என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அரக்கோ£ணம் மின்சார ரெயிலில் வந்த வாலிபர் சாவு

    அரக்கோ£ணம் மின்சார ரெயிலில் வந்த வாலிபர் சாவு யார் அவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரக்கோணம்:

    சென்னை சென்ட்ரலில் இருந்து  நேற்று முன்தினம் நள்ளிரவு மின்சார ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. 

    அப்போது ரெயில் பெட்டியில் இருந்து பயணிகள் இறங்கிய போது இருக்கையில் சாய்ந்த நிலையே நீண்ட நேரமாக இருந்த சுமார் 35  மதிக்கத்தக்க வாலிபர் குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

    சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் வாலிபரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வாலிபர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்த வாலிபர் மஞ்சள், வெள்ளை நிற கோடு போட்ட அரை கை பனியன் மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்துள்ளார். 

    மேலும், வலது மற்றும் இடது கைகளில் ஜெ பி  என்றும் சிலுவையும் பச்சை குத்தியுள்ளார். இறந்த வாலிபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று அரக்கோணம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×