என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்குப்பதிவையொட்டி 961 போலீசார் பாதுகாப்பு

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்குப்பதிவையொட்டி 961 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், சோளிங்கர், வாலாஜாப் பேட்டை, ராணிப்பேட்டை, ஆற்காடு, மேல்விஷாரம் ஆகிய 6 நகராட்சிகள்  மற்றும் நெமிலி, பனப்பாக்கம், தக்கோலம், காவேரிப்பாக்கம், அம்மூர், கலவை, விளாப்பாக்கம், திமிரி உள்ளிட்ட 8 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

    நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 288 பதிவுகளுக்கு மொத்தம் 1,067 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 411 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 3 லட்சத்து 31 ஆயிரத்து 284 பேர் வாக்களிக்க உள்ளனர். 

    தேர்தலையொட்டி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அதிமுக, தமாகா, பாமக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் நிர்வாகிகள் பிரசாரம் மேற்கொண்டனர். இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. 

    வாக்குப்பதிவு நாளை (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான பாஸ்கர பாண்டியன் உத்தரவின்பேரில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. 

    வாக்குசாவடி மையங்களில் முகப்பில் பந்தல் அமைத்தல், விளக்குகள் பொருத்துதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. 

    மேலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறு வதால் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிப் பதற்காக மாவட்டம் முழுவதும் 961 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
    Next Story
    ×