search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எல்.முருகன் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
    X

    எல்.முருகன் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வழக்கை ரத்து செய்யக்கோரி எல்.முருகன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி.
    • வழக்கின் விசாரணையை 3 மாதங்களில் முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவு.

    கடந்த 2019-ம் ஆண்டில் வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக பா.ஜ.கவில் அப்போதைய தலைவர் எல்.முருகன் பஞ்சமி நிலம் குறித்து பேசியதாக முரசொலி அறக்கட்டளை சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி, தற்போது மத்திய இணை அமைச்சராக இருக்கும் எல்.முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணையின் போது இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    இந்நிலையில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    மேலும் வழக்கை ரத்து செய்யக்கோரி எல்.முருகன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி வழக்கின் விசாரணையை 3 மாதங்களில் முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×