என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விடுதிக்குள் புகுந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது
  X

  விடுதிக்குள் புகுந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விடுதிக்குள் புகுந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் அதே தெருவில் உள்ள ஆண்கள் விடுதிக்குள் செல்வது தெரிந்தது.
  • கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து அங்கு பதுங்கி இருந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டேனியல் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

  அம்பத்தூர்:

  முகப்பேரில் பெண்கள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு ஏராளமான இளம்பெண்கள் தங்கி தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகிறார்கள்.

  சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் விடுதியில் தங்கி உள்ள பெண்கள் அறைக்கதவை பூட்டி விட்டு தூங்கினர். இந்த நிலையில் அதிகாலை 4.30 மணியளவில் வாலிபர் ஒருவர் பெண்கள் விடுதிக்குள் நுழைந்து அறையின் ஜன்னல் வழியாக புகுந்தார். பின்னர் அவர், அங்கு தூங்கிக்கொண்டு இருந்த இளம்பெண் ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.

  இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் எழுந்தபோது அருகில் மர்ம வாலிபர் நிற்பதை கண்டு கூச்சலிட்டார். உடனே அந்த வாலிபர் ஜன்னல் வழியாக ஏறிக்குதித்து தப்பி சென்று விட்டார்.

  இது குறித்து ஜெ.ஜெ.நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

  இதில் விடுதிக்குள் புகுந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் அதே தெருவில் உள்ள ஆண்கள் விடுதிக்குள் செல்வது தெரிந்தது.

  இதைத்தொடர்ந்து கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து அங்கு பதுங்கி இருந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டேனியல் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் ஆண்கள் விடுதியில் தங்கி இருந்து திருவான்மியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. விசாரணையின் போது அவர் விடுதிக்குள் புகுந்து இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.

  இது குறித்து டேனியலை போலீசார் கைது செய்தனர். அவர் மீது அத்துமீறி நுழைதல், பெண்ணை மானபங்கப்படுத்துதல் ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

  Next Story
  ×