என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    நெமிலி அருகே ஆர்வமுடன் மாணவர்கள் திறனாய்வு தேர்வு எழுதினர்.

    நெமிலி:

    அரக்கோணம், ராணிப்பேட்டை என 2 கல்வி மாவட்டங்கள் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 9&ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நேற்று ஊரக திறனாய்வு தேர்வு நடைபெற்றது.

    சோளிங்கர், அரக்கோணம், நெமிலி, பனப்பாக்கம், காவேரிப் பாக்கம், பாணாவரம், கலவை, ஆற்காடு, வாலாஜா, ராணிப்பேட்டை உள்ளிட்ட தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

    இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களை ஒரு மாவட்டத்திற்கு தலா 50 மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    மேலும் சான்றிதழும் அளிக்கப்படும்.மொத்தம் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் ஊரக திறனாய்வு தேர்வை எழுதினர்.மாவட்ட கல்வி அதிகாரிகள் அங்குலட்சுமி, சுப்பராயன் தலைமையில் கண்காணிப்பாளர்கள் அனைத்து தேர்வு மையங்களிலும் பார்வையிட்டனர்.
    நெமிலி அருகே நாய்கள் கடித்து மான் பரிதாபமாக இறந்தது.
    அரக்கோணம்:

    நெமிலி அடுத்த கரியாகுடல் மதுரா விஜயபுரம் கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார்  என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் நேற்று காலை புள்ளி மான் ஒன்று வழி தவறி வந்தது இதனை கண்ட  தெருவில் இருந்த நாய்கள்  புள்ளிமானை துரத்தி சென்று கடித்ததில் மான் இறந்து விட்டது. 

    இது குறித்து அங்கிருந்தவர்கள் காவல்துறை மற்றும் வனத்துறைக்கு தகவல் தொ¤வித்தனர். 

    அங்கு வந்த வனத்துறையினர் இறந்த மானின் உடலை மீட்டு கால்நடை மருத்துவர் உதவியுடன் உடலை பிரேத பா¤சோதனை செய்து பின்னர், அங்குள்ள இடத்திலேயே புள்ளி மானை தீ வைத்து எ£¤த்தனர்.
    அரக்கோணம் அருகே மினி வேனில் கடத்திய 1250 கிலோ ரேசன் அ£¤சி பறிமுதல் செய்யப்பட்டது.

    அரக்கோணம்:

    வேலூர் மாவட்டத்தில் ரேஷன் அ£¤சி கடத்தலை தடுக்கவும், அந்த செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பி£¤வு போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து வேலூர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பி£¤வு போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார்  மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்நிலையில்  அரக்கோணம்  மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ரேஷன் அ£¤சி அண்டை மாநிலத்திற்கு வாகனங்கள் மூலமாக  கடத்தப்படுவதாக வேலூர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பி£¤வு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

    அதன்படி நேற்று விடியற்காலை அரக்கோணம் அடுத்த கடவா£¤ கண்டிகை பஸ் நிறுத்தம் அருகேயுள்ள பகுதியில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பி£¤வு போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான  தனிப்படை போலீசார்  வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை போலீசார் சோதனை செய்தனர். 

    அதில், 50 கிலோ எடை கொண்ட 25 மூட்டைகள் என மொத்தம் 1250 கிலோ ரேஷன் அ£¤சி இருப்பதும் இதனை ஆந்திராவுக்கு கடத்தி செல்ல முயன்றதும் தொ¤ய வந்தது. 

    போலீசார் ரேஷன் அ£¤சியுடன் வாகனத்தை பறிமுதல் செய்து கட்த்தலில் ஈடுபட்டவரை கைது செய்தனர். 

    மேலும்,  இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என  உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பி£¤வு போலீசார் விசா£¤த்து வருகின்றனர்.
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.
    ராணிப்பேட்டை:

    போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு 1995-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தொடர்ந்து போலியோ சொட்டு மருந்து முகாம்கள் மூலமாக போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. 

    அதன் படி இன்று ஞாயிற்றுக்கிழமை ராணிப்பேட்டை முத்துக்கடையொ 5 வயதுக்குட்பட்ட 1 லட்சத்து 6 ஆயிரத்து 880 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. 

    இந்த முகமானது காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இந்த பணிகளை சிறப்பாக செயல்படுத்த 800 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் ராணிப் பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். 

    சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி  முகாமினை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார். 

