என் மலர்
ராணிப்பேட்டை
வாலாஜா அருகே மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த வி.சி. மோட்டூர் புதுத்தெருவை சேர்ந்தவர் பாட்ஷா (வயது 35) , மெக்கானிக் .
இவருக்கு தொழில் ரீதியாக ஏற்பட்ட கடன் பிரச்சினையால் மன உளைச்சலில் இருந்தார் . இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டார் .
இதுகுறித்து தகவலறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பா¤சோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
ஆற்காடு அருகே பரோட்டா மாஸ்டர் இறப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு
-
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த கீழ்வி ஷாரம் ராசாத்திபுரம் பகு தியை சேர்ந்தவர் மோகன் ( வயது 22 ) .
இவர் அதே பகுதி யில் உள்ள ஒரு ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார் .
மோகன் வீட்டிலுள்ள மாடிப்படியில் ஏறும்போது தலை சுற்றி கீழே விழுந்தார்.
இதில் ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பா¤சோதனை செய்ததில் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டது தொ¤யவந்தது.
இது குறித்த புகா£¤ன் போ¤ல் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த வாங்கூர் வரதராஜபுரம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் யுவராஜ் ( வயது 24 ). இவர் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.
இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது நிலத்திற்கு பயன்ப டுத்தும் பூச்சி மருந்தை குடித்து மயங்கினார்.
அவரை உறவினர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டார்.
இது குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
விவசாயிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இயற்கை உரங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என கலெக்டர் பேசினார்.
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாவட்ட விவசாயிகள் உடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.
கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் தலைமை தாங்கி, வேளாண்மை துறை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியை பார்வையிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
விவசாயிகள் அனைவரும் செயற்கை உரங்களை அதிகமாக பயன்படுத்துவதை குறைத்து இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும். செயற்கை உரங்களை அதிகமாக பயன்படுத்துவதன் காரணமாக நம்மில் பலர் ஆரோக்கியத்தை இழக்கிறோம்.
ஆகவே அவசியம் இருந்தால் மட்டும் செயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும்.18 வயது பூர்த்தி அடைந்த ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு 58 கிராம் புரோட்டின் உடல் வளர்ச்சிக்கு அவசியம். ஆனால் நம் நாட்டில் அதிகமான புரோட்டின் உணவு பொருட்கள் பற்றாக் குறையின் காரணமாக அண்டை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறோம்.
நாம் புரோட்டின் உணவுப் பயிர்களை அதிகம் விளைவிப்பதில்லை. இறக்குமதி காரணமாக நம் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கிறது. அதனை அனைத்து விவசாயிகளும் தெரிந்து கொள்ள வேண்டும். புரோட்டின் உணவு பெயர்களை நாம் ஊடுபயிராகவும் தோட்டங்களில் விளைவிக்கலாம்.
நாம் அனைவரும் உணவில் கார்போஹைட்ரேட் உணவினை குறைவாகவும், புரோட்டீன் உணவுகளை அதிகமாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.ஆனால் நவீன உணவு பழக்க வழக்கத்தில் தவறாக உணவு வகைகளை உண்டு வாழ்ந்து வருகிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் சாகுபடி பருவத்தில் வேளாண்மைத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை மற்றும் மீன் வளர்ச்சித் துறை ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து அத்துறைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் விரிவாக்கப் பணியாளர்கள் ஆராய்ச்சியாளர்கள் கருத்து பரிமாற்றம் கூட்டம் நடத்தப்படுகிறது.
கிராம அளவில் தொழில் நுட்பங்களை கடைப் பிடிப்பதில் முன்னோடியாக இருக்கக் கூடிய விவசாயி ஒருவர் மூலமாக அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு செயல்முறைகளை விளக்குவதற்காக பண்ணை பள்ளிகள் நடத்தப்படுகின்றன. பயிர் வளர்ச்சிக்கு ஏற்ப 6 பண்ணைப் பள்ளி வகுப்புகள் வேளாண் விஞ்ஞானிகளைக் கொண்டு நடத்தப்படுகிறது. இதில் 25 விவசாயிகள் பங்கு பெறுவார்கள்.
நவீன தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு கற்றுக் கொடுப் பதோடு மட்டுமல்லாமல் அதை விவசாயிகள் தங்கள் வயலில் செயல்படுத்தி அனுபவம் பெறுவதோடு கிராமத்தில் உள்ள மற்ற விவசாயிகள் தெரிந்து கொண்டு பின்பற்றி ஏதுவாக செயல் விளக்கங்கள் அமைக்கப்படுகிறது.
