search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய அங்கன்வாடி மையத்தினை அமைச்சர் திறந்துவைத்த காட்சி
    X
    புதிய அங்கன்வாடி மையத்தினை அமைச்சர் திறந்துவைத்த காட்சி

    கொப்பனாபட்டியில் ரூ. 9 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் அமைச்சர் திறந்து வைத்தார்

    கொப்பனாபட்டியில் புதிய அங்கன்வாடி மையத்தை அமைச்சர் ரகுபதி திறந்துவைத்தார்.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் கொப்பனாபட்டியில்  ரூ.9.05 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட, அங்கன்வாடி மையத்திறப்பு விழா, கலெக்டர் கவிதா ராமு தலைமையில், இலுப்பூர் வருவாய் கோட்டாச்சியர் தண்டாயுதபாணி முன்னி லையில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்து பேசினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு குழந்தைகளின் வளர்ச்சிக்கு பல்வேறு வசதிகளுடன் புதிய அங்கன் வாடி மையங்களை திறந்து வருகிறது என்று கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பேசும் போது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆரம்பக் கல்விக்கு அனுப்புமுன் அங்கன் வாடி மையத்தில் சேர்த்து கற்க வைக்க வேண்டும். விரைவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து பகுதியிலும் அங்கன்வாடி மையம் சொந்த கட்டிடத்தில் அமைய உள்ளது என்றார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், பொன்னமராவதி தாசில்தார் ஜெயபாரதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், சதா சிவம், ஒன்றிய பெருந்தலைவர் சுதா அடைக்கலமணி, கூட்டுறவு சங்க இயக்குனர் அழகப்பன், கொப்பனாபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் மேனகா மனேசுவரன் மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண் டனர்.

    முன்னதாக, அங்கன்வாடி மையம் அருகில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, கலெக்டர் கவிதா ராமு, ஒன்றிய பெருந்தலைவர் சுதா அடைக்கலமணி மற்றும் பலர் ஒன்றிணைந்து மரக்கன்று நட்டு வைத்தனர்.
    Next Story
    ×