    இதனை தொடர்ந்து  இரண்டு 108 ஆம்புலன்ஸ் புதிய வாகனத்தை அமைச்சர் காந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    இந்த  போலியோ சொட்டு மருந்து முகாமானது தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கின்ற சுங்கச் சாவடிகளிலும், அனைத்து பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள மலைப் பகுதிகளிலும் முகாம்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் அண்டை மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து பணி மற்றும் வியாபார நிமித்தமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் வந்து தங்கியுள்ள கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள வர்கள் மேம்பால பணியாளர்கள் சாலை வி£¤வாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் பொம்மை விற்பனையாளர்கள், இலங்கை தமிழர்கள் அடியவர்களுக்கும் சிறப்பு முகாம்கள் மூலமாக போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    நிகழ்ச்சியில் பொது சுகாதாரத் துறை, கல்வித் துறை, சமூக நலத் துறை, வருவாய்த் துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உட்பட 2,795 பணியாளர்களும் 99 மேப்பார்வையாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

    மேலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேவையான சொட்டு மருந்துகளை எடுத்துச் சொல்வதற்காகவும் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் பிற துறை மற்றும் சுகாதாரத் துறை வாகனங்கள் உட்பட 45 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
    நெமிலி அருகே குட்கா விற்ற பெண்னை போலீசார் கைது செய்தனர்.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சேந்தமங்கலத்தில் பெண் ஒருவர் பங்க் கடை நடத்தி வருகிறார். 

    இவர் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நெமிலி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

    இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் உள்ளிட்ட போலீசார் பங்க் கடையில் சோதனை செய்தனர். அப்போது 20 பாக்கெட் இருப்பது தெரியவந்தது. 

    அதனை பறிமுதல் செய்து பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    ராணிப்பேட்டையில் கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தற்கொலை செய்துகொண்டார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை பிஞ்சி ஜெயராம் நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 27) இவர் கடந்த 24-ந் தேதி கட்டிலில் இருந்து  தவறி விழுந்து இறந்துவிட்டார். 

    இதனால் சதீஷ்குமாரின் மனைவி சரண்யா (22) மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில் வீட்டில் நேற்று  யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்து தகவல் அறிந்த ராணிபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சதீஷ்குமார், சரண்யா தம்பதிக்கு 3 வயதிலும் 1 வயதிலும்  2 மகன்கள் உள்ளனர்.

    கணவன் இறந்த 2 நாட்களில் மனைவி தற்கொலை செய்து கொண்டதும் தாய் தந்தையை இழந்து அனாதையாக குழந்தைகள் இருவரும் தவிப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    வாலாஜா அருகே முசிறியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இதனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

    தொடர்ந்து கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பார்வையிட்டு கிராம நிர்வாக அலுவலர் நாள்தோறும் கிராமத்திற்கு வருகின்றாரா?
     
    தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் உறை கிணறு அமைக்கும் திட்டப் பணிகளையும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்ட பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டார். 

    பொதுமக்களின் தேவைகளை முறையாக கேட்டறிந்து தேவையான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும், கிராமத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அதிக அளவு மரங்களை நட வேண்டும், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டுக்கொண்டார்.
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்தாண்டு குடும்பநல அறுவை சிகிச்சை செய்து கொண்ட 6 பேருக்கு உதவித்தொகை கலெக்டர் வழங்கினார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குடும்ப நலத்துறையின் மூலமாக நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொண்ட 6 ஆண்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான சமையல் பொருட்கள் மற்றும் நிதி உதவி ரூ.1000 ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் கடந்த ஆண்டு 21.11.2021 முதல் 31.12.2021 வரை அரசு வேலூர் மருத்துவகல்லூரி மருத்துவமனை அடுக்கம்பாறை, அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்றது.

    இந்த சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட 6 ஆண்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் அன்பளிப்பு தொகை ரூ.1000 ஆகியவற்றை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கிபேசியதாவது: பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு இந்த சிகிச்சை மேற்கொள்வது மிகவும் எளிதானது. எந்தவித பக்க விளைவுகள் கிடையாது. 

    மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை. இந்த அறுவை சிகிச்சையை செய்து கொண்ட ஆண்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். 

    இவ்வாறு பேசினார்.நிகழ்ச்சியில் துணை இயக்குனர்கள் மருத்துவர் மணிமேகலை, மருத்துவர் மணிமாறன், ஆண்கள் குடும்ப நல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கீர்த்தி, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் பழனி மலை, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி நிர்வாகிகள் ரகுநாதன், பரத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    நெமிலி அருகே தொழிலாளியை தாக்கி பணம் பறிப்பு வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    நெமிலி:

    நெமிலி அடுத்த மகேந்திரவாடி கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது38). கூலி வேலை செய்து வருகிறார். 

