என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொளத்தூர் அருகே வெறி நாய் கடித்து பள்ளி மாணவர்கள் காயம்
- மேட்டூர், கொளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் அதிக அள வில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகிறது.
- இவை பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சத்யா நகரில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்து வரும் அஞ்சலி, பிரவீன், தமிழ்ச்செல்வன், பிரவீனா ஆகிய 4 பேரையும், நேற்று மாலை அந்த பகுதியில் சுற்றித் திரிந்த வெறிநாய் கடித்தது. இதனை தொடர்ந்து, அவர்கள் சத்யா நகரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி பெற்று, மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பி உள்ளனர்.
மேட்டூர், கொளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் அதிக அள வில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகிறது. இவை பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. உள்ளாட்சி அமைப்புகள் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






