என் மலர்
புதுக்கோட்டை
கந்தர்வக்கோட்டையில் சனிபிரதோஷ விழா நடை பெற்றது.
புதுக்கோட்டை
கந்தர்வகோட்டை சிவன் கோவிலில் சனிபிரதோஷத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கந்தர்வகோட்டை அமராவதி உடனுறை ஆபத் சகாயேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ விழாநடை பெற்றது. தொற்று காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டு தளங்களை மூட அரசு உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில்உத்தரவு விளக்கப்பட்டதை முன்னி ட்டு சனிப்பிரதோஷ விழா வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர்.
பிரதோஷ விழாவில் நந்தியம் பெருமானுக்கும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், நடத்தை விதிகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடை பெற்றது.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் மற்றும் நடத்தைவிதி கள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுடன் இன்று 29.01.2022 ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்நிஷா பார்த்திபன் முன்னிலை வகித்தார். பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது;
புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட, புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி நகராட்சிகளிலும், 8 பேரூராட்சிகளிலும் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் 2 நகராட்சிகளில் 69 வார்டுகளுக்கும், 8 பேரூராட்சிகளுக்குட்பட்ட 120 வார்டுகள் என மொத்தம் 189 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
இத்தேர்தலை சுமுகமாகவும், எவ்வித சட்ட ஒழுங்கு பிரச்சனையுமின்றி நடத்திடும் வகையில் 30 பறக்கும் படைகளும், 10 இடங்களில் சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டு சட்டவிரோதமான செயல்கள் கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இத்தேர்தல் காலத்தில் ரூ.50,000 க்கும் மேற்பட்ட தொகைகள் எடுத்தும்செல்லும் பட்சத்தில் உரிய ஆவணங்களுடன் செல்ல வேண்டும். 2 நகராட்சிகளில் 25 வாக்குப்பதிவு மையங்களும், 8 பேரூராட்சிகளில் 20 வாக்குப்பதிவு மையங்கள் என 45 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, மேற்கண்ட இடங்களில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமலிருக்க கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தேர்தல் நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற 20 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தொடர்புடைய அலுவலர்களுக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றும் வகையில் அனைத்து வகையான தேர்தல் நடவடிக்கைகளும் சி.சி.டி.வி கேமரா மூலம் பதிவு செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் புதுக்கோட்டை கே.கே.சி கல்லூரியில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எனவே அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும் தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்றி தேர்தலை சுமுகமாக நடத்திட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு வழிமுறைகளை அனைவரும் முறையாக பின்பற்றி, தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கருணாகரன் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

மருத்துவ கல்வி உள் ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். இடங்களை அள்ளிய புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள்
புதுக்கோட்டை:
மருத்துவ படிப்புகளில் நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதன்மூலம் கடந்த ஆண்டு 436 அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிக்க இடங்கள் கிடைத்தன. நடப்பு ஆண்டில் கூடுதல் கல்லூரிகள் திறக்கப்பட்டதால் 544 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டன.
இதையடுத்து சென்னையில் நடந்த உள் ஒதுக்கீடு கலந்தாய்வில் புதுக்கோட்டை மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் 24 பேர் எம்.பி.பி.எஸ். படிப்புக்கும், 4 பேர் பி.டி.எஸ். படிப்புக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.
குறிப்பாக தர வரிசை பட்டியலில் அறந்தாங்கி அருகே உள்ள சிலட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் ஐ. சிவா முதலிடத்தை பிடித்தார். இவரின் தந்த ஆட்டு தோல் வியாபாரம் செய்கிறார். தன்னுடைய மகனுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைத்ததில் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தார்.
