என் மலர்
புதுக்கோட்டை
அறந்தாங்கி நாகுடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில தீ விபத்து ஏற்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா நாகுடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாகுடி, களக்குடி, மாணவநல்லூர், கூகனூர், சீனமங்களம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மருத்துவப் பயனடைந்து வருகின்றனர்.
இங்கு மகப்பேறு மருத்துவம், பொது மற்றும் அவசரகால சிகிச்சை அளிக்கப்படுகிறது. உள்நோயாளிகள் யாரும் இல்லாத சூழ்நிலையில் நேற்று புறநோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சையளித்துவிட்டு மருத்துவர்கள், செவிலியர்கள் சென்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக வளாகத்திற்குள் மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பணியிலிருந்த செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆகியோர் அலறியடித்து வெளியேறியுள்ளனர். அதனையடுத்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைவதற்குள் தீ மளமளவென பரவி மருத்துவ வளாகம் முழுவதும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது.
இதில் நோயாளிகளுக்கான 15க்கும் மேற்பட்ட படுக்கைகள், கொரோனா தடுப்பூசி, மருந்து மாத்திரைகள் மற்றும் குளுக்கோஸ் பாட்டில்கள்,இரத்த பரிசோதனை நிலையம், சித்த மருத்துவ பிரிவு அறைகள் உள்ளிட்ட சுமார் 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை விரைந்து அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள், உள்நோயாளிகள் யாரும் தங்கியிருந்து சிகிச்சை பெறாத நிலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியத்தில் 2016 ஆம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை 450 வீடுகள் கட்டுவதற்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் அனுதி வழங்கப்பட்டது. இதற்காக ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
புதுக்கோட்டை:
இந்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டம் மத்திய அரசின் திட்டம் என்றாலும் மாநில அரசும் நிதி வழங்குகிறது.
இந்த திட்டம் நகர்ப்புறம், கிராமப்புறம் என்று இரண்டு வகையாக செயல்படுத்தப்படுகிறது. இதன்படி மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் இத்திட்டத்தை பிரதமர் வீடு வழங்கும் திட்டம் நகரம் என உள்ளது.
இதற்கு தமிழ்நாடு நகர்ப்புற குடியிருப்பு மேம்பாட்டு வாரியம் மாநில முகமை நிறுவனமாக உள்ளது. கிராம ஊராட்சிகளில் மாநில ஊரக வளர்ச்சித்துறை அரசு முகமை நிறுவனமாக உள்ளது. இதனால் மாவட்ட அளவில் ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநரும் வட்டார அளவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (பிடிஓ), கிராம ஊராட்சி அளவில் ஊராட்சி செயலாளர் வழியாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதன்படி புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியத்தில் 2016 ஆம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை 450 வீடுகள் கட்டுவதற்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் அனுதி வழங்கப்பட்டது. இதற்காக ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் கலெக்டர் கவிதா ராமுவிற்கு 450 வீடு கட்டும் திட்டத்தில் முழுமையாக முறைகேடு நடந்துள்ளதாக புகார் வந்தது. புகாரை தொடர்ந்து, கலெக்டர் நேரடி விசாரணை மேற்கொண்டதில் 450 வீடுகள் கட்டாமலேயே ரூ.7 கோடியை அதிகாரிகள் பயனாளிகளுக்கு கொடுத்து விட்டதாக முறைகேடு செய்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து ஆவுடையார் கோவில் முன்னாள் ஒன்றிய ஆணையர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் உட்பட 25 அரசு ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நம்முடைய தாய் மொழி தமிழை போல் மற்றவர்களின் தாய் மொழியையும் மதிக்க வேண்டும் என்று புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் பொன்னமராவதியில் உள்ள பழமை வாய்ந்த சோழீஸ்வரர் கோவிலில் வழிபாடு செய்து அங்கு நடைபெறும் திருப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவிலில் நடைபெறும் திருப்பணி மிக மந்தமாக நடைபெறுவதாகவும், அந்த பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்தனர்.
பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:
ஜிப்மரில் பொதுமக்களுக்கான சுற்றறிக்கை தமிழில் தான்முதன்மைப்படுத்த வேண்டும் என்று உள்ளது, அதை நான் தெளிவு படுத்தி விட்டேன். அதுவும் முதல் வரி தமிழிலும், இரண்டாவது வரி ஆங்கிலத்திலும், மூன்றாவது வரி இந்தியிலும் இருக்க வேண்டும் என்று உள்ளது. ஜிப்மரில் எந்த இடத்திலேயும் இந்தி திணிக்கப்படவில்லை.
அங்கு மட்டுமல்ல புதுச்சேரியில் எந்த இடத்திலும் இந்தி திணிக்க படாது. அவர்களாக விருப்பப்பட்டு கற்றுக்கொண்டால் அதை யாரும் தடை செய்யப் போவதில்லை. அதே கொள்கைதான் நமக்கும். உண்மையை புரிந்து கொள்ளாமல் நோயாளிகளுக்கு தடை ஏற்படும் என்று தெரிந்த பின்பும் தினமும் ஜிப்மர் வாசலில் நின்று போராட்டம் செய்வது, ஒலிபெருக்கிகளை வைத்து நோயாளிகளை தொந்தரவு செய்வது கூடாது என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.
அதற்காக டுவிட்டரில் தமிழ் பற்று கிடையாதா நீ என்ன இந்தி இசையா என்றெல்லாம் எழுதுகின்றனர். எங்களை விட யாரும் தமிழ்ப்பற்றுடன் இருக்க முடியாது என்ற அளவிற்கு நாங்கள் தமிழ் பற்று உடையவர்கள். தமிழில் பதவி ஏற்று தமிழில் ஆளுநர் உரையை ஆற்றி இருக்கிறோம். எப்போதுமே நம் மொழி மீது அன்பும் பாசமும் இருக்க வேண்டும்.
அதேபோல் இன்னொரு மொழி மீது எதிர்ப்பு இருக்கக்கூடாது. ஏனென்றால் அது இன்னொருவரின் தாய்மொழி, நமது தாய்மொழியை மதிப்பது போலவே இன்னொருவரின் தாய் மொழியையும் மதிக்க வேண்டும். அந்த மொழியைக் கற்கிறோமா இல்லையா என்பது இரண்டாவது பட்சம். இது இல்லாமல் புதுச்சேரியில் சில கட்சிகள் இதை எதிர்ப்பு கோஷமாக வெளிப்படுத்தி பிரிவினையை ஏற்படுத்தும் அளவிற்கு நடந்து கொள்வது தவறு என்பது எனது கருத்து.
தமிழ் மொழி தான் உயரிய மொழி, தொன்மையான மொழி, நமது தாய்மொழி. இன்னொரு மொழியை நாம் குறை கூறுவது மூலமாகவோ வஞ்சிப்பது மூலமாகவோ இன்னொரு சகோதரத்துவ மாநிலத்தை நாம் துன்பப்படுத்துகிறோம், கஷ்டப்படுத்துகிறோம். அதை இல்லாமல் நம் தமிழர்கள் அனைவரையும் மதிக்க பழகியவர்கள். தமிழ் கலாச்சாரம் என்பது உலக அளவில் மதிக்கக் கூடிய ஒன்று. அதனால் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், நம் மொழியை கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாகன விபத்தில் காயங்களுடன் 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் காரைக்குடி கோட்டையூர் டெலிபோன் காலனியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது40). இவரது மனைவி சங்கீதா(33), மகள் நிகீதா (9), இவர்கள் மூன்று பேரும் ஒரு காரில் காரைக்குடியில் இருந்து தஞ்சாவூருக்கு சென்று கொண்டிருந்தனர்.
இவரது காருக்கு முன்னாள் பெருமாநாடு பகுதியை சேர்ந்த சுப்பையா (52), அவரது உறவினர் மலையாண்டி மனைவி செல்வி (42) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
தஞ்சை புதுக்கோட்டை சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென சுப்பையா தனது இருசக்கர வாகனத்தை திருப்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சுரேஷ்குமார் ஓட்டிவந்த கார் இவர்கள் மீது மோதியது.
