என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    முககவசம் அணியாத 79 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.15 ஆயிரத்து 800-ம், சமூக இடைவெளியை பின்பற்றாத 2 பேருக்கு தலா ரூ.500 வீதம் ஆயிரம் ரூபாயும் போலீசார் அபராதமாக விதித்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று, தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி சாலையில் தேவையில்லாமல் இரு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த 132 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு, அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் நேற்று முககவசம் அணியாத 79 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.15 ஆயிரத்து 800-ம், சமூக இடைவெளியை பின்பற்றாத 2 பேருக்கு தலா ரூ.500 வீதம் ஆயிரம் ரூபாயும் போலீசார் அபராதமாக விதித்தனர்.
    திருச்சி அரசு தலைமை ஆஸ்பத்திரி டாக்டர்களின் அலட்சியத்தால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 45 வயது ஆண் ஒருவர் இறந்து விட்டதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் அருகே உள்ள அருமடல் கிராமத்தை சேர்ந்தவர் வி.அய்யாசாமி (வயது 45). இவர் மூச்சுச்திணறல் காரணமாக கடந்த 20-ந் தேதி பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இந்த நிலையில் அவரது இடது கண்ணில் வீக்கம் திடீரென ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் திருச்சி அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு கடந்த 29-ந்தேதி மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 30-ந்தேதி அய்யாசாமி பரிதாபமாக இறந்தார்.

    ஆனால் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இருந்து ஒரு டாக்டர் கூட அவரை வந்து பரிசோதித்து பார்க்கவில்லை என அய்யாசாமியின் உறவினர் ராமகிருஷ்ணன் புகார் தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, அவருக்கு நல்ல சிகிச்சை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் திருச்சி அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு மாற்றினோம்.

    ஆனால் 2 நாட்கள் எந்த டாக்டரும் வந்து பார்க்க வில்லை. இறந்த பின்னரே டாக்டர்கள் வந்தனர். அய்யா சாமிக்கு கறுப்பு பூஞ்சை பாதிப்பா? அல்லது வேறு பிரச்சினையா? என்று எங்களுக்கு தெரியவில்லை என்றார்.

    இதுபற்றி அரசு ஆஸ்பத்திரி மூத்த டாக்டர் ஒருவர் கூறும் போது, அய்யாசாமிக்கு கறுப்பு பூஞ்சை பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஸ்கேன் எடுக்க டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். அதற்கு முன்னதாக அவர் இறந்து விட்டார் என கூறினார்.

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து சளி, காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நிஷா பார்த்திபன் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் பார்த்திபன். வட மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் பார்த்திபன் பெரம்பலூர் வந்திருந்தார். அப்போது முதல் அவருக்கு லேசான உடல் நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சலும் தொடர்ந்து இருந்ததால் அவருக்கு ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

    இதற்கிடையே பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான நிஷா பார்த்திபனுக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து சளி, காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இருவரும் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று முன்தினம் பெரம்பலூரில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் எஸ்.பி. நிஷா பார்த்திபன் கலந்து கொண்டார்.

    அதேபோல் நேற்றும் வாகன சோதனை ஆய்வு உள்ளிட்ட பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். இந்த நிலையில்தான் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    எனவே அவருடன் பணியாற்றிய மற்ற போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் மீன், இறைச்சி கடைகளில் மறைமுக விற்பனை அமோகமாக நடைபெற்றது.
    பெரம்பலூர்:

    தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் பரவலை கட்டுப்படுத்த தற்போது தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடந்த 24-ந்தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கில் மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள், மீன், இறைச்சி கடைகளை திறக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக பொதுமக்களுக்கு மளிகை, காய்கறிகள், பழங்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தியதற்கு முந்தைய நாளான கடந்த 23-ந் தேதி மீன், இறைச்சி கடைகள் திறந்திருந்தன. அதன்பிறகு அந்த கடைகள் மூடப்பட்டதால் மீன், இறைச்சி விற்பனை செய்யப்படாமல் இருந்தது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலான வீட்டில் அசைவம் சமைப்பது வழக்கம். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரம்பலூர் மாவட்ட அசைவ பிரியர்கள் ஊரடங்கை மீறியும் போலீசார் கண்ணில் படாமலும் மீன், இறைச்சி கடைகளை தேடி அலைந்தனர்.

    பெரம்பலூர் நகர்ப்பகுதியில் மீன், இறைச்சி கடைகள் சிலவற்றில் மறைமுக விற்பனை அமோகமாக நடைபெற்றது. அங்கு மீன், இறைச்சி ஆகியவற்றை பொதுமக்கள் வாங்கிச்சென்றனர். கிராமப்புறங்களில் சில மீன், இறைச்சி கடைகள் வழக்கம்போல் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை.
    அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் கொரோனாவுக்கு 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 563 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    பெரம்பலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் மொத்தம் 256 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 10,766 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த நிலையில் கொரோனாவுக்கு அரியலூர் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 84, 59, 48 வயதுடைய ஆண்கள் 3 பேரும், 65, 38 வயதுடைய பெண்கள் 2 பேரும் என மொத்தம் 5 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 8,061 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,601 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற ஜெயங்கொண்டம் வேலாயுதநகரை சேர்ந்த 85 வயது முதியவரும், 65 வயது மூதாட்டியும், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீனாம்படி சுடுகாட்டில் உள்ள நவீன எரிவாயு தகன மேடையில் தகனம் செய்யப்பட்டது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 143 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 86 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 35 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 43 பேரும் என மொத்தம் 307 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 7,931 ஆக உயர்ந்துள்ளது.

    இதில் ஏற்கனவே 54 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 83 வயதுடைய மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.

