன்று காலை வழக்கத்தை விட பழவேற்காடு கடலில் குளிர்ந்த காற்று வேகமாக வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர். இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது.
மாமல்லபுரம், கோவளம், கல்பாக்கம் கடலோர பகுதிகளில் இன்று காலை சாரல் மழை பெய்ய தொடங்கியது. கடலில் அலையின் சீற்றமும் அதிகமாக இருந்தது. இதனால் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அவசரமாக கரை திரும்பினர்.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் (ரேடியேட்டர்) கொதிகலனின் வெப்பத்தை தணிக்க, 1 கி.மீ., தொலைவில் கடலில் இருந்து எடுக்கப்படும், கடல் நீர் குழாய்கள் புயல், கடல் சீற்றத்தால் சேதமடைந்து விடாத வண்ணம் அப்பகுதியை அணுமின் நிலைய நிர்வாகத்தினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
மேலும் பேரிடர் மீட்புப்பணிகள் குறித்து அணுமின் நிலைய பாதுகாப்பு ராணுவத்தினர், தீயணைப்பு படையினர், மருத்துவ பிரிவினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஆலோசனை நடத்தி தயார் நிலையில் உள்ளனர்.
- ஹேமந்த் குமாரும், அவரது மகனும் காரை நிறுத்தாமல் சென்று விட்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருத்தணி:
திருத்தணி அடுத்த ஆர்.கே. பேட்டை அருகே உள்ள அம்மையார்குப்பம் சேர்ந்தவர் பகுதியை ஹேமந்த் குமார். இவர் அம்மையார்குப்பம் மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் நகைக்கடைநடத்தி வருகிறார்.
வாரத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் காரில் சென்னைக்கு சென்று தங்க நகைகள் வாங்கி வந்து விற்பனை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்றுகாலை அவர், மகனுடன் நகைகளை வாங்க சென்னைக்கு ரயில் மூலம் சென்றார். பின்னர் இரவு நீண்டநேரம் ஆனதால் அவர் நகைகளை பிறகு எடுத்துக் கொள்வதாக கூறிவிட்டு மீண்டும் ரயில் மூலம் திருத்தணிக்கு வந்தார்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து காரில் அம்மையாருக்கு குப்பத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். வேலன் கண்டிகை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் திடீரென கார் மீது கற்களை வீசினர். மேலும் துப்பாக்கியை காட்டியும் மிரட்டினர்.
ஆனால் ஹேமந்த் குமாரும், அவரது மகனும் காரை நிறுத்தாமல் சென்று விட்டனர்.
வழக்கம்போல் நகையுடன் ஹேமந்த் குமார் வருவார் என்று நினைத்து மர்ம கும்பல் இந்த தாக்குதலில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து ஆர்.கே. பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ராஜகனிக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
- ராஜகனியின் உடல் அதே பகுதியில் உள்ள இடு காட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த சின்ன காவனம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகனி (வயது104). இவருக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ராஜகனியின் கணவர் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இதையடுத்து ராஜகனி கூலிவேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். பின்னர் வயது முதிர்வு காரணமாக அவர் தனது இளைய மகன் அர்ஜுனன் வீட்டில் வசித்தார். ஐந்து தலைமுறை கண்ட ராஜகனிக்கு பேரன், பேத்திகள், கொள்ளு பேரன், கொள்ளுபேத்திகள் என அவரது குடும்பத்தில் மொத்தம் 22 பேர் உள்ளனர்.
மூதாட்டி ராஜகனி உடலில் எந்த பிரச்சினையும் இல்லாமல் தனது வேலைகளை தானே செய்து வந்தார். இதற்கிடையே நேற்றுமுன்தினம் ராஜகனிக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவரை குடும்பத்தினர் கவனித்து வந்தனர். இந்த நிலையில் ராஜகனி இறந்து போனார். அவரது இறுதி நிகழ்ச்சியில் குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்றனர். 104 வயது வரை அவர் உடலில் எந்த நோய் பிரச்சினையும் இல்லாமல் இருந்ததை அவரது குடும்பத்தினர் நினைவு கூர்ந்தனர். ராஜகனியின் உடல் அதே பகுதியில் உள்ள இடு காட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
- சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி நடந்து வருகிறது.
- மழை நீர் வடிகால்வாய் அமைக்காவிட்டால் தங்களது குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படுத்தும் என்று குற்றம் சாட்டி உள்ளனர்.
பூந்தமல்லி:
செம்பரம்பாக்கம் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி நடந்து வருகிறது. இதில் மழை நீர் கால்வாய் அமைக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழஞ்சூர், பாப்பன்சத்திரம் பகுதி மக்கள் சாலை அமைக்க வந்த வாகனத்தை சிறை பிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மழை நீர் வடிகால்வாய் அமைக்காவிட்டால் தங்களது குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படுத்தும் என்று குற்றம் சாட்டி உள்ளனர்.






