search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிங்கம்புணரி தனி தாலுகாவாக அறிவிப்பு: அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
    X

    சிங்கம்புணரி தனி தாலுகாவாக அறிவிப்பு: அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை தனி தாலுகாவாக அறிவித்ததை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    சிங்கம்புணரி:

    திருப்பத்தூர் தாலுகாவை பிரித்து சிங்கம்புணரியை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் சிங்கம் புணரி மற்றும் எஸ்.புதூர் ஒன்றியங்களை இணைத்து சிங்கம்புணரியை தனி தாலுகாவாக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு செய்தார்.

    இதனைத் தொடர்ந்து நகர செயலாளர் ராஜசேகரன் தலைமையில் பஸ் நிலையம் முன்பு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி அ.தி.மு.க.வினர் கொண்டாடினர்.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் லட்சுமிபிரியா ஜெயந்தன், பேரூராட்சி கவுன்சிலர்கள் குணசேகரன், சதீஷ்குமார், ராஜா, செல்லையா, பாலாஜி, நித்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×