மேலும் வெற்றியடைந்த தொழில் நுட்பங்களை பார்வையிட விவசாயிகள் கண்டனர் சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் வேலாயுதம், துணை இயக்குனர்கள் விஸ்வநாதன், ஆல்பர்ட் ராபின்சன், சீனி ராஜ், லதா மகேஷ், ஒன்றிய குழு தலைவர்கள் புவனேஸ்வரி சத்தியநாதன், அனிதா குப்புசாமி, விரிஞ்சிபுரம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர்கள் ஜெயராம சௌந்தரி, சசிகுமார், பரமசிவம் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
வாலாஜாவில் நெசவு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வாலாஜா:
வாலாஜா அணைக்கட்டு ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 48). இவர் நெசவு தொழில் செய்து வந்தார்.
இவரது மனைவி கல்பனா. தம்பதியினருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக நெசவுத் தொழில் சரியாக நடக்கவில்லை.
இதனால் குடும்பம் நடத்த முடியாத சூழ்நிலையில் நாகராஜ் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று புடவை நெய்து கொண்டிருந்த அவர் அங்கிருந்து வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த கல்பனா மாடியில் உள்ள அறைக்கு சென்று பார்த்தார். அப்போது நாகராஜ் மின்விசிறியில் தூக்குப்போட்டு மயங்கி நிலையில் கிடந்தார்.
இதனை கண்டு கல்பனா அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.
அக்கம் பக்கத்தினர் நாகராஜை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிப்காட்டில் தானியார் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை:
ராணிப் பேட்டையை அடுத்த சிப்காட் பேஸ்-1 பகுதியில் தனியார் ஷீ தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இந்த தொழிற்சாலையில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கான யூனியன் அமைப்பதற்கான பணிகளை ஒரு சில தொழிலாளிகள் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிற்சாலை நிர்வாகம் தொழிற்சாலை உள்ளே யூனியன் அமைக்க கூடாது என பலமுறை அறிவுறுத்தியும் யூனியன் அமைக்க முயன்ற 4 தொழிலாளிகளை பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் யூனியன் அமைக்க முயன்ற 4 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்த தொழிற் சாலையை கண்டித்தும் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு உடனடியாக பணி திரும்ப வழங்க வேண்டும் என கோரி தொழிற்சாலை முன்பு 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சிப்காட் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளிகளிடம் தொழிற்சாலை நிர்வாகத் திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை சிப்காட் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் அருகே உள்ள மேட்டுத்தெங்கல் கிராமம் அரசமர தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன்.
இவரது மகன் ஜெயப்பிரகாஷ் (வயது 25) இவர் திருவலம் அருகே உள்ள சேவூர் தபால் அலுவலகத்தில் ஊழியராக கடந்த 2 மாதமாக பணிபுரிந்து வந்தார்.
இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை பெற்றும் உடல்நிலை சரியாகாததால் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த அவர் வீட்டில் ஒரு அறையில் உள்ள பேனில் தூக்குப்போட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.
அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் ஜெயபிரகாஷை மீட்டு ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து பாலமுருகன் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சேவியர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை எஸ்.பி. அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று பெண் ஒருவர் தனது மகளுடன் வந்தார்.
அப்போது திடீரென்று அவர் கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனை திறக்க முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக பெண்ணிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர்.
இதனைதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ராணிப்பேட்டை புதிய அக்ராவரம் பகுதியைச் சேர்ந்த சரிதா (வயது 27) என்பதும் சொத்து பிரச்சினை காரணமாக புகார் அளிக்க வந்ததாக தெரிவித்தார். அப்போது போலீசாரிடம் அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது தந்தையின் பூர்வீக சொத்தான எனக்கு பாத்தியப்பட்ட 3 ஏக்கர் 40 சென்ட் இடம் உள்ளது.
அந்த இடத்தை விற்று தருவதாக எனது அக்கா கூறினார். இதையடுத்து தனது சொத்தை எனது அக்கா பெயருக்கு மாற்றி பத்திரம் எழுதி தந்தேன். அந்த இடத்தை ரூ.28 லட்சத்திற்கு விற்றனர். பின்னர் எனது அக்கா எங்களுக்கு பணத்தை தரவில்லை.
இதுதொடர்பாக ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த போது 20 நாட்களுக்குள் பணத்தை தருவதாக எழுதிக்கொடுத்தார். அதன்பிறகும் பணம் தரவில்லை. பணத்தை கேட்டால் எங்களை மிரட்டுகிறார்.
இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளேன். எனவே விற்பனை செய்த இடத்திற்கான பணத்தை பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து நகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் நகராட்சியில் இந்த தேர்தலில் தி.மு.க 24 வார்டிலும், அதன் கூட்டணியான காங்கிரஸ் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது. இதுதவிர அ, தி.மு.க 8 வார்டிலும், அ.ம.மு.க 1 வார்டிலும், சுயேச்சைகள் 2வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம் அரக்கோணம் நகராட்சியில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு எதிர்க் கட்சிகள் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல் ஆற்காடு நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் 18 வார்டுகளை தி.மு.க பிடித்துள்ளது. ராணிப்பேட்டை நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் 23 வார்டுகளை தி.மு.க தக்கவைத்துள்ளது.
