என் மலர்
புதுக்கோட்டை
ஆய்வுக்கு உட்படுத்தப்படாத படகுகளுக்கு மானிய திட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
கடலில் மீன் வளத்தை பாதுகாக்கின்ற வகையில் கடந்த மாதம் 14-ந் தேதி முதல் ஜூன் 14 வரை கடலில் மீன்பிடி விசைப்படகுகள் மற்றும இழுவைப் படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய மீன்பிடி தடைக்காலத்தில் தமிழகத்தில் இயங்கும் அனைத்துவகை மீன்பிடி விசைப்படகுகளும், ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்பட்டு படகின் உறுதிதன்மை, எந்திரத்தின் குதிரைத்திறன் அளவு, படகின் நீள அகலம் ஆகியவை பதிவு சான்றுடன் சரிபார்க்கப்படும்.
இந்நிலையில் தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் படகுகள் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெளிமாவட்டங்களை சேர்ந்த மீன்வளத்துறை அலுவலர்களால் வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு செய்யப்பட உள்ளது.
இது குறித்து கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மீனவர்கள் தங்களது மீன்பிடி விசைப்படகுகளை தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஓழுங்குப்படுத்தும் சட்டத்தின் கீழ், கட்டாயம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஆய்வுக்கு உட்படுத்தப்படாத படகுகளுக்கு மானிய திட்டங்கள் நிறுத்தப்படுவதோடு, பதிவு சான்று ரத்து செய்யப்படும்.
பின்னொரு நாளில் ஆய்வு செய்ய இயலாது. நேரடி ஆய்வின்போது காண்பிக்கப்படாத மற்றும் பதிவு செய்யப்படாத படகுகள் கண்டறியப்பட்டால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மானியம் பெறுவதற்கான புத்தகம் தொலைதொடர்பு கருவிகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும். இவறறின் விவரங்களை ஆய்வு படிவத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும். ஆய்வின் போத, படகு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். படகுகளின் பதிவு சா ன்று, மீன்பிடி உரிமம், படகின் காப்புறுதி சான்றுகளின் அசல் ஆவணங்களுடன், நகல்களையும் அளிக்க வேண்டும்.
20 ஆண்டுகளுக்குமேலாக மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்தப்படும் படகுகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் இயக்கிப் பார்த்த பிறகே அனுமரி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் குறைதீர்கூட்டம் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை (19-ந் தேதி) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில் அறந்தாங்கி, மண்மேல்குடி மற்றும் ஆவுடையார் கோவில் வட்டங்களுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளலாம் என்று கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒருங்கிணைந்த ஒன்றிய அ.தி.மு.க சார்பில் பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழகச் செயலாளரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் கலந்து கொண்டு கோடைகால தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், வெள்ளரி, தர்பூசணி, நீர் மோர் ஆகியவற்றை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நார்தாமலை ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ரூ.60 லட்சத்தில் உழவர் சந்தை கட்டுமானப்பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை பொன்னமராவதி ஒன்றியம் தொட்டியம்பட்டி ஊராட்சியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் உழவர் சந்தை கட்டுமானப்பணிக்கான பூமிபூஜை மற்றும் காரையூரில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் விதை சேமிப்பு கிடங்கு கட்டடப்பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
விழாவிற்கு கலெக்டர் கவிதா ராமு தலைமைவகித்தார். மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பங்கேற்று தொட்டியம்பட்டி ஊராட்சியில் ரூ 60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள உழவர்சந்தை கட்டுமானப்பணிக்கான பூமிபூஜை மற்றும்
காரையூர் ஊராட்சியில் ரூ 38 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் விதை சேமிப்பு கிடங்கு கட்டடப்பணிக்கான பூமி பூஜையை தொடங்கிவைத்தார்.
விழாவில் பொன்னமராவதி ஒன்றியக்குழு தலைவர் சுதா அடைக்கலமணி, வேளாண் விற்பனை மற்றும் வணிக துணை இயக்குனர் சங்கரலெட்சுமி, வேளாண்மைத்துறை துணை இயக்குனர் மோகன்ராஜ், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் செல்வம்,
உதவி செயற்பொறியாளர் வெற்றிவேல் பாண்டியன், தி.மு.க. நகர செயலர்அழகப்பன், பொன்னமராவதி வட்டாட்சியர் ஜெயபாரதி, பேரூராட்சி செயல் அலுவலர் மு.செ.கணேசன் ஒன்றிய ஆணையர்கள் தங்கராஜூ, வை.சதாசிவம்,
தொட்டியம்பட்டி ஊராட்சிமன்ற துணைத்தலைவர் சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொட்டியம்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் கீதா சோலையப்பன் நன்றி கூறினார்.
லாரிகளை அடித்து நொறுக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் சீகம்பட்டியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 32). இவர் தனது லாரியை சந்தையில் நிறுத்திவைத்திருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த 2 பேர் நாகராஜனுடன் தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த அந்த 2 பேரும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரிகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
இச்சபம்வம் தொடர்பாக வந்த புகாரின் பேரில் டவுன்போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தப்பேட்டையை சேர்ந்த ஆனந்த்(21), மேலஐந்தாம் வீதியை சேர்ந்த நவீன் (21) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






