என் மலர்
ராணிப்பேட்டை
ராணிபேட்டை மாவட்ட பேரூராட்சி வார்டுகளில் திமுக அதிமுக பெற்ற வெற்றி நிலவரங்கள்.
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. இதில் தி.மு.க.15, அ.தி.மு.க.5, காங்கிரஸ்1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அம்மூர் பேரூராட்சி 15 வார்டுகளில் தி.மு.க.6, அ.தி.மு.க.6, பா.ம.க.2, சுயேட்சை1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
திமிரியில் 15 வார்டுகளில் தி.மு.க.9, அ.தி.மு.க.2, வி.சி.க.1, சுயேட்சை 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
தக்கோலம் 15 வார்டுகளில் தி.மு.க.7, அ.தி.மு.க.6, பா.ம.க.1, சுயேட்சை 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
விளாப்பாக்கம் 15 வார்டுகளில் தி.மு.க.7, அ.தி.மு.க.3, சுயேட்சை 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
கலவை 15 வார்டுகளில் தி.மு.க.7, அ.தி.மு.க. 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நெமிலி 15 வார்டுகளில் தி.மு.க.5, அ.தி.மு.க. 6, சுயேட்சை3, பா.ம.க.1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அம்மூர் பேரூராட்சி 15 வார்டுகளில் தி.மு.க. 6, அ.தி.மு.க. 6, பா.ம.க. 2, சுயேட்சை1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. இதில் தி.மு.க.15, அ.தி.மு.க.5, காங்கிரஸ்1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அம்மூர் பேரூராட்சி 15 வார்டுகளில் தி.மு.க. 6, அ.தி.மு.க. 6, பா.ம.க. 2, சுயேட்சை1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
திமிரியில் 15 வார்டுகளில் தி.மு.க. 9, அ.தி.மு.க. 2, வி.சி.க. 1, சுயேட்சை 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
தக்கோலம் 15 வார்டுகளில் தி.மு.க. 7, அ.தி.மு.க. 6, பா.ம.க. 1, சுயேட்சை 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
விளாப்பாக்கம் 15 வார்டுகளில் தி.மு.க. 7, அ.தி.மு.க. 3, சுயேட்சை 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
கலவை 15 வார்டுகளில் தி.மு.க. 7, அ.தி.மு.க. 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
நெமிலி 15 வார்டுகளில் தி.மு.க. 5, அ.தி.மு.க. 6, சுயேட்சை 3, பா.ம.க. 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டு குலுக்கல் முறையில் திமுக வேட்பாளர் உமா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் உமா அதிமுகவின் வேட்பாளர் ரத்னா இவர்கள் இருவரும் 251 வாக்குகள் பெற்று சரிசமமாக இருந்தனர் அதனால் அதிமுக திமுகவினரிடையே சலசலப்பு ஏற்பட்டது இதனால் ஒரு மனி நேரத்துக்கு மேலாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது .
இந்நிலையில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டு குலுக்கல் முறையில் திமுக வேட்பாளர் உமா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பதிவான வாக்குகள், வாலாஜா அரசு மகளிர் கல்லூரியிலும், தென்கடப்பந்தாங்கலில் உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியிலும் நாளை எண்ணப்பட உள்ளன.
வாக்கு எண்ணும் பணியில் உள்ள அலுவலர்கள் நாளை காலை 7 மணிக்குள்ளாக அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மையங்களுக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் அரசு கொரோனா விதிமுறைகளை பின் பற்ற வேண்டும், முககவசம் அணிந்து வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எண்ணும் இடத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலர்களை தவிர செல்போன்களை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது என தெரி விக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையங்களில் குடிநீர், கழிப்பறை, தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களுக்கு வருவோர்களுக்கு தங்களுக்கான அனுமதி சீட்டை உடன் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அனுமதி சீட்டு இல்லாதவர்கள் எக்காரணத்தை கொண்டும் உள்ளே அனுமதிக்க முடியாது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருமால்பூரில் ரெயில் தண்டவாளத்தில் எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடந்தது அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த திருமால்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள யார்டுக்கு செல்லும் தண்ட வாளத்தில் இன்று காலை ஆண் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியாக சென்றவர்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பிணமாக கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கும். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. உடல் முழுவதும் எரிந்த நிலையில் காணப்படுவதால் அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மர்ம நபர்கள் யாரேனும் அவரை கடத்தி வந்து எரித்து கொலை செய்து உடலை வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையுண்டவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து அரக்கோணம், திருமால்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாயமானவர்களின் விவரத்தை சேகரித்து வருகிறார்கள்.
