என் மலர்
சிவகங்கை
காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
வேட்பு மனுத்தாக்கல் அலுவலக பகுதியில் 100 மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கீழக்கோட்டை பஞ்சாயத்து தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் ராஜபாண்டி, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை பாதுகாப்பு பணியில் இருந்த சிவகங்கை நகர் தலைமை காவலர் ஜான் கென்னடி தடுத்து நிறுத்தினார். இந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்லக்கூடாது என கூறியதால், ஆசிரியர் ராஜபாண்டி வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது அவர் தலைமை காவலர் ஜான் கென்னடியுடன் கட்டிப்புரண்டு தகராறு செய்தாராம்.
இது குறித்து காளையார் கோவில் போலீசில் தலைமைக்காவலர் ஜான் கென்னடி புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செய்யது அலி வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் ராஜபாண்டியை கைது செய்தார்.
சிவகங்கை:
சிவகங்கை நகர் பஸ் நிலையம் அருகே விஷ்ணுதுர்கா அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அர்ச்சகர் வைத்தி சுப்பிரமணியன், நேற்று பூஜையை முடித்து கோவிலை பூட்டி சென்றார்.
இன்று காலை கோவிலுக்கு வந்த அவர் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் திருட்டு நடந்திருப்பது தெரியவந்தது.
கோவிலுக்குள் புகுந்த திருடர்கள் அம்மனின் கழுத்தில் கிடந்த 10 கிராம் தங்க தாலி மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடி சென்றுள்ளதாக அர்ச்சகர் வைத்தி சுப்பிரமணியன் போலீசில் புகார் செய்தார்.
சிவகங்கை நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பு சாமி வழக்குப்பதிவு செய்து கோவிலில் திருடிய மர்ம மனிதர்களை தேடி வரு கிறார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
1-வது வார்டு யோக லட்சுமி மாரியப்பன், 2-வது வார்டு முனியசாமி, 3-வது வார்டு செல்வராணி விஜிபோஸ், 4-வது வார்டு இந்திரா, 5-வது வார்டு நமச்சிவாயம், 6-வது வார்டு கல்யாணி சங்கர், 7-வது வார்டு மோகன்தாஸ், 8-வது வார்டு கஸ்தூரி வீரசேகரன், 9-வது வார்டு லதாமணி, 10-வது வார்டு முத்து, 11-வது வார்டு கண்ணன், 12-வது வார்டு கோட்டமுத்து, 13-வது வார்டு ஷீலாதேவி, 14-வது வார்டு காளீஸ்வரி தெய் வேந்திரன், 15-வது வார்டு ஜெயலட்சுமி, 16-வது வார்டு பழனிகுமார், 17-வது வார்டு சந்திரசேகரன், 18-வது வார்டு சரவணன்.
1-வது வார்டு செல்வ ராணி, 2-வது வார்டு அமுதா, 3-வது வார்டு ரம்யா, 4-வது வார்டு காஞ்சனமாலா, 5-வது வார்டு டாக்டர் பாலகிருஷ்ணன், 6-வது வார்டு கமலி, 7-வது வார்டு கார்த்திகேயன், 8-வது வார்டு எழிலரசி, 9-வது வார்டு கனிமொழி, 10-வது வார்டு ஜெகதீசன், 11-வது வார்டு அழகுதேவி பாஸ்கரன், 12-வது வார்டு சேவுகமூர்த்தி, 13-வது வார்டு ஜீவிதா, 14-வது வார்டு ராஜா, 15-வது வார்டு ஓவியசெல்வம், 16-வது வார்டு இமயபல்லவன், 17-வது வார்டு முத்து, 18-வது வார்டு முத்துமாரி.