வாலாஜா நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் 15 இடங்களிலும், மேல்விஷாரம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் 15 இடங்களிலும், சோளிங்கர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் 15 இடங்களை தி.மு.க கைப்பற்றியுள்ளது.
இதே நிலைதான் திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களிலும் உள்ளது இங்குள்ள குடியாத்தம் பேரணாம்பட்டு, ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் என அனைத்து நகராட்சிகளிலும் தி.மு.க அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.
அதன்படி 3 மாவட்டங்களிலும் உள்ள 12 நகராட்சிகளிலும் தனி மெஜாரிட்டியுடன் தி.மு.க வெற்றி பெற்றுள்ளதால் தலைவர், துணை தலைவர் பதவிகளுக்காக கவுன்சிலர்கள் கடத்தல், குதிரை பேரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா மார்ச் 2-ந் தேதி நடக்கிறது.
மார்ச் 4-ந்தேதி மறைமுக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் கவுன்சிலர்கள் ஒன்றுசேர்ந்து நகராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிகளை தேர்ந்தெடுக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சோளிங்கரில் 9 வார்டுகளை தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
சோளிங்கர்:
1-வது வார்டு பழனி (திமுக) 2-வது வார்டு லட்சுமி சரஸ்வதி (திமுக) 3-வது வார்டு வேண்டா (திமுக) 4-வது வார்டு அன்பரசி (திமுக) 5-வது வார்டு ஆஞ்சநேயன்(சுயேட்சை) 6-வது வார்டு சுரேஷ்(அமமுக) 7-வது வார்டு மோகனா (திமுக) 8-வது வார்டு கோபால்(காங்கிரஸ்) 9-வது மணிகண்டன் (அதிமுக) 10-வது வார்டு சிவானந்தம் (திமுக), 11-வது வார்டு மஞ்சுளா ஜானகிராமன் (காங்கிரஸ்) 12-வது வார்டு விஜயலட்சுமி (திமுக) 13-வது வார்டு தமிழ்செல்வி(திமுக) 14-வது வார்டு அசோகன்(திமுக) 15-வது வார்டு கணேசன்(காங்கிரஸ்) 16-வது வார்டு சாரதி (பாமக)
வாலாஜா நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது
வாலாஜா:
வாலாஜா நகராட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் 1வது வார்டு சா¤தா மகேந்திரன்(திமுக) 2வது வார்டு தியாகராஜன்(திமுக) 3வது வார்டு மோகன்(சுயேட்சை) 4வது வார்டு பிருந்தா சிலம்பரசன்(திமுக) 5வது வார்டு கமல்ராகவன்(திமுக) 6வது வார்டு செங்கையாபாபு (திமுக) 7வது வார்டு கனிமொழி கஜேந்திரன்(அதிமுக) 8வது வார்டு இர்பான்(திமுக) 9வது வார்டு தீபா சசிகுமார் (திமுக) 10வது வார்டு சுமதி பாபு(அதிமுக) 11வது வார்டு ஹா¤னி தில்லை(திமுக) 12வது வார்டு பா¤தா(திமுக) 13வது வார்டு செ.நந்தகுமார் (அதிமுக) 14வது வார்டு சுரேஷ் (அதிமுக) 15-வது வார்டு செந்தில்(திமுக) 16-வது வார்டு லதா ஜெய்சங்கர்(திமுக) 17-வது வார்டு முரளி (அதிமுக) 18-வது வார்டு சீனிவாசன் (பாஜக) 19-வது வார்டு பூர்ணிமா தியாகு (பாமக) 20-வது வார்டு லலிதா ஜெகதீசன் (பாமக) 21-வது வார்டு ஸ்ரீதரன்(அதிமுக) 22-வது வார்டு ரவிசந்திரன்(திமுக) 23-வது கவிதா சரவணன் (திமுக) 24-வது வார்டு நிக்கத் பேகம் (திமுக)
காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் குலுக்கல் முறையில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார்.
நெமிலி
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் 6&வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் உமா அதிமுகவின் வேட்பாளர் ரத்னா இவர்கள் இருவரும் 251 வாக்குகள் பெற்று சரிசமமாக இருந்தனர் அதனால் அதிமுக திமுகவினரிடையே சலசலப்பு ஏற்பட்டது.
இதனால் ஒரு மனி நேரத்துக்கு மேலாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது .
இந்நிலையில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டு குலுக்கல் முறையில் திமுக வேட்பாளர் உமா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.