கொலையுண்டவரின் விவரம் தெரிந்த பின்னரே அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும். ரெயில்வே தண்டவாளத்தில் எரிந்த நிலையில் ஆண் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெமிலி அருகே கொல்லாபுரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த படியம்பாக்கம் கிராமத்தில் உள்ள பழமையான கொள்ளாபுரி அம்மன் கோயில் புணரமைக்கப்பட்டு இன்று காலை 1008 சீர்வரிசைப் பொருட்களுடன் குதிரைவாகனத்தில் செண்டை மேளங்கள் முழங்க கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.
விழாவினையொட்டி முதல்நாள் 18&ந்தேதி வெள்ளிக்கிழமை காலை மங்கள இசையுடன் கோ பூஜை, அநுக்ய விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை தொடங்கி கணபதி, நவகிரக வேள்வி, சங்கல்பம், வருணபூஜை, எந்திரஸ்தாபனம் விக்ரகபிரதிஷ்டை அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் ஆகியவைநடந்தது மறுநாள் சனிக்கிழமை இரண்டாம் கால யாகம், துர்காஅஷ்ட, நட்சத்திரவேள்விகள்.
வேதபாராயணங்கள், மூன்றாம் கால யாகம், சுமங்கலி பூஜை, அஷ்டலஷ்மி வேள்வி ஆகியவற்றுடன் தேவாரம், திருவாசகங்கள் பாடப்பட்டது.
மூன்றாம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நான்காம் காலயாகம், காயத்ரி ஜபம் கொள்ளாபுரிஅம்மன் மூலமந்திர வேள்விகள் மற்றும் 108 ஹோம மூலிகை அஷ்டதிரவியாஹுதி ஹோமங்களுடன் யாகசாலை பூஜைகள் நடந்து 1008 சீர்வரிசைப் பொருட்கள், யாகசாலை யிலிருந்து தீர்த்தகலசங்கள் வேதமந்திரங்கள் ஓத புறப்பாடாக கோயிலை வலம வந்து மூலவர் கொள்ளாபுரி அம்மனுக்கு மற்றும் விமானத்திற்கும் கலச தீர்த்தம் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்த்து.
அதனைத்தொடர்ந்து விசேஷ தீபாராதனைகள் நடந்து அன்னதானம், வழங்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு நடத்தினார்.
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, சோளிங்கர் மற்றும் மேல்விஷாரம் ஆகிய 5 நகராட்சிகளில் பதிவாகும் வாக்குகளை வாக்கு எண்ணும் மையமான வாலாஜா அறிஞர் அண்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எண்ணப்படுகிறது.
அரக்கோணம் நகராட்சியில் பதிவான வாக்குகள் அரக்கோணம் கிருஷ்ணா கல்லூரியில் எண்ணப்படுகிறது.
அங்கு பதிவான வாக்குகளை பாதுகாப்பு அறையில் வைத்திருப்பதை தேர்தல் பார்வையாளர் வளர்மதி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் பார்வையிட்டனர்.
இதனைதொடர்ந்து ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் தக்கோலம், பனப்பாக்கம், நெமிலி, காவேரிப்பாக்கம், அம்மூர், விளாப்பாக்கம், திமிரி, கலவை ஆகிய 8 பேரூராட்சிகளில் பதிவான வாக்குகளை மின்னனு வாக்கு எந்திரத்தை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதனை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுக்காப்பு அறையை பூட்டி சீல் வைத்து துப்பாக்கி ஏந்திய போலீஸ்£ர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நெமிலி அருகே தேர்தல் பணி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த அரசு ஊழியர் பைக்கில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சிறுவளையம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 48) இவர் மேலபுலம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆவண காப்பாளராக பணிப்புரிந்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். தமிழகத்தில் நேற்று நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் பணிக்காக சோளிங்கர் நகராட்சி இசையனூர் பகுதிக்கு சென்றிருந்தார்.