    இவரது மனைவி ரமணி அரக்கோணத்தில் உள்ள தனியார் டெக்ஸ்டைலில் வேலை செய்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக பாலாஜி தனது பைக்கில் சென்றார்.

    புதிய பஸ் நிலையம் அருகே வந்தபோது  3 பேர் பாலாஜியை வழிமறித்து கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினர். 

    பணம் தர மறுத்ததால் மர்ம நபர்கள் கையில் அணிந்திருந்த இரும்பு காப்பால் பாலாஜியை தாக்கினர். பலத்த காயமடைந்த பாலாஜியின் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.1000-த்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து 3 பேரும் தப்பி ஓடினர். 

    இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசில் பாலாஜி புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் வழிபறியில் ஈடுபட்ட வளர்புரத்தை சேர்ந்த சுபாஷ் (22). என்பவரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரைதேடி வருகின்றனர்.
    பழமையான நெசவு தொழிலை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம், மேலபுலம், திருமால்பூர், நெமிலி, கீழ் வெண்பாக்கம், நாகவேடு, சம்பத்ராயன் பேட்டை, திருப்பாற்கடல், சோளிங்கர் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் விசைத்தறி நெசவுத் தொழில் பிரதானமாக நடைபெற்று வருகிறது.

    இந்த தொழிலை நம்பி சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வருகிறது.சமீப காலமாக நூல் விலை உயர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்ட காரணங்களால் விசைத்தறி நெசவு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

    தனியாரிடம் ஒப்பந்தம் செய்து பாவு எடுத்து காலங்காலமாக நெசவு செய்து வரும் தொழிலாளர்கள் நூல் விலை உயர்வால் சரிவர தாங்கள் நெசவு தொழில் செய்ய தேவையான மூலப்பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பெரும்பாலான நெசவாளர்கள் பாரம்பரிய தொழிலை விட்டுவிட்டு சமையல் வேலை, செக்யூரிட்டி உள்ளிட்ட வேறு வேலைக்கு சென்று வருகின்றனர்.மேலும் பலர் தங்களின் விசைத்தறி உதிரி பாகங்களை உடைத்து எடைக்கு போடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து விசைத்தறி நெசவாளர்கள் கூறியதாவது:-

    எங்களுக்கு இந்த தொழிலை விட்டால் வேறு எதுவும் தெரியாது.நாங்கள் குடும்பத்தோடு சேர்ந்து உழைத்தும் போதுமான அளவில் வருமானம் கிடைக்கவில்லை.கூலி உயர்வு கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டது.

    விசைத்தறி நெசவுத் தொழிலை முதலில் அரசு அங்கீகாரம் செய்ய வேண்டும்.விவசாயிகளுக்கு விதை, உரம், மானியக்கடன் உள்ளிட்ட சலுகைகள் வழங்குவது போல், விசைத்தறி நெசவாளர்களுக்கும் வழங்கவேண்டும்.

    மேலும் தனித்துறை அமைத்து அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.நெசவாளர்களுக்கு கடன் வழங்க தனி வங்கி ஏற்படுத்த வேண்டும்.நூல் உள்ளிட்ட மூலப்பொருட்களை கொடுத்து உதவ வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    வெளிநாட்டில் இருந்து மாணவி பூஜா குணசேகர் வீடியோகால் மூலம் அமைச்சர் காந்தியிடம் பேசினார். அப்போது அவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்து தருவதாக அமைச்சர் காந்தி உறுதி அளித்தார்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் குணசேகர். இவரது மகள் பூஜா குணசேகர் மற்றும் வடகால் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் மகன் சுபாஷ் சந்திரன் ஆகியோர் உக்ரைனில் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படித்து வருகின்றனர்.

    தற்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாணவி பூஜா குணசேகர், மாணவர் சுபாஷ் சந்திரன் ஆகியோர் அங்கு சிக்கி தவித்து வருகிறார்கள்.

    போர் நடைபெற்று வருவதால் உக்ரைனில் உள்ள மாணவ, மாணவிகளை தமிழ்நாட்டிற்கு அழைத்து வரவேண்டும் என்று அமைச்சர் காந்தியிடம் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.

    மாணவி பூஜா குணசேகர், மாணவர் சுபாஷ் சந்திரன்.

    அப்போது வெளிநாட்டில் இருந்து மாணவி பூஜா குணசேகர் வீடியோகால் மூலம் அமைச்சர் காந்தியிடம் பேசினார். அப்போது அவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்து தருவதாக அமைச்சர் காந்தி உறுதி அளித்தார்.

