என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
இடுவாய் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பா.ஜ.௧.வினர் ஆர்ப்பாட்டம்
- டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பி, கண்டன உரையாற்றினர்.
மங்கலம் :
திருப்பூர் மாவட்டம் இடுவாய் ஊராட்சியில் பா.ஜ.க மற்றும் இடுவாய் ஊர்ப்பொதுமக்கள் இணைந்து இடுவாய் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க. திருப்பூர் தெற்கு ஒன்றிய தலைவர் சரவணக்குமார் தலைமை தாங்கினார். திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவர் சி.பி.சுப்பிரமணியம்,திருப்பூர் வடக்கு மாவட்ட தொழில் பிரிவு துணைத்தலைவர் ஐ.ஈ.டி.சி.விநாயகமூர்த்தி ,திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருப்பூர் தெற்கு ஒன்றியத்தின் பொதுச்செயலாளர்கள் தேன்மொழி ,சம்பத்குமார், ஓ.பி.சி அணி தெற்கு ஒன்றிய தலைவர் கார்த்திகேயன், தெற்கு ஒன்றிய துணைத்தலைவர் கந்தசாமி, தெற்கு ஒன்றிய இளைஞர்அணி தலைவர் ராஜ்குமார், இடுவாய் பகுதி தலைவர் செகமலையப்பன், மங்கலம் பகுதி தலைவர் ரகுபதி ,இடுவாய் பா.ஜ.௧ நிர்வாகி சின்னச்சாமி, இடுவாய் பகுதி மூத்த நிர்வாகி மு.பழனிச்சாமி, சமூக ஊடகபிரிவு மாவட்ட தலைவர் ராகேஸ்பாண்டி, திருப்பூர் வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் கே.சி.எம்.பி.சீனிவாசன்,கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன்,மாநில மகளிரணி செயலாளர் சுதாமணி சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் இடுவாய் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பி ,கண்டன உரையாற்றினர்.