என் மலர்
ராணிப்பேட்டை
- பதிவேட்டில் இடம் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிப்பு
- நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி நடவடிக்கை
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 போலீஸ் நிலையங்கள் உள்ளது. இதில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்து கணக்கிட வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவிட்டார்.
இதையடுத்து அனைத்து போலீஸ் நிலையங்களிலும் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கணக்கெடுப்பு பணி தீவிரம் அடைந்துள்ளது.
மேலும் அவர்களை தொடர்ந்து கண்காணிக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் பல்வேறு குற்றம் செய்தவர்கள் குறிப்பாக சந்தேக நபர்கள், ரவுடிகள் போன்ற வர்களுக்கான சரித்த பதிவேட்டில் தற்போது 56 குற்றவாளிகளின் பெயர் இடம் பெற்றுள்ளது.
அதேபோல் அரக்கோணம் டவுன் போலீஸ் நிலைய குற்றவாளிகள் பதிவேட்டில் 88 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குற்றவாளிகள் எங்கு இருக்கிறார்கள், அவர்களுடைய நடவடிக்கை என்ன, என்பது உள்ளிட்டவற்றை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை யொட்டி குற்றவாளிகள் கணக்கெடுக்கும் பணி தீவிரமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- புறா பிடிப்பதற்காக சுவர் மீது ஏறியபோது பறிதாபம்
- வழக்கு பதிவு செய்து விசாரணை
ராணிப்பேட்டை:
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் அசோக் கர்கேட்டா(22), திருமணமானவர்.இவர் ராணிப்பேட்டை அடுத்த நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கடந்த சில மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.
அசோக் கர்கேட்டா தொழிற்சாலையின் மேலே புறாக்கள் இருப்பதைக் பார்த்து அடிக்கடி மேலே சென்று புறாக்களை பிடித்து வந்துள்ளார்.
நேற்று காலையிலும் புறா பிடிப்பதற்காக சுவர் மீது ஏறினார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது பற்றி தகவலறிந்த போலீசார் அசோக் கர்கேட்டா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆடைகள் கலைத்து பணம் உள்ளதா என தேடினார்
- மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம்,கலவை அடுத்த அகரம் சாலை பகுதியில் விஜயராகவன் என்பவர் வீடு உள்ளது. இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர் வீட்டுக்குள் சென்றதாக கலவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்விஜயராகவன் வீட்டை ஆய்வு செய்தனர்.
அதில் வெளியில் இருந்து வீட்டின் பூட்டை சுத்தியால் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கதவை உடைக்க முடியாததால் அந்த மர்ம நபர் ஜன்னலை திறந்து அதன் வழியாக சிலாvப்பில் இருந்த பெட்டியை இழுத்து அதிலி ருந்த வீட்டு பத்திரங்கள், ஆடைகள் உள்ளிட்ட வைகளை கலைத்து பணம் உள்ளதா என தேடினார். மேலும் இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்களிடம் விசாரணை நடத்தினர்.
அதில் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீட்டின் வெளியில் உள்ள கேட்டை உடைத்ததாகவும் அப்போது அங்கு யாரோ கூச்சலி ட்டதில் அங்கிருந்து தப்பி ஓடியதும் தெரிய வந்தது.
அருகில் உள்ள தனியார் முதியோர் இல்லத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். கைபையை மாட்டி கொண்டு மர்மநபர் வருவது போன்ற காட்சிகள் இருந்தது.
தயிர் பாக்கெட்
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்களிடம் போலீ சார் விசாரணை நடத்தினர். மர்ம நபர் காலையில் தயிர் பாக்கெட் கையில் வைத்துக் கொண்டு வீடு வீடாக விற்பனை செய்து வருவதாக கூறினர்.மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- எம்.ஆர்.எப் தொழில் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டது
- ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு வழங்கினர்
ராணிப்பேட்டை:
அரக்கோணத்தில் செயல்பட்டு வரும் எம்.ஆர்.எப் தொழில் நிறுவனத்தின் சார்பில், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மற்றுத்திற னாளிகள் மற்றும் முதியோர்களின் சிரமத்தை குறைக்க ரூ.6. லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வளர்மதியிடம், எம்.ஆர்.எப். நிறுவன முதுநிலை பொது மேலாளர் தீபக் மேத்யூ, பொது மேலாளர் ஜான் டேனியல் ஆகியோர் பேட்டரி வாகனத்தை வழங்கினர்.
கலெக்டர் அலுவல கத்திற்கு மனு அளிக்க வரும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திற னாளிகளின் வசதிக்காக அலுவலக நுழைவாயிலில் இருந்து அலுவலக வாயில் வரை அழைத்து செல்வதற்காக எம்.ஆர்.எப்.நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் பேட்டரி வாகனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதில் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் எல்வின், நிறுவன சமூகப் பங்களிப்பு ஒருங்கி ணைப்பாளர் கஜேந்திரன். மனிதவள மேலாளர் பால் மற்றும் அலுவலக மேலாளர் பாபு உள்பட , அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- திருத்தம் செய்வதற்கான படிவங்கள் வழங்கப்பட்டது
- ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்தும் பொது மக்களுக்கு விளக்கி கூறப்பட்டது
காவேரிப்பாக்கம்:
நெமிலி அடுத்த வேட்டாங்குளம் பகுதியில் வரும் 2024-நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நேற்று நடைபெற்றது.