    இதேபோன்று உக்ரைனில் உள்ள தனது மகள் அனிதாவை இந்தியாவிற்கு அழைத்து வர மத்திய மாநில அரசுகள் உதவி புரிய வேண்டுமென வாலாஜா பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கணேசபெருமாள் என்பவரும், ஆற்காடு தோப்புக்கானா பகுதியை சேர்ந்த சூரியநாராயணன் உக்ரைனில் உள்ள தனது மகன் ராஜ் என்பவரையும் இந்தியாவிற்கு அழைத்து வர மத்திய மாநில அரசுகள் உதவி புரிய வேண்டும் எனவும் கலெக்டர் பாஸ்கரன் பாண்டியனிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

    இதையும் படியுங்கள்... உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவர்கள் கண்ணீர் பேட்டி

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மயான கொள்ளை விழாவிற்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் ஆண்டுதோறும் மயான கொள்ளை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு வருகிற 1, 2-ந் தேதிகளில் 2 நாட்கள் (செவ்வாய், புதன்கிழமை) நடைபெற உள்ளது.

    மயான கொள்ளை தேரின் உயரம் அதன் அடிப்பாகம் உள்பட மொத்தம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.மயான கொள்ளை சாமி சிலை அமைக்கப்பட்ட வாகனத்தில் தீ பிடிக்க கூடிய வகையில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தாமல், மின்சாதனப் பொருட்கள் அனைத்தும் எளிதில் தீப்பிடிக்காத வகையில் உள்ளதா? என தீயணைப்பு துறையினர் ஆய்வு செய்தல் வேண்டும்.

    மேலும் தேவையான முதலுதவி பொருட்கள் வைத்திருக்க வேண்டும்.கூம்பு வடிவ ஒலி பெருக்கி அமைப்பது தவிர்த்து பெட்டி வடிவிலான ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும். ஒலி அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவிற்குள் இருக்க வேண்டும்.

    சட்டத்திற்குப் புறம்பான வகையில் செயல்பட கூடாது, மின் திருட்டு செய்திகள் கூடாது. 

    அரசியல் கட்சியினர், மதத்தலைவர்கள் பேனர்கள் வைத்தல் கூடாது. அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் மதசார்பின்மை பாதிப்பு ஏற்படாத வகையில் வருவாய், காவல்துறையினர் விதிக்கும் நிபந்தனைகளை கண்டிப்பாக கடைபிடித்தல் வேண்டும்.

    சாமி சிலை ஊர்வலங்கள் பகல் 12 மணிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு மதியம் 3 மணிக்குள் காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே பிற மதத்தவர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாத வகையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

    சாமிசிலைகளை நான்கு சக்கர வாகனங்கள் அதாவது மினி லாரி, டிராக்டர் மூலமாக மட்டுமே ஏற்றி செல்ல வேண்டும். மாட்டு வண்டிகள், மீன்பாடி வண்டிகள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் ஏற்றிச் செல்லக்கூடாது. 

    சிலைகள் ஊர்வலத்தின் போது எவ்வித பட்டாசு மற்றும் வெடிபொருட்கள் வெடித்தல் கூடாது.பாலாற்றில் மாலை 5 மணிக்குள் பூஜை முடித்துக் கொண்டு, இரவு 7 மணிக்குள் அனைத்து நிகழ்வுகளும் நிறைவு பெறும் வகையில் இருக்க வேண்டும்.

    ஊர்வலத்தின்போது பூ அலங்காரங்கள் அலங்காரப் பொருட்கள் மறு சுழற்சி முறையிலான பொருட்கள் பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க்க வேண்டும்.

    சாமி ஊர்வலங்கள் முடிவுற்ற பிறகு 48 மணி நேரத்திற்குள் உள்ளாட்சி, நகராட்சி துறையினர் சிலைகள் வைக்கப்பட்ட இடத்தில் குவிக்கப்பட்ட கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.

    மது அருந்திய நிலையில் விழாக்குழுவினர் யாரும் மயானக்கொள்ளை ஊர்வலத்தில் கலந்து கொள்ளக் கூடாது.இதனை போலீசார் கண்காணித்து சட்டம், ஒழுங்கிற்கு ஊறு விளைவிப்பவை அப்புறப்படுத்த வேண்டும்.

    தேவை இல்லாமல் பொது மக்களுக்கோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்டவுட், சீரியல் செட் போன்றவற்றை பொது இடங்களில் அமைக்க கூடாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
    ×