என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருப்பதை தேர்தல் பார்வையாளர், கலெக்டர் ஆய்வு.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 72.24 சதவீத ஓட்டு பதிவு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 நகராட்சியில் 69.10 சதவீதமும், 8 பேரூராட்சியில் 82.13 சதவீதம் என மொத்தம் 72.24 சதவீத ஓட்டு பதிவாகியுள்ளது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளில் 69.10 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இதேபோல் மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளில் 82.13சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது.
மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் பதிவான ஓட்டுகளில் விபரம்; அரக்கோணம் நகராட்சியில் மொத்த வாக்காளர்கள் 67 ஆயிரத்து 893 பேரில் 42 ஆயிரத்து 229பேர் வாக்களித்துள்ளனர். இங்கு 62.20 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
ஆற்காடு நகராட்சியில் மொத்த வாக்காளர்கள் 42ஆயிரத்து 249 பேரில் 32ஆயிரத்து 984 பேர் வாக்களித்துள்ளனர்.இங்கு 72.89 சதவீத வாக்குகள் பதிவாகின. மேல்விஷாரம் நகராட்சியில் மொத்த 40ஆயிரத்து 525பேரில் 26ஆயிரத்து 322பேர் வாக்களித்துள்ளனர்.
இங்கு 64.95 சதவீதம் வாக்குகள் பதிவாகின. ராணிப்பேட்டை நகராட்சியில் மொத்தம் 42ஆயிரத்து 707 பேரில் 31ஆயிரத்து 342பேர் வாக்களித்துள்ளனர். இங்கு 73.39 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
சோளிங்கர் நகராட்சியில் மொத்தம் 29ஆயிரத்து 842பேரில் 21ஆயிரத்து 406 பேர் வாக்களித்துள்ளனர். இங்கு 71.73 சதவீதம் வாக்குகள் பதிவாகின. வாலாஜாபேட்டை நகராட்சியில் மொத்தம் 27ஆயிரத்து 241பேரில் 20ஆயிரத்து 858 பேர் வாக்களித்துள்ளனர்.இங்கு 76.57 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
6 நகராட்சியில் மொத்தம் 2லட்சத்து 53ஆயிரத்து 457 வாக்காளர்களில் 1லட்சத்து 75ஆயிரத்து 141பேர் வாக்களித்துள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 69.10 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன.
இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் விவரம்: அம்மூர் பேரூராட்சியில் மொத்தம் 10ஆயிரத்து 991 பேரில் 9ஆயிரத்து 223பேர் வாக்களித்துள்ளனர். இங்கு 83.91 சதவீதம் வாக்குகள் பதிவாகின.கலவை பேரூராட்சியில் மொத்தம் 7ஆயிரத்து 867 பேரில் 6ஆயிரத்து 470 பேர் வாக்களித்துள்ளனர்.
இங்கு 82.24சதவீதம் வாக்குகள் பதிவாகின. காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் மொத்தம் 12ஆயிரத்து 505 பேரில் 9ஆயிரத்து 899 பேர் வாக்களித்துள்ளனர். இங்கு 79.16 சதவீதம் வாக்குகள் பதிவாகின.நெமிலி பேரூராட்சியில் மொத்தம் 9ஆயிரத்து 526பேரில் 7ஆயிரத்து 777பேர் வாக்களித்துள்ளனர். இங்கு 81.64 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
பனப்பாக்கம் பேரூராட்சியில் மொத்தம் 10ஆயிரத்து 247 பேரில் 8ஆயிரத்து 243பேர் வாக்களித்துள்ளனர். இங்கு 80.44 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தக்கோலம் பேரூராட்சியில் மொத்தம் 9ஆயிரத்து 637பேரில் 7ஆயிரத்து 914 பேர் வாக்களித்துள்ளனர். இங்கு 82.12 சதவீதம் வாக்குகள் பதிவாகின.திமிரி பேரூராட்சியில் மொத்தம் 13ஆயிரத்து 73 பேரில் 10ஆயிரத்து 863 பேர் வாக்களித்துள்ளனர். இங்கு 83.09 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
விளாப்பாக்கம் பேரூராட்சியில் மொத்தம் 6ஆயிரத்து 742 பேரில் 5ஆயிரத்து 795 பேர் வாக்களித்துள்ளனர். இங்கு 85.95சதவீதம் வாக்குகள் பதிவாகின. மாவட்டத்தில் 8பேரூராட்சிகளில் மொத்தம் 80ஆயிரத்து 588 வாக்காளர்களில் 66ஆயிரத்து 184 வாக்காளர்கள் ஓட்டு போட்டுள்ளனர். 8 பேரூராட்சிகளில் மொத்தம் 82.13 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6நகராட்சிகள் மற்றும் 8பேரூராட்சிகளில் மொத்தம் 3லட்சத்து 34ஆயிரத்து 45வாக்காளர்களில் 2லட்சத்து 41ஆயிரத்து 325 பேர் வாக்களித்துள்ளனர். மொத்தம் 72.24 சதவீதம் மாவட்டத்தில் வாக்குகள் பதிவாகின.
Next Story






