என் மலர்
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இருந்து சென்னைக்கு வாரத்தில் 2 முறை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த ரெயிலில் நவீன பெட்டிகள் இணைக்கப்பட்டன. தற்போது சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டிகளில் 80 பேர் வரை பயணம் செய்யும் வகையிலும், முன்பதிவு இல்லாத பெட்டிகளில் 100 பேர் வரை அமர்ந்து பயணம் செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரெயிலின் வேகமும் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கும் அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரெயிலில் ரப்பர் புஷ் பிரேக்குக்கு பதிலாக டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பெருமளவு விபத்துகள் தவிர்க்கப்படும். ரெயில் பெட்டிகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்ய என்ஜினுக்கு அடுத்த பெட்டி மற்றும் கடைசி பெட்டியில் ஜெனரேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் பெட்டிகளை கழற்றி மாறுதால் செய்யும் போது நேரம் மிச்சமாகும். தடையின்றி பெட்டிகளில் மின்சாரம் கிடைக்கும். இவ்வாறு பல புதிய அமைப்புகள் இந்த ரெயிலில் கொண்டு வரப்பட்டன.
ஆனால் ரெயிலில் நவீன பெட்டிகள் இணைத்த பின்பு முன்பதிவு இல்லாத பெட்டிகள் எண்ணிக்கை 5–ல் இருந்து 2–ஆக குறைக்கப்பட்டன. இது பயணிகள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் இதுகுறித்து மானாமதுரை பகுதி ரெயில் பயணிகள் மீண்டும் 5 முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று ரெயில்வே அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்து வந்தனர்.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் மானாமதுரை ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை செல்வதற்கு தயார் நிலையில் இருந்தது. அப்போது முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்களிடையே திடீரென இடம்பிடிப்பதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுதொடர்பாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியானது.
இந்த நிலையில் ரெயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று ரெயில்வே துறையினர் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் மீண்டும் 5 முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைத்தனர். இது ரெயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சண்முகம், தனது மனைவி பாண்டிமீனாளிடம், வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல கூடுதல் வரதட்சணையாக பணம் வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தி உள்ளார். இதற்கு உடந்தையாக அவருடைய தகப்பனார் சின்னான், தாயார் மறத்தி ஆகியோர் இருந்துள்ளனர். இதனால் பாண்டிமீனாள் தனது தந்தை வீட்டிற்கு வந்து யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார்.
மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார் சண்முகம், சின்னான், மறத்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்புவனம்:
திருப்புவனம்-மதுரை மெயின் ரோட்டில் காலை, மாலை நேரங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. 10 நிமிடங்களுக்கு ஒரு முறை வெளியூர் மற்றும் நகர் பேருந்துகள் சென்று வருகின்றன. ரோட்டின் இருபுறங்களிலும் ஆக்கிர மிப்புகள் அதிகமாக உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு விபத்துக் குள்ளாகும் வாய்ப்புகள் உள்ளது.
இந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினரும், காவல்துறையினரும் இணைந்து அகற்ற வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சிவகங்கை:
காரைக்குடி பெரிய மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டிமீனாள் (வயது28). இவருக்கும், சண்முகம் (32) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடை பெற்றது.
அப்போது 15 பவுன் நகை மற்றும் பணம் வரதட்சணையாக வழங்கப்பட்டதாம். இந்த நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்ரவதை செய்வதாக, காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் பாண்டிமீனாள் புகார் செய்தார்.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி விசாரணை நடத்தி, சண்முகம், அவரது பெற்றோர் சின்னான் (60), மாறத்தி (55), உறவினர் சித்ரா (30) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கீழச்செவல்பட்டி அருகே உள்ள கே.ஆத்தக்குடியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது48), விவசாயி. அதே ஊரைச் சேர்ந்தவர் மணிமுத்து (50).
இவர்கள் இருவருக்கும் பொதுப்பாதை தொடர்பாக தகராறு இருந்து வந்தது. நேற்று சுப்பிரமணியன் அந்த வழியே வந்தபோது, மணிமுத்து அமைத்திருந்த வேலியை இடித்து விட்டாராம்.
இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த நிலையில் சுப்பிரமணியன் மனைவி விஜயா (38) தகராறை தடுக்க முயன்றுள்ளார்.
அப்போது மணிமுத்து, அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் விஜயா பலத்த காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே விஜயா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கீழச்செவல்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ரவி விசாரணை நடத்தி, மணிமுத்து, அவரது மனைவி செல்வி, தாய் அழகி, மகன் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்.
இதற்கிடையில் தகராறில் காயம் அடைந்ததாக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் மணிமுத்து சிகிச்சை பெற்று வருகிறார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட வலனை கிராமத்தைச்சேர்ந்தவர்கள் அர்ச்சுணன் (வயது60), கார்த்திக் ராஜா. இவர்கள் நேற்று அதே பகுதியில் விளையாடி கொண்டிருந்த 8 வயதுள்ள 5 சிறுமிகளை மறைவான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தேவகோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ராது ராஜீ விசாரணை நடத்தி 5 சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த அர்ச்சுணன், கார்த்திக் ராஜா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் உள்ள காந்தி ரோட்டை சேர்ந்தவர் அண்ணாமலை. பைனான்சியரான இவர், சம்பவத்தன்று திண்டுக்கல்லில் வசிக்கும் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார்.
இதை பயன்படுத்தி கொண்ட மர்ம ஆசாமிகள் நள்ளிரவு நேரத்தில் பின்புற வழியாக வீட்டிற்குள் புகுந்தனர்.
பின்னர் அங்கிருந்த பீரோவை திறந்து 12 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், லேப்-டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
நேற்று வீடு திரும்பிய அண்ணாமலை, நகை-வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் தேவகோட்டை நகர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முகமது கரிக்குல அமீர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.
தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டது.
சிங்கம்புணரி:
திருப்பத்தூர் தாலுகாவை பிரித்து சிங்கம்புணரியை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் சிங்கம் புணரி மற்றும் எஸ்.புதூர் ஒன்றியங்களை இணைத்து சிங்கம்புணரியை தனி தாலுகாவாக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு செய்தார்.
இதனைத் தொடர்ந்து நகர செயலாளர் ராஜசேகரன் தலைமையில் பஸ் நிலையம் முன்பு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி அ.தி.மு.க.வினர் கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் லட்சுமிபிரியா ஜெயந்தன், பேரூராட்சி கவுன்சிலர்கள் குணசேகரன், சதீஷ்குமார், ராஜா, செல்லையா, பாலாஜி, நித்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களும் கலந்து கொண்டனர்.
காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தியும், கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்பவங்களை கண்டித்தும் தமிழகத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.
அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நகரில் தனியார் பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. அரசு பஸ்கள் குறைவாக இயக்கப்பட்டன.
சிவகங்கை பஸ் நிலையம், மக்கள் கூடும் இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மாவட்டத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டிருந்தன.
காரைக்குடி, மானாமதுரை, திருப்புவனம், கல்லல், காளையார்கோவில், இளையான்குடி ஆகிய பகுதிகளிலும் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. ஆங்காங்கே பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டங்களும், மறியல்களும் நடைபெற்றன.
விருதுநகரில் கடையடைப்பு போராட்டத்தால் பாதிப்பு குறைந்த அளவே காணப்பட்டன. பஸ் நிலையம் மற்றும் முக்கிய பகுதிகளில் ஒரு சில கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அரசு பஸ்கள் முழுமையாக இயக்கப்பட்டன. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அரசு பள்ளிகளுக்கும் மாணவர்களின் வருகை குறைந்த அளவே இருந்தன.
அதேபோல் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் முழு கடையடைப்புக்கு ஆதரவுகள் இருந்தன. இதனால் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தன. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
ராமநாதபுரம் மாவட்டத்திலும் கடையடைப்பு போராட்டத்திற்கு முழு ஆதரவு இருந்தன. ராமநாதபுரம் அரண்மனை, பஸ் நிலையம், கீழக்கரை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. சில தனியார் பள்ளிகள் இயங்கின. அரசு பஸ்கள் அனைத்தும் இயக்கப்பட்ட நிலையில் கூட்டம் குறைந்தளவே காணப்பட்டது.