இதில் அந்த வழியாக மணிவேல் என்பவர் ஓட்டிவந்த காரும், சுரேஷ்குமார் கார் மீது மோதியது. இதில் சுரேஷ்குமார், சங்கீதா, நிகீதா, சுப்பையா, செல்வி மற்றும் மணிவேல், அவரது காரில் வந்த சுகன்யா ஆகிய 7 பேரும் காயமடைந்தனர்.
அவர்களை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து சம்பட்டி விடுதி போலீசார் வழக்குப் பதிவு செயய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இன்று அதிகாலையில் முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் வக்கீல் பரிதாபமாக உயிரிழந்தார்.
விராலிமலை:
கடலூரை சேர்ந்தவர் ஹேமந்த்குமார் (வயது 38). வழக்கறிஞரான இவர் தனது நண்பர் முகுந்தன் உள்ளிட்டோருடன் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று காரில் சென்றிருந்தார். அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மீண்டும் நேற்று இரவு மதுரையில் இருந்து கடலூர் புறப்பட்டார்.
காரை கடலூரை சேர்ந்த ஷேக் உசேன் என்பவர் ஓட்டி வந்தார். இந்த நிலையில் அவர்களது கார் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே புதுக்கோட்டை பாலம் அருகே வந்தபோது, முன்னால் சென்ற லாரியை டிரைவர் முந்த முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் டிரைவர் லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதினார். இதில் காரின் முன்பகுதி அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து போனது. மேலும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஹேமந்த்குமார், காருக்குள்ளேயே உடல் நசுங்கி பலியானார்.
மேலும் வெளியே வர முடியாமல் டிரைவர் ஷேக் உசேன் மற்றும் முகுந்தன் ஆகியோர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விராலிமலை போலீசார் அவர்களை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பலியான வக்கீல் ஹேமந்த்குமார் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மின் வேலியில் சிக்கிய குரங்கு பரிதாபமாக பலியானது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடவாளம் ஊராட்சிக்குட்பட்ட கதுவாரிப்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான பல ஏக்கர் இடம் உள்ளது. இந்த இடத்தை சுற்றிலும் மின் வேல அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஏராளமான குரங்குகள் அப்பகுதியில் வசித்து வந்தன. இரை தேடியும், தண்ணீர் குடிக்கவும் அங்கு குரங்குகள் முகாமிடுவது வழக்கமான ஒன்று. அதேபோல் அருகிலுள்ள திருவரங்குளம் வனப்பகுதியில் மயில், மான் உள்ளிட்டவையும் அதிக அளவில் வசித்து வருகின்றன.
இந்நிலையில் நேற்று குரங்கு தண்ணீர் குடிப்பதற்கு வேலியைத் தாண்டும்போது மின்வேலியில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டு சாலையில் இறந்து கிடந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் இதுவரையிலும் குரங்கை எடுப்பதற்கு வனத்துறையினர் யாரும் முன்வரவில்லை என்று அப்பகுதியினர் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த மின் வேலியால் அப்பகுதிக்கு மேய்ச்சலுக்காக செல்லும் ஆடு, மாடுகளும் பாதிப்பிற்கு உள்ளாகும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
விவசாய நிலங்கள் சார்ந்துள்ள அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின் வேலி தொடர்ந்து ஆபத்தை ஏற்படுத்தி வருவதாகவும், அதனை உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுக்கோட்டை அருகே ஆலங்குடியில் தமிழ் வழிக்கல்வி இயக்கம் சார்பில் பாவரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தமிழ் வழிக்கல்வி இயக்கம் சார்பில் பாவரங்கம் கருத்தரங்கம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ் வழிக்கல்வி இயக்கத்தின் சார்பில் நல்லாசிரியர் வாசு வரவேற்று பேசினார்.
