search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் தலைமையில் உறுதி மொழி ஏற்றுக் கொண்ட காட்சி
    X
    கலெக்டர் தலைமையில் உறுதி மொழி ஏற்றுக் கொண்ட காட்சி

    கலெக்டர் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி

    புதுக்கோட்டையில் கலெக்டர் தலைமையில் வாக்காளர் உறுதிமொழியை அனைத்து அலுவலர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், 12&வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் வாக்காளர் உறுதிமொழியினை அனைத்து அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.

    வாக்காளர் உறுதி மொழியான ‘மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியகுடி மக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான,  நியாயமான மற்றும் அமைதியான தேர்தல் களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும், 

    மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம்” என்ற வாக்காளர் உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் அனைத்து அலுவலர்களும் ஏற்றுக்கொண்டார்கள். 

    அதனைத் தொடந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், இளம் வாக்காளர்களுக்கு, வாக்காளர் அடையாள அட்டையினை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். இந்நிகழ்வில்  மாவட்ட வருவாய்  அலுவலர்  மா. செல்வி, வருவாய் கோட்டாட் சியர் எம்.எஸ்.தண்டாயுத பாணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், துணை இயக் குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் அர்ஜூன்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×