பின்னர் தனது பணியை முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைத்தடுமாறி கால்வாயில் விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சோளிங்கர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் சுரேஷ் உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துமனைக்கு அனுப்பு வைத்தனர். மேலம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 நகராட்சியில் 69.10 சதவீதமும், 8 பேரூராட்சியில் 82.13 சதவீதம் என மொத்தம் 72.24 சதவீத ஓட்டு பதிவாகியுள்ளது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளில் 69.10 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இதேபோல் மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளில் 82.13சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது.
மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் பதிவான ஓட்டுகளில் விபரம்; அரக்கோணம் நகராட்சியில் மொத்த வாக்காளர்கள் 67 ஆயிரத்து 893 பேரில் 42 ஆயிரத்து 229பேர் வாக்களித்துள்ளனர். இங்கு 62.20 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
ஆற்காடு நகராட்சியில் மொத்த வாக்காளர்கள் 42ஆயிரத்து 249 பேரில் 32ஆயிரத்து 984 பேர் வாக்களித்துள்ளனர்.இங்கு 72.89 சதவீத வாக்குகள் பதிவாகின. மேல்விஷாரம் நகராட்சியில் மொத்த 40ஆயிரத்து 525பேரில் 26ஆயிரத்து 322பேர் வாக்களித்துள்ளனர்.
இங்கு 64.95 சதவீதம் வாக்குகள் பதிவாகின. ராணிப்பேட்டை நகராட்சியில் மொத்தம் 42ஆயிரத்து 707 பேரில் 31ஆயிரத்து 342பேர் வாக்களித்துள்ளனர். இங்கு 73.39 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
சோளிங்கர் நகராட்சியில் மொத்தம் 29ஆயிரத்து 842பேரில் 21ஆயிரத்து 406 பேர் வாக்களித்துள்ளனர். இங்கு 71.73 சதவீதம் வாக்குகள் பதிவாகின. வாலாஜாபேட்டை நகராட்சியில் மொத்தம் 27ஆயிரத்து 241பேரில் 20ஆயிரத்து 858 பேர் வாக்களித்துள்ளனர்.இங்கு 76.57 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
6 நகராட்சியில் மொத்தம் 2லட்சத்து 53ஆயிரத்து 457 வாக்காளர்களில் 1லட்சத்து 75ஆயிரத்து 141பேர் வாக்களித்துள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 69.10 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன.
இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் விவரம்: அம்மூர் பேரூராட்சியில் மொத்தம் 10ஆயிரத்து 991 பேரில் 9ஆயிரத்து 223பேர் வாக்களித்துள்ளனர். இங்கு 83.91 சதவீதம் வாக்குகள் பதிவாகின.கலவை பேரூராட்சியில் மொத்தம் 7ஆயிரத்து 867 பேரில் 6ஆயிரத்து 470 பேர் வாக்களித்துள்ளனர்.
இங்கு 82.24சதவீதம் வாக்குகள் பதிவாகின. காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் மொத்தம் 12ஆயிரத்து 505 பேரில் 9ஆயிரத்து 899 பேர் வாக்களித்துள்ளனர். இங்கு 79.16 சதவீதம் வாக்குகள் பதிவாகின.நெமிலி பேரூராட்சியில் மொத்தம் 9ஆயிரத்து 526பேரில் 7ஆயிரத்து 777பேர் வாக்களித்துள்ளனர். இங்கு 81.64 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
பனப்பாக்கம் பேரூராட்சியில் மொத்தம் 10ஆயிரத்து 247 பேரில் 8ஆயிரத்து 243பேர் வாக்களித்துள்ளனர். இங்கு 80.44 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தக்கோலம் பேரூராட்சியில் மொத்தம் 9ஆயிரத்து 637பேரில் 7ஆயிரத்து 914 பேர் வாக்களித்துள்ளனர். இங்கு 82.12 சதவீதம் வாக்குகள் பதிவாகின.திமிரி பேரூராட்சியில் மொத்தம் 13ஆயிரத்து 73 பேரில் 10ஆயிரத்து 863 பேர் வாக்களித்துள்ளனர். இங்கு 83.09 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
விளாப்பாக்கம் பேரூராட்சியில் மொத்தம் 6ஆயிரத்து 742 பேரில் 5ஆயிரத்து 795 பேர் வாக்களித்துள்ளனர். இங்கு 85.95சதவீதம் வாக்குகள் பதிவாகின. மாவட்டத்தில் 8பேரூராட்சிகளில் மொத்தம் 80ஆயிரத்து 588 வாக்காளர்களில் 66ஆயிரத்து 184 வாக்காளர்கள் ஓட்டு போட்டுள்ளனர். 8 பேரூராட்சிகளில் மொத்தம் 82.13 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6நகராட்சிகள் மற்றும் 8பேரூராட்சிகளில் மொத்தம் 3லட்சத்து 34ஆயிரத்து 45வாக்காளர்களில் 2லட்சத்து 41ஆயிரத்து 325 பேர் வாக்களித்துள்ளனர். மொத்தம் 72.24 சதவீதம் மாவட்டத்தில் வாக்குகள் பதிவாகின.