பாவரங்கம் நிகழ்ச்சிக்கு ரெத்தினம் தலைமை வைத்தார். செந்த மிழ் வேந்தன், தெய்வேந்திரன், கந்தசாமி, சிவசுப்பிரமணியன், உதயகுமார், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாவரங்கம்-கருத்தரங்கம் அறிவியல் மொழியால் அகற்று என்ற தலைப்பில், தமிழ்நாடு கல்வி இயக்க பொதுச்செயலாளர் தேனரசன் எடுத்து வைத்தார். முனைவர் சண்முகப்பிரியா, பாவலர் புத்திரசிகாமணி, பாவலர் அறிவொளி கருப்பையா, பரிதி இளம்வழுதி, சீர்த்தி காமராசன், தமிழரசன் ஆகியோர் தலைமை தாங்கி பேசினர்.
தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே கிடைக்க நாம் என் ன செய்ய வேண்டும் தலைப்பில் நடந்த பொது அரங்கத்தில் தமிழ் வழிக்கல்வி இயக்கம் பழனிவேல் வரவேற்புரையாற்றினார். சின்னப்பா தமிழர் தலைமை தாங்கினார்.
தமிழே ஆட்சி மொழி, தமிழே கல்விமொழி, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை வழங்கிடு, உயர்கல்வி வேலை வாய்ப்புக்கு உறுதி செய்திடு என பல்வேறு கோரிக்கைகள் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டன.
இதில் அரசு ஓய்வுப்பெற்ற சங்க வட்டாட்சியர் ராஜசேகர், தலைமை ஆசிரியர் தங்கராசு, தாய்த்தமிழ்ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். தமிழ் வழிக்கல்வி இயக்கம் அப்பாசாமி நன்றி கூறினார்.
புதுக்கோட்டை அருகே சைல்டு லைன் அமைப்பு சார்பில் குழந்தை திருமணங்கள் தடுப்பு குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை அடுத்த செவ்வாய்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சைல்டு லைன் அமைப்பு சார்பில் குழந்தைகள் திருமணம் தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் விஜயரவி பல்லவராயர் தலைமை தாங்கினார். இதில் பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வட்டாட்சியர் விஸ்வநாதன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
குழந்தை திருமணம் தடுப்பது குறித்து சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோதிராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகதேவி, ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஹேமலதா ஆகியோர் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஊர் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசினர்.
மேலும் நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொது மக்களுக்கு குழந்தை திருமணம் தடுப்பது குறித்து நாடகம் மூலம் நடித்துக் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.
கந்தர்வகோட்டை அருகே பாசன ஏரியில் இருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினர் அகற்றினர்.
கந்தர்வகோட்டை அருகே பாசன ஏரியில் இருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினர் அகற்றினர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா குறும்பூண்டிஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பிடாரி ஏரி தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.
இதனால் மழைக்காலங்களில் போதுமான நீரை சேகரிக்காமல் விவசாயம் கேள்விக்குறியாக இருந்தது.
எனவேபாசன ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீரை சேமிக்க பொதுப்பணித்துறை, வருவாய்த்துறையினருக்கும் விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்தநிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஏரியின் எல்லைகள் அளவீடு செய்யப்பட்டு ஆக்கிரமிப்புகளை இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டது.
கந்தர்வகோட்டை வட்டாட்சியர் புவியரசன், வருவாய் அலுவலர் சேகர், கிராம நிர்வாக அலுவலர்ரம்யா, உதவியாளர் கண்ணன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்பாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினத்திற்கான பயிற்சி முகாம் நடைப்பெற்றது.
புதுக்கோட்டை:
இந்திய அரசின் இளையோர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பாக புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவக்கேந்திராமற்றும் ஆத்மா யோகா மையம் இணைந்து வருகிற ஜீன் 21, 2022 அன்று நடைபெறவுள்ள 8-வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சிக்கான முன்னோட்ட யோகாசன பயிற்சியினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்மேல் நிலைப்பள்ளியில் நடத்தியது.
யோகாசனப் பயிற்சிகள் மற்றும் விளக்கங்கள் அனைத்தும் ஒன்றிய அரசின் யோகா தின நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்டது.
இதில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.
நிகழ்வில் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி நேரு யுவக்கேந்திரா திட்ட உதவி அலுவலர் நமச்சிவாயம்,
ஆத்மா யோகா மையத்தின் நிறுவனர் யோகா பாண்டியன் மற்றும் துணை முதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர் கௌரி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.