என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்க அனுமதிக்க வேண்டும் - கலெக்டரிடம் அ.தி.மு.க எம்.எல்.ஏ. மனு
  X

  கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்ட காட்சி.

  வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்க அனுமதிக்க வேண்டும் - கலெக்டரிடம் அ.தி.மு.க எம்.எல்.ஏ. மனு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புதிய கொடிவேரி கூட்டு குடிநீர்திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் போதிய தண்ணீர்வரத்து உள்ளது.
  • பில் கலெக்டர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் அலுவலக பணிகளில் தாமதம் ஏற்பட்டுகிறது.

  திருப்பூர் :

  பெருந்துறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஜெயக்குமார் திருப்பூர்மாவட்ட கலெக்டர் வினீத்திடம் மனு கொடுத்தார்.அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

  குன்னத்தூர் பேரூராட்சியில் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. தற்போது புதிய கொடிவேரி கூட்டு குடிநீர்திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் போதிய தண்ணீர்வரத்து உள்ளதால் வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்கமாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். குன்னத்தூர் பேரூராட்சியில் பில் கலெக்டர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள்காலியாக உள்ளதால் அலுவலக பணிகளில் தாமதம் ஏற்பட்டுபொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே இந்த பதவியிடங்களுக்கு பணி நியமனம் செய்ய வேண்டும்.

  குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகம் மிகப்பழமை வாய்ந்த கட்டிடமாக உள்ளதால் பேரூராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம்கட்டிக்கொடுக்க வேண்டும். குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு கூடுதலாக புதிய டிராக்டர்வாங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும்.

  இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

  அப்போது மாவட்ட கவுன்சிலர்கள் கண்ணம்மாள் ராமசாமி,சக்திவேல், குன்னத்தூர் பேரூராட்சி தலைவர் குமாரசாமி, துணைதலைவர் ஜோதிமணி, கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள்,ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்டவர்கள் உடன் வந்தனர்.

  Next Story
  ×