அரக்கோ£ணம் மின்சார ரெயிலில் வந்த வாலிபர் சாவு யார் அவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
சென்னை சென்ட்ரலில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு மின்சார ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தது.
அப்போது ரெயில் பெட்டியில் இருந்து பயணிகள் இறங்கிய போது இருக்கையில் சாய்ந்த நிலையே நீண்ட நேரமாக இருந்த சுமார் 35 மதிக்கத்தக்க வாலிபர் குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் வாலிபரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வாலிபர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்த வாலிபர் மஞ்சள், வெள்ளை நிற கோடு போட்ட அரை கை பனியன் மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்துள்ளார்.
மேலும், வலது மற்றும் இடது கைகளில் ஜெ பி என்றும் சிலுவையும் பச்சை குத்தியுள்ளார். இறந்த வாலிபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று அரக்கோணம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை வாக்குச்சாவடி மையங்களில் 961 போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, வாலாஜா, விஷாரம், ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய 6 நகராட்சிகள், அம்மூர், காவேரிப்பாக்கம், கலவை, திமிரி, விளாப்பாக்கம், தக்கோலம், பனப்பாக்கம், நெமிலி ஆகிய 8 பேரூராட்சிகள் மொத்தமாக உள்ள 288 பதவியிடங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவு இன்று நடைபெறுகிறது.
288 பதவிடங்களில் 4 பேர் போட்டியின்றி தேர்வான நிலையில், மீதமுள்ள 284 பதவியிடங்களுக்கு சுயேட்சைகள் உட்பட அனைத்து கட்சியின் சார்பில் 1071 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 3,31,284 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
வாக்காளர்கள் வாக்களிக்க மாவட்டம் முழுவதும் 411 வாக்கு பதிவு மையங்களும், 496 எந்திரங்களும் தயார் செய்யப்பட்டுள்ளன.வாக்கு பதிவு மையங்களில் பணிபுரிய ஆசிரியர்கள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் 1823 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்பு பணிகளுக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் உத்தரவின் பேரில் 961 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.23 மிகப்பதட்டமான வாக்குசாவடி மையங்களும், 58 பதட்டமான வாக்குசாவடி மையங்களும் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்குப்பதிவையொட்டி 961 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், சோளிங்கர், வாலாஜாப் பேட்டை, ராணிப்பேட்டை, ஆற்காடு, மேல்விஷாரம் ஆகிய 6 நகராட்சிகள் மற்றும் நெமிலி, பனப்பாக்கம், தக்கோலம், காவேரிப்பாக்கம், அம்மூர், கலவை, விளாப்பாக்கம், திமிரி உள்ளிட்ட 8 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 288 பதிவுகளுக்கு மொத்தம் 1,067 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 411 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 3 லட்சத்து 31 ஆயிரத்து 284 பேர் வாக்களிக்க உள்ளனர்.
தேர்தலையொட்டி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அதிமுக, தமாகா, பாமக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் நிர்வாகிகள் பிரசாரம் மேற்கொண்டனர். இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.
வாக்குப்பதிவு நாளை (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான பாஸ்கர பாண்டியன் உத்தரவின்பேரில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
வாக்குசாவடி மையங்களில் முகப்பில் பந்தல் அமைத்தல், விளக்குகள் பொருத்துதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறு வதால் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிப் பதற்காக மாவட்டம் முழுவதும் 961 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.






