search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளில் 189 பதவிகளுக்கு தேர்தல்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளில் 189 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட த்தில் புதுக்கோட்டை நகராட்சியில் 42 பதவிகளுக்கும், அறந்தாங்கி நகராட்சியில் 27, பதவிகளுக்கும், பொன்னமராவதி, ஆலங்குடி, கறம்பக்குடி, அரிமளம், கீரமங்கலம், அன்னவாசல், இலுப்பூர் மற்றும் கீரனூர் ஆகிய 8 பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகளில் 120 பதவிகளுக்கும் என மொத்தம் 189 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கான முன்னேற்பாடு பணிகளில் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளர். இதற்கிடையில், கூட்டனிக் கட்சியினருடன் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய பிரதானகட்சிகளைச் சேர்ந்தோர், தங்களிடம் வழங்கப்பட்டுள்ள கூட்டணி கட்சியினர் போட்டியிடும் விருப்ப  இடங்கள் குறித்து முதல் சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×