என் மலர்
செய்திகள்

திருப்பத்தூர் பகுதியில் ஆதார் கார்டு எடுக்கும் முகாம்
திருப்பத்தூர் ஆர்.சி. பாத்திமா பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கு ஆதார் கார்டு எடுக்கும் முகாம் நடைபெற்றது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் ஒன்றியத்தைச்சேர்ந்த அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ஆதார் கார்டு எடுக்கும் பணி ஆர்.சி. பாத்திமா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இம்முகாமினை வட்டாட்சியரும், ஆதார் கார்டு ஒருங்கிணைப்பு அலுவலருமான கருணாகரன் மற்றும் உதவி தொடக் கக்கல்வி அலுவலர் ஜான்சார்லஸ், ஆய்வு மேற்கொண்டனர்.
நேற்று 104 பள்ளிகளைச் சேர்ந்த 525 குழந்தைகளுக்கு ஆதார் கார்டுக்கான புகைப்படம், கைரேகைப்பதிவு, கருவிழிப்பதிவு முதலியவை எடுக்கப்பட்டது.
இப்பணியினை பெல் நிறுவன பொறியாளர் மணிகண்டன், இந்துமதி ஆகியோர் தலைமையிலான 12 ஆப்ரேட்டர்கள் செய்து வருகின்றனர்.
Next Story






