என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தை திருமணம் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நாடகம் நடைபெற்ற காட்சி.
    X
    குழந்தை திருமணம் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நாடகம் நடைபெற்ற காட்சி.

    குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

    புதுக்கோட்டை அருகே சைல்டு லைன் அமைப்பு சார்பில் குழந்தை திருமணங்கள் தடுப்பு குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை அடுத்த செவ்வாய்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சைல்டு லைன் அமைப்பு சார்பில் குழந்தைகள் திருமணம் தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் விஜயரவி பல்லவராயர் தலைமை தாங்கினார். இதில் பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வட்டாட்சியர் விஸ்வநாதன் பங்கேற்று  சிறப்புரையாற்றினார். 

    குழந்தை திருமணம் தடுப்பது குறித்து சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோதிராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகதேவி, ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஹேமலதா ஆகியோர் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஊர் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசினர்.

    மேலும் நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொது மக்களுக்கு குழந்தை திருமணம் தடுப்பது குறித்து நாடகம் மூலம் நடித்துக் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

    இந்நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×