1-வது வார்டு நாக ரத்தினம், 2-வது வார்டு சிவராஜன், 3-வது வார்டு சீராளம், 4-வது வார்டு கோபி, 5-வது வார்டு தமிழரசி, 6-வது வார்டு ராஜா, 7-வது வார்டு கிருஷ்ணவேணி, 8-வது வார்டு யாஸ்மின் சுவைரா, 9-வது வார்டு பாண்டீஸ்வரி, 10-வது வார்டு ஜனனி முத்துசரவணன், 11-வது வார்டு பஞ்சவர்ணம் உதய குமார், 12-வது வார்டு இளையராஜா, 13-வது வார்டு துர்க்காதேவி முத்து ராமன், 14-வது வார்டு சங்கரன், 15-வது வார்டு செல்வி, 16-வது வார்டு ஹேமலதா ஜெயபாண்டி, 17-வது வார்டு தனரஞ்சிதம், 18-வது வார்டு திருப்பதி.
1-வது வார்டு தமிழரசி, 2-வது வார்டு கான் முகமது, 3-வது வார்டு வைஜெயந்தி, 4-வது வார்டு தமிழ்செல்வி, 5-வது வார்டு பரிதாபானு, 6-வது வார்டு பாரதி லேகா, 7-வது வார்டு முத்து லட்சுமி, 8-வது வார்டு செந்தில்குமார், 9-வது வார்டு ஆனந்த், 10-வது வார்டு மலைச்சாமி, 11-வது வார்டு பாண்டிமீனாள், 12-வது வார்டு தங்கநாச்சியார், 13-வது வார்டு முருகேசன், 14-வது வார்டு சரவணன், 15-வது வார்டு தில்ஷாத் பேகம், 16-வது வார்டு வைரவராஜ், 17-வது வார்டு ரம்ஜான்பேகம், 18-வது வார்டு ஜென்னத்துல் பிர்தவுஸ்.
1-வது வார்டு சகர்பானு, 2-வது வார்டு தாவூது பாட்சா, 3-வது வார்டு தம்ஸிலாபேகம், 4-வது வார்டு லட்சுமணன், 5-வது வார்டு அன்வர், 6-வது வார்டு அகமது அலி, 7-வது வார்டு சபூர்நிஸா பேகம், 8-வது வார்டு ஜாகிர் உசேன், 9-வது வார்டு தீபலட்சுமி, 10-வது வார்டு அப்துல்கலாம் தஸ்தகீர், 11-வது வார்டு பைரோஸ் பேகம், 12-வது வார்டு நாகூர்மீரா, 13-வது வார்டு உஷா, 14-வது வார்டு செய்யது ஜாகீரா பானு, 15-வது வார்டு ஜிம்மா பானு, 16-வது வார்டு அயூப் அலிகான், 17-வது வார்டு சம்சுநிஸால், 18-வது வார்டு அன்வர் சதாத்.
1-வது வார்டு தெய்வானை கிருஷ்ணன், 2-வது வார்டு வளர்மதி, 3-வது வார்டு லட்சுமி, 4-வது வார்டு ஜான்சி ராணி, 5-வது வார்டு யோகேஸ்வரன், 6-வது வார்டு சோலையப்பன், 7-வது வார்டு ரமேஷ், 8-வது வார்டு தர்மலிங்கம், 9-வது வார்டு சோலச்சி, 10-வது வார்டு ராதா, 11-வது வார்டு அழகப்பன், 12-வது வார்டு ராமு.
1-வது வார்டு சேகர், 2-வது வார்டு சோலை, 3-வது வார்டு உமா, 4-வது வார்டு அமுதா பாண்டி, 5-வது வார்டு தமிழ்செல்வி, 6-வது வார்டு ஜெயலட்சுமி, 7-வது வார்டு பெரியநாயகி, 8-வது வார்டு வள்ளியம்மை, 9-வது வார்டு சின்னையா அம்பலம், 10-வது வார்டு பிரம்மையா, 11-வது வார்டு சின்னத்தம்பி, 12-வது வார்டு நெல்லியான், 13-வது வார்டு சரஸ்வதி, 14-வது வார்டு ஆறுமுகம், 15-வது வார்டு ராஜாத்தி.