ராமேசுவரத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. கோவிலை சுற்றியுள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டு இருந்ததால் பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கர்நாடகாவை கண்டித்து ராமேசுவரம் மீனவர்களும் இன்று கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட பரமக்குடி, கமுதி, மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம், முதுகுளத்தூர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.
மதுரையில் இன்று காலை அரசு பஸ்கள், ஒரு சில ஆட்டோக்கள் இயங்கின. வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. ஆனால் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது.
தனியார் பஸ்கள் இயங்காததால் மதுரை பஸ் நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள் அருகேயுள்ள ஒரு சில டீக்கடைகளும், டிபன் சென்டர்களும் இயங்கின. ஆனால் ஓட்டல்கள், பெரிய கடைகள் எல்லாம் மூடப்பட்டு இருந்தன.
இதேபோல மதுரை சென்ட்ரல் மார்க்கெட், பரவை மார்க்கெட்கள் முடுப்பட்டன. இவ்விரண்டு மார்க்கெட்டுகளும் இயங்காததால் இன்று ஒரு நாள் மட்டும் வர்த்தகம் சுமார் ரூ.10 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக சங்க தலைவர்கள் தெரிவித்தனர்.
இன்று முழு அடைப்பையொட்டி நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி கண்காணித்து வந்தனர்.
மதுரையில் இருந்து நாள்தோறும் 2,600 லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஈடுபடுவதால் லாரிகளும் ஓடவில்லை.
சிவகங்கை:
கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையை கண்டித்து இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. தி.மு.க.வும் இதற்கு முழு ஆதரவு அளித்து ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தது.
அதன்படி இன்று காலை சிவகங்கை மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமையில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் விருதுநகர் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் கர்நாடக அரசை கண்டித்து கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் திடீரென்று ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர்.
அப்போது ஏற்கனவே பாதுகாப்புக்கு அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனாலும் 100-க்கும் மேற்பட்டோர் ரெயில் நிலையத்திற்குள் புகுந்து அங்கே நின்றிருந்த சென்னை-ராமேசுவரம் ரெயிலை மறித்து போராட்டம் செய்தனர். சிலர் ரெயில் என்ஜினில் ஏறி கோஷமிட்டனர்.
இதையடுத்து ரெயில்வே மற்றும் மாவட்ட போலீசார் விரைந்து செயல்பட்டு தண்டவாளத்தில் மறியல் செய்த தி.மு.க.வினரை அப்புறப்படுத்தினர். மேலும் ரெயில் நிலையம் முன்பு போராட்டம் செய்த பெரியகருப்பன், தென்னவன் உள்பட 1,000-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் ஒன்றியத்தைச்சேர்ந்த அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ஆதார் கார்டு எடுக்கும் பணி ஆர்.சி. பாத்திமா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இம்முகாமினை வட்டாட்சியரும், ஆதார் கார்டு ஒருங்கிணைப்பு அலுவலருமான கருணாகரன் மற்றும் உதவி தொடக் கக்கல்வி அலுவலர் ஜான்சார்லஸ், ஆய்வு மேற்கொண்டனர்.
நேற்று 104 பள்ளிகளைச் சேர்ந்த 525 குழந்தைகளுக்கு ஆதார் கார்டுக்கான புகைப்படம், கைரேகைப்பதிவு, கருவிழிப்பதிவு முதலியவை எடுக்கப்பட்டது.
இப்பணியினை பெல் நிறுவன பொறியாளர் மணிகண்டன், இந்துமதி ஆகியோர் தலைமையிலான 12 ஆப்ரேட்டர்கள் செய்து வருகின்றனர்.
திருப்பத்தூர் அருகே உள்ள சின்னகசிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பரிமளா (வயது 33). திருமணமானபெண். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சரண்ராஜ் (25) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பரிமளா, சரண்ராஜியுடனான கள்ளத்தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரண்ராஜ், பரிமளாவை கத்தியால் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் சரண்ராஜ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து கத்தி குத்தியதில் படுகாயம் அடைந்த பரிமளா மற்றும் விஷம் குடித்த சரண்ராஜ் ஆகியோர் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






