என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் சர்வதேச யோகாதின முன்னோட்ட பயிற்சி நடை பெற்ற ப
ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினத்திற்கான பயிற்சி முகாம்
புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினத்திற்கான பயிற்சி முகாம் நடைப்பெற்றது.
புதுக்கோட்டை:
இந்திய அரசின் இளையோர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பாக புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவக்கேந்திராமற்றும் ஆத்மா யோகா மையம் இணைந்து வருகிற ஜீன் 21, 2022 அன்று நடைபெறவுள்ள 8-வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சிக்கான முன்னோட்ட யோகாசன பயிற்சியினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்மேல் நிலைப்பள்ளியில் நடத்தியது.
யோகாசனப் பயிற்சிகள் மற்றும் விளக்கங்கள் அனைத்தும் ஒன்றிய அரசின் யோகா தின நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்டது.
இதில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.
நிகழ்வில் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி நேரு யுவக்கேந்திரா திட்ட உதவி அலுவலர் நமச்சிவாயம்,
ஆத்மா யோகா மையத்தின் நிறுவனர் யோகா பாண்டியன் மற்றும் துணை முதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர் கௌரி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