1-வது வார்டு கண்ணன், 2-வது வார்டு உடையப்பன், 3-வது வார்டு புஷ்பம், 4-வது வார்டு பெரியசாமி, 5-வது வார்டு அழகுமீனாள், 6-வது வார்டு உமாமகேஸ்வரி, 7-வது வார்டு சுரேஷ், 8-வது வார்டு வைரஜோதி, 9-வது வார்டு பாலசுப்பிரமணியன், 10-வது வார்டு வளர்மதி, 11-வது வார்டு விசாலாட்சி சுரேஷ், 12-வது வார்டு சங்கீதா, 13-வது வார்டு பழனியம்மாள், 14-வது வார்டு முத்துமீனாள், 15-வது வார்டு சந்திரா.
1-வது வார்டு சுப்பிர மணியன், 2-வது வார்டு ரம்ஜான்பேகம், 3-வது வார்டு மணிமேகலை, 4-வது வார்டு ஜெயா, 5-வது வார்டு ராமலட்சுமி, 6-வது வார்டு திவ்யா, 7-வது வார்டு புவனேஸ்வரி, 8-வது வார்டு வேலாயுதம், 9-வது வார்டு தெய்வானை, 10-வது வார்டு சேகர், 11-வது வார்டு முருகானந்தம், 12-வது வார்டு வடிவுக்கரசி.
1-வது வார்டு கருப்பையா, 2-வது வார்டு சிவப்பிரகாசம், 3-வது வார்டு சண்முகவள்ளி, 4-வது வார்டு வள்ளி, 5-வது வார்டு சேது, 6-வது வார்டு ஜெயமணி சிதம்பரம், 7-வது வார்டு பாரதி மாணிக்கம், 8-வது வார்டு மீனாள் பெரியசாமி, 9-வது வார்டு ஆறுமுகம், 10-வது வார்டு விஜி சரவணன், 11-வது வார்டு காந்திமதி, 12-வது வார்டு ரேவதி பழனி, 13-வது வார்டு கணேசன், 14-வது வார்டு ஆறுமுகம், 15-வது வார்டு ஆரியகண்ணன்.
1-வது வார்டு மீனாள் செல்வராஜ், 2-வது வார்டு ஜெயலட்சுமி, 3-வது வார்டு லதாகிருஷ்ணன், 4-வது வார்டு நல்லமுத்து, 5-வது வார்டு செந்தாமரை, 6-வது வார்டு நாச்சியப்பன், 7-வது வார்டு கருப்பையா, 8-வது வார்டு நாச்சம்மை சுப்பையா, 9-வது வார்டு பாத்திமா கனி, 10-வது வார்டு ரகமத் நிஷா, 11-வது வார்டு இக்பால், 12-வது வார்டு நயினார் முகமது, 13-வது வார்டு சுதா முருகையா, 14-வது வார்டு வெங்கட்ராமன், 15-வது வார்டு முகமது மீரா.
1-வது வார்டு மணிமுத்து, 2-வது வார்டு சிட்டு, 3-வது வார்டு பாப்பா, 4-வது வார்டு ரேவதி, 5-வது வார்டு முத்தையா, 6-வது வார்டு நேரு, 7-வது வார்டு அழகு, 8-வது வார்டு முகமது காசிம், 9-வது வார்டு சஞ்சீவி, 10-வது வார்டு பழனிச்சாமி, 11-வது வார்டு, 12-வது வார்டு பார்வதி.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் உதயன் நகரைச் சேர்ந்தவர் விக்டர். இவரது மனைவி விஷாலி (வயது30).
இவர், தனது குழந்தையுடன் கடைக்கு சென்றார். வீட்டில் இருந்து புறப்பட்ட அவர், வீதியில் நடந்து சென்ற போது, 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள், விஷாலியை நிறுத்தி ஒரு முகவரியை காண்பித்து கேட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்த முகவரி பேப்பரை வாங்கி, விஷாலி பார்த்தார். அப்போது அந்த 2 பேரும் திடீரென கத்தியை எடுத்து அவரை மிரட்டினர்.
