என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பத்தூர் அருகே இளம்பெண் வெட்டிக்கொலை
    X

    திருப்பத்தூர் அருகே இளம்பெண் வெட்டிக்கொலை

    திருப்பத்தூர் அருகே முன்விரோத தகராறில் இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கீழச்செவல்பட்டி அருகே உள்ள கே.ஆத்தக்குடியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது48), விவசாயி. அதே ஊரைச் சேர்ந்தவர் மணிமுத்து (50).

    இவர்கள் இருவருக்கும் பொதுப்பாதை தொடர்பாக தகராறு இருந்து வந்தது. நேற்று சுப்பிரமணியன் அந்த வழியே வந்தபோது, மணிமுத்து அமைத்திருந்த வேலியை இடித்து விட்டாராம்.

    இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த நிலையில் சுப்பிரமணியன் மனைவி விஜயா (38) தகராறை தடுக்க முயன்றுள்ளார்.

    அப்போது மணிமுத்து, அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் விஜயா பலத்த காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே விஜயா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கீழச்செவல்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ரவி விசாரணை நடத்தி, மணிமுத்து, அவரது மனைவி செல்வி, தாய் அழகி, மகன் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்.

    இதற்கிடையில் தகராறில் காயம் அடைந்ததாக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் மணிமுத்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    Next Story
    ×