இம்முகாமினை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி நேரில் ஆய்வு செய்தார். முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், திருத்தம் செய்வதற்கான படிவங்கள் வழங்கப்பட்டது.
மேலும் ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்தும் பொது மக்களுக்கு விளக்கி கூறப்பட்டது.இதில் நெமிலி தாசில்தார் பாலசந்தர், கிராம நிர்வாக அலுவலர் நிரோஷா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும் என ஆலோசனை
- 100 என்ற எண்ணுக்கு உடனடியாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இரவு நேரத்தில் மாடுகள் திருடு போகிறது.
இதை தடுக்க திமிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி உத்தரவின் பேரில் திமிரி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் பொதுமக்களுக்கு போலீசார் மூலமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் தாங்கள் வைத்திருக்கும் பசு மாடுகளை தனியாக கட்டாமல் தட்டியிலே அல்லது கொட்டகையிலோ கட்டி பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
இரவில் யாரேனும் சந்தேகம் படும்படியாக நபர்களை கண்டால் 100 என்ற எண்ணுக்கு உடனடியாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். மாடுகள் திருடு போவதை தடுக்க பொதுமக்கள் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கிராமங்களில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும் உட்பட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
இதில் திமிரி போலீசார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.30.62 லட்சம் மதிப்பீட்டில் 12 குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது
- பொதுமக்கள் கலந்து கொண்டனர்
கலவை:
கலவை அடுத்த அத்தியானம் கிராமத்தில் இருளர் இன மக்களுக்கு ரூ.30.62 லட்சம் மதிப்பீட்டில் 12 குடியிருப்புகள் கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் அசோக் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூமி பூஜை போட்டு பணியை தொடங்கி வைத்தார்.
இதில் அதிகாரிகள்,உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மன அமைதிக்காக யோகா பயிற்சி
- அலுவலர்கள் கலந்து கொண்டனர்
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று சமையல் உதவியாளர்களுக்கு ஒரு நாள் செயலாக்க பயிற்சி நடைபெற்றது.
அப்போது பாதுகாப்பான சுகாதாரமான முறையில் உணவை தயார் செய்வது குறித்தும், மன அமைதிக்காக யோகா பயிற்சி செய்வது குறித்தும், சிறுதானிய வகைகளின் முக்கியத்துவம் குறித்தும் செயலாக்க பயிற்சி வழங்கப்பட்டது. இதில் காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முகமது சைபுதீன், வெங்கடேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசுந்தரி, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் இரபீந்திரநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
- வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்
ராணிப்பேட்டை:
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் ஊழல் தடுப்பு வாரத்தை முன்னிட்டு ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கியது.
ஊர்வலத்தை ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப் பிரண்டு கிரண்ஸ்ருதி கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 3000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். ஊர்வலம் நவல்பூர், கெல்லீஸ் ரோடு என நகரின் முக்கிய வீதிகளின் வழியாக மாணவ-மாணவிகள் ஊழலுக்கு எதிரான விழிப்பு ணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந் தியவாறு சென்றனர்.
இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்ரமணியம், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- ஆலோசனைகள் வழங்கப்பட்டன
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆற்காடு:
ஆற்காடு ஒன்றியம் கிளாம்பாடி ஊராட்சியில் மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
ஊராட்சி மன்ற தலைவர் சுதா பாலாஜி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் விஜயலட்சுமி, வார்டு உறுப்பினர்கள் ஜெயலலிதா, கவிதா, மீனா, பரிமளா, லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை வித்யாலட்சுமி வரவேற்றார்.
சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூகப் பணியாளர் பார்த்திபன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடு மைகள், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, குழந்தை திருமணம், அதனால் ஏற்படும் பாதிப்புகள், போக்சோ சட்டம், காவலன் செயலி, குழந்தைகளுக்கான அவசர உதவி எண் 1098, பெண்களுக்கான அவசர உதவி எண் 181 உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க ஊக்குவித்தல் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மக்களைத் தேடி மருத்துவம் சக்தி லீலா, மகளிர் குழு தலைவி மகேஸ்வரி, இளைஞரணி தலைவர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்
- பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ந்தேதியை ஒவ்வொரு ஆண்டும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் அனுசரித்து வருகிறது.
நேற்று ராணிப்பேட்டையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ஊர்வலம் ராணிப்பேட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. ஊர்வலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ்உள்பட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஸ் நிலையம் அருகே லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி தலைமையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணி பஸ் நிலையம் தொடங்கி சிஎல் சாலை வழியாக வாரசந்தை மைதானம் வரை நடைபெற்றது.
இதில் சப் இன்ஸ்பெக்டர்கள் கணேசன், பிரகாஷ் மற்றும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்
- பா.ம.க. நகர செயலாளர் தலைமையில் நடந்தது
ராணிப்பேட்டை:
வாலாஜாவில் பா.ம.க. சார்பில் நகராட்சி நிர்வாகத்தின் சீர்கேடுகளை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பா.ம.க. நகர செயலாளர் ஞானசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட நகர,ஒன்றிய நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் நரேஷ் வரவேற்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சரவணன் கலந்து கொண்டு நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க வின் மாவட்ட தலைவர் சுப்ரமணி, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாநில மாணவர் சங்க செயலாளர் வக்கீல். ஜானகிராமன், ஒன்றிய செயலாளர்கள் ரவி , ரஜினி சக்கரவர்த்தி உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.