அதேபோன்று புதுக்கோட்டை கீரமங்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த 7 மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 5 மாணவிகளுக்கு அரசு கல்லூரிகளிலும், ஒரு மாணவிக்கு தனியார் கல்லூரியிலும் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்தது. இன்னொரு மாணவி பல் மருத்துவம் படிக்க தேர்வானார். கடந்த ஆண்டும் இதே பள்ளி மாணவிகள் 4 பேர் தேர்வாகி மருத்துவ கல்லூரிகளில் படித்து வருகின்றனர். புதிய சாதனை படைத்த மாணவிகளை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்த மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி தற்போதைய பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட மாணவிகளை பாராட்டினார்.இவர் ஏற்கனவே மேற்கண்ட பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிட தக்கது. மருத்துவ கல்வியில் எம்.பி.பி.எஸ். இடங்களை புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவ-மாணவிகள் அள்ளி வந்தது மாவட்ட மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

பெண்களின் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்தவர்கள் அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
புதுக்கோட்டை:
உலக மகளிர் தினமான மார்ச் 8 அன்று பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக சேவை புரிந்த தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்ட தகுதியான நபருக்கு மாநில அரசின் அவ்வையார் விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத் தில் சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றி வருகின்ற தனி நபரை அங்கீகரிக்கும் விதமாக மாநில அரசின் அவ்வையார் விருது வழங் கிட விண்ணப்பங்களை பிப்ரவரி 3&ந்தேதிக்குள் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவ லகத்திற்கு அனுப்பிவைக்குமாறு அறிவுறுத்தப்பட் டுள்ளது.
தனிப்பட்ட நபர்களுக்கான விருதிற்கு ரொக்கப்பரிசு, தங்க பதக்கம், சான்று மற்றும் சால்வை முதலமைச்சரால் உலக மகளிர் தின விழா அன்று வழங்கப்படும். மேலும் கையேட்டில் இணைக்கப்பட வேண்டிய விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை 04322&222270 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
சட்ட விரோதமாக கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதிகளில், திருச்சி மாவட்டம் ராம்ஜி நகரில் கஞ்சா விற்பனை செய்பவர்க ளிடமிருந்து கஞ்சா வாங்கி வந்து சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாக திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க பெண் வியாபாரி தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் சிறப்பு சப்& இன்ஸ்பெக்டர் தமிழரசன் கவிநாடு கண்மாய் பகுதியில் சோதனை செய்ததில் சட்ட விரோதமாக கஞ்சா விற் பனை செய்த திருக்கோகர்ணம் ரெட்டை குளத்தை சேர்ந்த ஜேம்ஸ் மாத்யூ மகன் விவேக் மாத்யூ (26) என்பவரை கைது செய்தார். அதே போல் சப்&இன்ஸ் பெக்டர் சமுத்திரராஜன் பெருமாள்பட்டி மயானம் அருகே கஞ்சா விற்பனை செய்த சன்னதி தெருவை சேர்ந்த கருப்பையா மகன் ராஜசேகரை (22) கைது செய்தார்.
மேலும் சப்&இன்ஸ்பெக் டர் சரவணன் ஆலங்குளம் ஹசிங்யூனிட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ரெட்டை குளத்தை சேர்ந்த பக்கிரிமஸ்தான் மகன் சதாம் உசேன் (19) என்பவரை கைது செய்தார். இவர்களிடமிருந்து 440 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத் தில் தொடர்ச்சியாக ஆன் லைன் லாட்டரி மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை தடுக்கப்பட்டு அதில் ஈடுபடும் குற்றவாளிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி காவல் சரகத்திற்குட்பட்ட அரசர் குளம் கடைவீதியில் கீரமங்கலம் காமராஜ் தெருவை சேர்ந்த நாகமுத்து மகன் சிவஞானம் (45), அறந்தாங்கி அருகே அரசர் குளம் கீழ் பாதியை சேர்ந்த சிவசாமி மகன் அருள் (45) இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து பில் புக் ஒன்றும், ரொக்கம் 7,250 யும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் சுப்பிரமணியபுரம் கடைவீதியில் சிறப்பு சப்&இன்ஸ்பெக்டர் சண்முகம் சோதனை மேற்கொண்டதில் கொடிவயல் கிழக்கு பகுதியை சேர்ந்த முத்து (69) என்வரை கைது செய்து அவரிடமிருந்து ரொக்கம் 2,980, ஒரு பில் புக்கையும் பறிமுதல் செய்துள்ளனர்.
அரசு சலுகையில் தனியார் பள்ளியில் பயின்றதால் மாணவியின் மருத்துவ படிப்பு கனவு கேள்விக்குறியானது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திருநெல்லிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் தூய்மைப் பணியாளர் முனுச்சாமி. இவரது மகள் ராகவி (வயது 20). இவர் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கோபாலபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் தமிழ் வழிக்கல்வி படித்தார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 481 மதிப்பெண் பெற்றுள்ளார். இந்த நிலையில் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மாணவி என்பதால் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் மாவட்ட நிர்வா கம் சார்பில், அரசின் சலுகையில் தனியார் பள்ளியில் படிக்க அனுமதி கடிதம் வழங்கப்பட்டது.