இதனை கண்டு விஷாலி அதிர்ச்சி அடைந்தார். என்ன செய்வது என தெரியாமல் அவர் விழித்தார். இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் 2 பேரும், விஷாலியின் கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து பள்ளத்தூர் போலீசில், விஷாலி புகார் செய்தார். அதில் கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் என குறிப்பிட்டு உள்ளார்.
இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை விவேகானந்தபுரத்தை சேர்ந்தவர் ஜெயமணி, அரசு கலைக்கல்லூரி பேராசிரியை. இவர் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார்.
இன்று காலை வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதில், 90 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கொள்ளைபோய் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மருதுபாண்டியன் நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது57). இவர் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தார்.
தினமும் அதிகாலையில் கண்ணன் நடைபயிற்சி செல்வது வழக்கம். இன்று (வியாழக்கிழமை) காலையும் அவர் வீட்டில் இருந்து நடைபயிற்சிக்கு சென்றார்.
வீட்டில் இருந்து பூங்கா அருகே அவர் வந்தபோது, மதுரையில் இருந்து காய்கறி ஏற்றிக் கல்லல் நோக்கி சென்ற லாரி வந்தது. அந்த லாரி எதிர்பாராதவிதமாக, கண்ணன் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர், பலத்த காயம் அடைந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து கண்ணனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் கண்ணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்துக்கு காரணமான லாரி டிரைவர், தப்பி ஓடி விட்டதால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் வருகிற அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
இப்பணியில் 1.97 லட்சம் பெண்கள் உட்பட 3.50 லட்சத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். இதில் வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடியில் தலைமை வாக்குப்பதிவு அலுவலர் முதல் அனைத்து நிலை வாக்குப்பதிவு அலுவலர்களாக பெரும்பாலும் ஆசிரியர்களே பணியாற்ற உள்ளனர்.
இவர்களில் 80 விழுக்காடுக்கு மேல் பெண் ஆசிரியர்கள் என்பதால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள மற்றும் கர்ப்பிணி பெண் ஊழியர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமெனவும், தேர்தல் பணியில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமெனவும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்துணைத் தலைவர் ஜோசப்ரோஸ், மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன், செயலாளர் முத்துப்பாண்டியன், பொருளாளர் குமரேசன், மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி ஆகியோர் சிவகங்கை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மலர்விழிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் வருகிற அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சிமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்ற வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களாக பெரும்பாலும் ஆசிரியர்களே நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் பணியிலிருந்து மாநிலத் தேர்தல் ஆணையத்தால் விலக்களிக்க உறுதியளிக்கப்பட்ட கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாயார், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிசிச்சை செய்து கொண்டோர், மருத்துவ விடுப்பில் உள்ளோர் மற்றும் தேர்தல் பணியாற்ற இயலாத நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு குறிப்பாக பெண் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்களிக்க வேண்டும்.
மேலும் 100 சதவீத வாக்களிப்பை நிறைவு செய்ய தபால் வாக்கினை முறையாக குறிப்பிட்ட காலகெடுவுக்குள் வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தேர்தல் பயிற்சி குறித்த விபரங்களை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள இரும்பூரை சேர்ந்தவர் சின்னக்கண்ணு என்ற சீதாராமன் (வயது53). ஆடுகள் மேய்க்கும் தொழில் செய்து வந்தார்.
இவருக்கும் அதே ஊரை சேர்ந்த கோவிந்தன் மகன் சொக்கையா (30) என்பவருக்கும் ஆடு மேய்ப்பதில் தகராறு இருந்து வந்துள்ளது.
நேற்று மாலையில் இருவரும் இரும்பூர் கண்மாய் பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த சொக்கையா அரிவாளால் சீதாராமனை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பலியானார்.
இந்த சம்பவம் குறித்து இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிங்கம்புணரி:
திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் கரடிப்பட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மகன் பூபதிராஜா (வயது30), இவரும், அதே பகுதியை சேர்ந்த ஆவான் என்பவரின் மகன் சரவணக்குமார் (27) ஆகியோர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே புதூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தனர்.
