என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னமராவதியில் நடைபெற்றுவரும் சோழீஸ்வரர் கோவில் திருப்பணியை விரைந்து முடிக்க கோரி பொதுமக்கள் சார்பாக ஆளுநர்
    X
    பொன்னமராவதியில் நடைபெற்றுவரும் சோழீஸ்வரர் கோவில் திருப்பணியை விரைந்து முடிக்க கோரி பொதுமக்கள் சார்பாக ஆளுநர்

    தாய் மொழியை மதிக்க வேண்டும்: புதுச்சேரி கவர்னர் தமிழிசை வலியுறுத்தல்

    நம்முடைய தாய் மொழி தமிழை போல் மற்றவர்களின் தாய் மொழியையும் மதிக்க வேண்டும் என்று புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை கேட்டுக்கொண்டுள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் பொன்னமராவதியில் உள்ள பழமை வாய்ந்த சோழீஸ்வரர் கோவிலில் வழிபாடு செய்து அங்கு நடைபெறும் திருப்பணிகள் குறித்து கேட்டறிந்தார். 

    அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவிலில் நடைபெறும் திருப்பணி மிக மந்தமாக நடைபெறுவதாகவும், அந்த பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்தனர்.

    பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: 

    ஜிப்மரில் பொதுமக்களுக்கான சுற்றறிக்கை தமிழில் தான்முதன்மைப்படுத்த வேண்டும் என்று உள்ளது, அதை நான் தெளிவு படுத்தி விட்டேன். அதுவும் முதல் வரி தமிழிலும், இரண்டாவது வரி ஆங்கிலத்திலும், மூன்றாவது வரி இந்தியிலும் இருக்க வேண்டும் என்று உள்ளது. ஜிப்மரில் எந்த இடத்திலேயும் இந்தி திணிக்கப்படவில்லை. 

    அங்கு மட்டுமல்ல புதுச்சேரியில் எந்த இடத்திலும் இந்தி திணிக்க படாது. அவர்களாக விருப்பப்பட்டு கற்றுக்கொண்டால் அதை யாரும் தடை செய்யப் போவதில்லை. அதே கொள்கைதான் நமக்கும். உண்மையை புரிந்து கொள்ளாமல் நோயாளிகளுக்கு தடை ஏற்படும் என்று தெரிந்த பின்பும் தினமும் ஜிப்மர் வாசலில் நின்று போராட்டம் செய்வது, ஒலிபெருக்கிகளை வைத்து நோயாளிகளை தொந்தரவு செய்வது கூடாது என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். 

    அதற்காக டுவிட்டரில் தமிழ் பற்று கிடையாதா நீ என்ன இந்தி இசையா என்றெல்லாம் எழுதுகின்றனர். எங்களை விட யாரும் தமிழ்ப்பற்றுடன் இருக்க முடியாது என்ற அளவிற்கு நாங்கள் தமிழ் பற்று உடையவர்கள். தமிழில் பதவி ஏற்று தமிழில் ஆளுநர் உரையை ஆற்றி இருக்கிறோம். எப்போதுமே நம் மொழி மீது அன்பும் பாசமும் இருக்க வேண்டும். 

    அதேபோல் இன்னொரு மொழி மீது எதிர்ப்பு இருக்கக்கூடாது. ஏனென்றால் அது இன்னொருவரின் தாய்மொழி, நமது தாய்மொழியை மதிப்பது போலவே இன்னொருவரின் தாய் மொழியையும் மதிக்க வேண்டும். அந்த மொழியைக் கற்கிறோமா இல்லையா என்பது இரண்டாவது பட்சம். இது இல்லாமல் புதுச்சேரியில் சில கட்சிகள் இதை எதிர்ப்பு கோஷமாக வெளிப்படுத்தி பிரிவினையை ஏற்படுத்தும் அளவிற்கு நடந்து கொள்வது தவறு என்பது எனது கருத்து. 

    தமிழ் மொழி தான் உயரிய மொழி, தொன்மையான மொழி, நமது தாய்மொழி. இன்னொரு மொழியை நாம் குறை கூறுவது மூலமாகவோ வஞ்சிப்பது மூலமாகவோ இன்னொரு சகோதரத்துவ மாநிலத்தை நாம் துன்பப்படுத்துகிறோம், கஷ்டப்படுத்துகிறோம். அதை இல்லாமல் நம் தமிழர்கள் அனைவரையும் மதிக்க பழகியவர்கள். தமிழ் கலாச்சாரம் என்பது உலக அளவில் மதிக்கக் கூடிய ஒன்று. அதனால் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், நம் மொழியை கொண்டாட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×