இதனையடுத்து அரசு உதவியோடு மேல்நிலை கல் வியான 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தனியார் பள்ளியில் படித்தார். மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டில் நீட் தேர்வு எழுதிய மாணவி அதில் 297 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவி எடுத்துள்ள மதிப்பெண்களுக்கு தமிழக அரசின் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அடிப்படையில் 23-வது இடம் கிடைத்தும், அரசின் சலுகையில் தனியார்ப்பள்ளியில் பயின்ற காரணத்திற்க்காக மாணவி 2,036-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள் ளார். இதனால் மாணவியின் நீண்ட நாள் மருத்துவ கனவு தவிடுபொடியாகியுள்ளது.
இது தொடர்பாக மாணவி கூறுகையில், அரசாணையின்படி, அரசின் சலுகையில் நான் தனியார் பள்ளியில் படித்தேன். பணம் கட்டி படிக்க சொல்லியிருந்தால் கண்டிப்பாக நான் தனியார் பள்ளிக்கு சென்றிருக்கமாட்டேன். ஆனால் தமிழக அரசு தனியார் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உள் ஒதுக்கீட்டில் இடம் இல்லை என அறிவித்துள்ளது.
இதனால் என்னை போன்ற ஏழை மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர், மேலும் ஆர்.டி.இ. மூலம் தனியார் பள்ளியில் படித்த அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் 7.5 சதவீதம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போன்றுதான் நானும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் படித்தேன். ஆனால் இதற்கு மட்டும் தனியார் பள்ளியில் படித்ததாக வாய்ப்பு மறுக்கப்படுகிறது. எனவே தமிழக முதல்வர் என்னைப் போன்ற ஏழை மாணவிகளின் சாதனைகளுக்கு வழிகாட்ட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளில் 189 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட த்தில் புதுக்கோட்டை நகராட்சியில் 42 பதவிகளுக்கும், அறந்தாங்கி நகராட்சியில் 27, பதவிகளுக்கும், பொன்னமராவதி, ஆலங்குடி, கறம்பக்குடி, அரிமளம், கீரமங்கலம், அன்னவாசல், இலுப்பூர் மற்றும் கீரனூர் ஆகிய 8 பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகளில் 120 பதவிகளுக்கும் என மொத்தம் 189 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான முன்னேற்பாடு பணிகளில் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளர். இதற்கிடையில், கூட்டனிக் கட்சியினருடன் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய பிரதானகட்சிகளைச் சேர்ந்தோர், தங்களிடம் வழங்கப்பட்டுள்ள கூட்டணி கட்சியினர் போட்டியிடும் விருப்ப இடங்கள் குறித்து முதல் சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆலங்குடி அருகே குடியரசு தின விழாவில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன் களப்பணியாளர்களின் பாதம் பணிந்து வணங்கும் நிகழ்ச்சி நடந்தது.
புதுக்கோட்டை:
குடியரசு தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள அரையப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், முன் களப்பணியாளர்கள் அனைவருக்கும் பாரத தேசத்தின் சார்பாக பாதம் தொட்டு வணங்குதல் நிகழ்வு நடைபெற்றது.
திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய தலைவர் செல்வராஜ் தலைமையில், அன்பானந்தம் ஓ.பி.சி. அணி ஒன்றிய தலைவர் மற்றும் முன்னாள் விவசாய அணியை சேர்ந்த கதிர்வேல் ஏற்பாட்டில் அரையப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் துரை மலர்விழி மற்றும் துணைத்தலைவர் விஜயா சின்னத்துரை ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் பா.ஜ.க. ஒன்றிய பொதுச் செயலாளர்கள் பிரபாகரன், கோபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தீர்த்தவேல், கலை மற்றும் கலாச்சார பிரிவு மாவட்ட தலைவர் மாத்தூர் மணி, அறந்தை வடக்கு ஒன்றியச் செயலாளர் பன்னீர்செல்வம், முன்னாள் ஒன்றிய தலைவர் தமிழ்மணி ஆகியோர் கலந்து கொண்டு முன்களப்பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு இந்த பெருந்தொற்று காலத்தில் அவர்களின் மகத்தான சேவையை நினைவுகூர்ந்து பாத பூஜை செய்து பிரதமரின் கையொப்பமிட்ட நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
கொரொனா பரவ தொடங்கியது முதல் இன்று வரை கொரொனாவிடமிருந்து மக்களை காப்பாற்ற தங்கள் உயிரை பணயம் வைத்து குடும்பத்தை மறந்து சுற்றத்தாரை துறந்து தாங்கள் இந்த தன்னலமற்ற சேவை தான் மக்களை காப்பாற்றியது, இன்றும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது என்று வாழ்த்துரை வழங்கினர்.

