என் மலர்
செய்திகள்

திருப்புவனம் மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
திருப்புவனம் மெயின் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
திருப்புவனம்:
திருப்புவனம்-மதுரை மெயின் ரோட்டில் காலை, மாலை நேரங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. 10 நிமிடங்களுக்கு ஒரு முறை வெளியூர் மற்றும் நகர் பேருந்துகள் சென்று வருகின்றன. ரோட்டின் இருபுறங்களிலும் ஆக்கிர மிப்புகள் அதிகமாக உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு விபத்துக் குள்ளாகும் வாய்ப்புகள் உள்ளது.
இந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினரும், காவல்துறையினரும் இணைந்து அகற்ற வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story






