என் மலர்
உள்ளூர் செய்திகள்

பூமி பூஜை நடைபெற்ற போது எடுத்தப்படம்.
ரூ.60 லட்சத்தில் உழவர் சந்தை கட்டுமானப்பணிக்கான பூமிபூஜை
ரூ.60 லட்சத்தில் உழவர் சந்தை கட்டுமானப்பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை பொன்னமராவதி ஒன்றியம் தொட்டியம்பட்டி ஊராட்சியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் உழவர் சந்தை கட்டுமானப்பணிக்கான பூமிபூஜை மற்றும் காரையூரில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் விதை சேமிப்பு கிடங்கு கட்டடப்பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
விழாவிற்கு கலெக்டர் கவிதா ராமு தலைமைவகித்தார். மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பங்கேற்று தொட்டியம்பட்டி ஊராட்சியில் ரூ 60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள உழவர்சந்தை கட்டுமானப்பணிக்கான பூமிபூஜை மற்றும்
காரையூர் ஊராட்சியில் ரூ 38 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் விதை சேமிப்பு கிடங்கு கட்டடப்பணிக்கான பூமி பூஜையை தொடங்கிவைத்தார்.
விழாவில் பொன்னமராவதி ஒன்றியக்குழு தலைவர் சுதா அடைக்கலமணி, வேளாண் விற்பனை மற்றும் வணிக துணை இயக்குனர் சங்கரலெட்சுமி, வேளாண்மைத்துறை துணை இயக்குனர் மோகன்ராஜ், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் செல்வம்,
உதவி செயற்பொறியாளர் வெற்றிவேல் பாண்டியன், தி.மு.க. நகர செயலர்அழகப்பன், பொன்னமராவதி வட்டாட்சியர் ஜெயபாரதி, பேரூராட்சி செயல் அலுவலர் மு.செ.கணேசன் ஒன்றிய ஆணையர்கள் தங்கராஜூ, வை.சதாசிவம்,
தொட்டியம்பட்டி ஊராட்சிமன்ற துணைத்தலைவர் சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொட்டியம்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் கீதா சோலையப்பன் நன்றி கூறினார்.
Next Story