சட்டவிரோதமாக மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு பகுதியில் மது பாட்டில்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை அமைத்து பல பகுதிகளில் சோதனை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்திவிடுதி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் (வயது 36) என்பவர் வடகாடு ஏ. காலனியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்த 40 மது பாட்டில்கள் மற்றும் ரூ. 8300 பறிமுதல் செய்தனர். பிறகு அவரை வடகாடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் காயம் அடைந்தவர் திடீரென இறந்ததால் உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூர் பகுதியை சேர்ந்த பெருமாளின் மகன் முருகேசன் (வயது 27). இவர் தள்ளுவண்டியில் வளையல் வியாபாரம் செய்து வந்தார். இவர் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் ஆதனக்கோட்டை அருகே சோழகம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு நாய் குறுக்கே வந்துள்ளது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவருக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முருகேசனுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன்பின் அவர் நலமாக இருந்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், தனது உறவினர்கள், குடும்பத்தினருடன் பேசியிருக்கிறார். அதன்பின் அவருக்கு சிகிச்சைக்கான ஒரு ஊசி செலுத்தப்பட்டிருக்கிறது. இதில் சிறிது நேரத்திற்குள் முருகேசன் திடீரென இறந்தார். இதனால் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நல்ல முறையில் பேசிக்கொண்டிருந்தவருக்கு தவறான ஊசியை செலுத்தியதால் முருகேசன் இறந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். மேலும் மருத்துவமனை நிர்வாகம் மீது புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்க கோரி மருத்துவமனை வளாகத்தில் முருகேசனின் உடலை வைத்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லிகிரேஸ் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, உடலை பிரேத பரிசோதனை செய்து சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து ஆதனக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டையில் கலெக்டர் தலைமையில் வாக்காளர் உறுதிமொழியை அனைத்து அலுவலர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், 12&வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் வாக்காளர் உறுதிமொழியினை அனைத்து அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.
வாக்காளர் உறுதி மொழியான ‘மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியகுடி மக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல் களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும்,
மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம்” என்ற வாக்காளர் உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் அனைத்து அலுவலர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.
அதனைத் தொடந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், இளம் வாக்காளர்களுக்கு, வாக்காளர் அடையாள அட்டையினை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி, வருவாய் கோட்டாட் சியர் எம்.எஸ்.தண்டாயுத பாணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், துணை இயக் குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் அர்ஜூன்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கொப்பனாபட்டியில் புதிய அங்கன்வாடி மையத்தை அமைச்சர் ரகுபதி திறந்துவைத்தார்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் கொப்பனாபட்டியில் ரூ.9.05 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட, அங்கன்வாடி மையத்திறப்பு விழா, கலெக்டர் கவிதா ராமு தலைமையில், இலுப்பூர் வருவாய் கோட்டாச்சியர் தண்டாயுதபாணி முன்னி லையில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்து பேசினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு குழந்தைகளின் வளர்ச்சிக்கு பல்வேறு வசதிகளுடன் புதிய அங்கன் வாடி மையங்களை திறந்து வருகிறது என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பேசும் போது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆரம்பக் கல்விக்கு அனுப்புமுன் அங்கன் வாடி மையத்தில் சேர்த்து கற்க வைக்க வேண்டும். விரைவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து பகுதியிலும் அங்கன்வாடி மையம் சொந்த கட்டிடத்தில் அமைய உள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், பொன்னமராவதி தாசில்தார் ஜெயபாரதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், சதா சிவம், ஒன்றிய பெருந்தலைவர் சுதா அடைக்கலமணி, கூட்டுறவு சங்க இயக்குனர் அழகப்பன், கொப்பனாபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் மேனகா மனேசுவரன் மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண் டனர்.
முன்னதாக, அங்கன்வாடி மையம் அருகில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, கலெக்டர் கவிதா ராமு, ஒன்றிய பெருந்தலைவர் சுதா அடைக்கலமணி மற்றும் பலர் ஒன்றிணைந்து மரக்கன்று நட்டு வைத்தனர்.