என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வாலாஜாவில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
வாலாஜா அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த வாங்கூர் வரதராஜபுரம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் யுவராஜ் ( வயது 24 ). இவர் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.
இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது நிலத்திற்கு பயன்ப டுத்தும் பூச்சி மருந்தை குடித்து மயங்கினார்.
அவரை உறவினர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டார்.
இது குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
Next Story






