என் மலர்

  செய்திகள்

  தேவகோட்டையில் பைனான்சியர் வீட்டில் 12 பவுன் நகை-வெள்ளி கொள்ளை
  X

  தேவகோட்டையில் பைனான்சியர் வீட்டில் 12 பவுன் நகை-வெள்ளி கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேவகோட்டையில் பைனான்சியர் வீட்டில் 12 பவுன் நகை, வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
  சிவகங்கை:

  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் உள்ள காந்தி ரோட்டை சேர்ந்தவர் அண்ணாமலை. பைனான்சியரான இவர், சம்பவத்தன்று திண்டுக்கல்லில் வசிக்கும் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார்.

  இதை பயன்படுத்தி கொண்ட மர்ம ஆசாமிகள் நள்ளிரவு நேரத்தில் பின்புற வழியாக வீட்டிற்குள் புகுந்தனர்.

  பின்னர் அங்கிருந்த பீரோவை திறந்து 12 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், லேப்-டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

  நேற்று வீடு திரும்பிய அண்ணாமலை, நகை-வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

  இதுகுறித்து அவர் தேவகோட்டை நகர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முகமது கரிக்குல அமீர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.

  தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டது.

  Next Story
  ×