இன்று காலை 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டனர். புதூர் ஒன்றியம் கானாபட்டி விலக்கில் சென்றபோது பொன்னமராவதி சென்ற அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் பூபதிராஜா, சரவணக்குமார் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தனர். இது குறித்த புகாரின்பேரில் புழுதிபட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
காரைக்குடியில் ஆவணங்கள் இல்லாததால் நகைக்கடை அதிபரிடம் இருந்த ரூ.55 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அம்மன் சன்னதி பகுதியைச் சர்ந்தவர் சபரிநாதன். இவர் அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். சென்னை சென்றிருந்த இவர், நேற்று நள்ளிரவு பஸ் மூலம் காரைக்குடி வந்து இறங்கினார்.
வீட்டிற்கு நடந்து சென்ற போது, காரைக்குடி வடக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த சபரிநாதனிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் ரூ.55 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது.
உடனே போலீசார் அவரிடம் பணத்துக்குரிய ஆவணங்களை கேட்டுள்ளனர். சென்னையில் நகை விற்று பணத்தை கொண்டு வருவதாகவும் மேலும் ஆவணங்கள் தன்னிடம் தற்போது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார், பணத்தை பறிமுதல் செய்து ஆவணங்களை காண்பித்து வாங்கிச் செல்லுமாறு கூறினர். ஆவணம் கொண்டு வராவிட்டால் வருமானவரித்துறையிடம் பணம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சமுதாய கூடத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் பிறவி இருதய குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. இதை மாவட்ட கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசும் போது தெரிவித்ததாவது:-
குறைபாடுகள் இல்லாத குழந்தைகள் பிறக்க வேண்டு மென்றால் நல்ல சத்தான உணவு கொடுக்க வேண்டும். அங்கன்வாடி மையங்கள் மூலம் கொடுக்கப்படும் சத்தான சத்துமாவு கர்ப்பிணி பெண்களுக்கு கொடுத்து வந்தால் நல்ல ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும். ஆரோக்கியமான தலை முறைகள் உருவாக வேண்டுமென்றால் நல்ல உணவு பழக்க வழக்கங்கள், கட்டுப்பாடான சுகாதாரமான உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.
அம்மா ஆரோக்கிய திட்டத்தின் மூலமாக அனைத்து கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் பயிலுகின்ற மாணவ- மாணவியர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்படுகின்றது. அவ்வாறு செய்யப்பட்ட பரிசோதனைகளில் குறைபாடுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவ மனைகளில் உயர் மருத்துவ சிகிச்சை இலவசமாக மேற் கொள்ளப்படுகிறது.
சுகாதாரத்துறையின் சார்பாக நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை முகாம்களில் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 58 மாணவ-மாணவியர்களுக்கு இருதய நோய் கண்டறியப்பட்டு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் மருத்துவ சிகிச்கை அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் மருத்துவ முகாமில் பரிசோதனை செய்யப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு சிகிச்சைக்கான அடையாள அட்டைகளை கலெக்டர் வழங்கினார்.
துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) யசோதாமணி, மாவட்ட குழந்தைகள் நல மருத்துவர் ரெஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் நடுவீதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி காமாட்சி (வயது 60).
இன்று புரட்டாசி சனிக்கிழமை என்பதால், காமாட்சி அந்த பகுதியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்றார். அங்கு தரிசனம் முடித்துவிட்டு அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது 2 வாலிபர்கள் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் திடீரென காமாட்சி மீது பாய்ந்து அவரது கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்க சங்கிலியை பறித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காமாட்சி, திருடன்...திருடன்... என கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் அந்த வாலிபர்கள் மின்னல் வேகத்தில் மறைந்து விட்டனர். இதுகுறித்து பள்ளத்தூர் போலீசில் காமாட்சி புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