    மருத்துவமனைகளில் 5,031 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,845 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா பாதித்த 62 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 931 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
    பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 316 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 159 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 79 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 41 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 37 பேரும் என மொத்தம் 316 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 7,623 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஏற்கனவே 52 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குன்னம் தாலுகா பரவாய் மேற்கு தெருவை சேர்ந்த 75 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.

    மருத்துவமனைகளில் 4,719 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,851 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா பாதித்த 62 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 775 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.
    பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 274 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 123 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 60 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 53 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 38 பேரும் என மொத்தம் 274 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 7,305 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஏற்கனவே 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மருத்துவமனைகளில் 4,516 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,737 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா பாதித்த 48 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் 1,025 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று 1,650 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 104 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியும் என மொத்தம் 1,754 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 48,082 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர்கள் அவ்வப்போது பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, முன்கள பணியாளர்கள், 45 வயதை கடந்தவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தற்போது 18 வயது முதல் 44 வயதுடையோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி அந்தந்த மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு சிகிச்சை மையங்கள், தனியார் மருத்துவமனைகளில் போடப்பட்டு வருகிறது.

    ஆரம்ப கால கட்டங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டாத பொதுமக்கள் தற்போது அதன் அவசிய அவசரம் கருதி தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் கொரோனா தடுப்பூசி போடும் மையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்டவர்களுக்கு பெரம்பலூர் அஸ்வின் ஓட்டல் கூட்ட அரங்கிலும், வேப்பந்தட்டை வட்டாரத்திற்கு உட்பட்டவர்களுக்கு வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், வேப்பூர் வட்டாரத்திற்கு உட்பட்டவர்களுக்கு குன்னம் அரசு உயர்நிலைப்பள்ளி, வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் லப்பைக்குடிகாடு பேரூராட்சி அலுவலகம் ஆகிய இடங்களிலும், ஆலத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்டவர்களுக்கு கொளக்காநத்தம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், பெரம்பலூர் மாவட்டத்தில் 28 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், ஒரு நகர்ப்புற சுகாதார நிலையத்திலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

    அரியலூர் மாவட்டத்தில் அனைத்து வட்டார தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்று வருகிறது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் 18 முதல் 44 வயது வரை உள்ள 3,444 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களது வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    ஆலம்பாடி, நாட்டார்மங்கலம் கிராமங்களில் நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதேபோல அரியலூர் கலெக்டர் ரத்னாவும் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 18 முதல் 44 வயதுடைய 4,153 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மருத்துவ துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இதேபோல அரியலூர் மாவட்டத்தில் 3,514 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    குன்னம் அரசு மேல்நிலைப்பள்ளி, வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், லப்பைகுடிகாடு பேரூராட்சி அலுவலகம் ஆகிய 3 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. குன்னத்தில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஊராட்சி தலைவர் குன்னம் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மரியதாஸ், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பிரபா செல்லப்பிள்ளை மற்றும் பலர் கலந்து கொண்டனா்.

    வாகன சோதனையில் கட்டுப்பாடுகளை மீறிய முக கவசம் அணியாத, இ-பதிவு இல்லாதவர்கள் ஆகியோரிடம் இருந்து மொத்தம் 22 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    மங்களமேடு:

    முழு ஊரடங்கு அமலில் உள்ளதை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் அகரம் சீகூர் மற்றும் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை இணைக்கும் வெள்ளாற்று பாலம் அருகில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை மங்களமேடு போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ் சோதனைச்சாவடியில் ஆய்வு செய்தார். அப்போது மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனையில் கட்டுப்பாடுகளை மீறிய முக கவசம் அணியாத, இ-பதிவு இல்லாதவர்கள் ஆகியோரிடம் இருந்து மொத்தம் 22 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வழியாக வந்த அனைவருக்கும் கபசுர குடிநீர், கொரோனா குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    தலை பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுத்த 12-வது நாளில் கொரோனா தொற்றால் தாய் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    பெரம்பலூர்:

    கொரோனாவின் 2-வது அலை இளம் வயதினரை அதிகம் தாக்கி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தியின்மையே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இதனால் சிறுவர்கள் மற்றும் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகமாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

    அதேபோல் கர்ப்பிணிகளும் பாதிக்கப்பட்டு பலர் மீண்டுள்ளனர். இதில் பெரம்பலூரில் குழந்தை பெற்றெடுத்த 12-வது நாளில் கொரோனா தொற்றால் இளம்பெண் பலியானார்.

    பெரம்பலூர் மாவட்டம் நொச்சியம் அருகே உள்ள செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது மனைவி ரஞ்சிதா (வயது 26). இவர்களுக்கு கடந்தாண்டு திருமணமானது.

    நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரஞ்சிதாவை அவரது உறவினர்கள் கடந்த 12-ந்தேதி தலை பிரசவத்திற்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து 14-ந்தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் டாக்டர்களின் கண்காணிப்பில் தொடர் சிகிச்சை பெற்று வந்தனர்.

    கோப்புப்படம்

    இந்த நிலையில் ரஞ்சிதாவுக்கு திடீர் மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதனால் தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியானது. இதனையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதும், அதிக மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி ரஞ்சிதா நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இருந்தபோதிலும் குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தலை பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுத்த 12- வது நாளில் கொரோனா தொற்றால் தாய் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் பரிதாபமாக இறந்தார். மேலும் 127 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 76 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 17 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 14 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 20 பேரும் என மொத்தம் 127 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 6,505 ஆக உயர்ந்துள்ளது.

    இதில் ஏற்கனவே 49 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா காரைப்பாடி கிராமத்தை சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் 4,021 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,434 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா பாதித்த 48 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1,037 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
    வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.
    வேப்பந்தட்டை:

    வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் கீதாராணி தலைமை தாங்கினார். ஒன்றிய குழுத்தலைவர் ராமலிங்கம் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் 18 வயதிற்கு மேல் 44 வயதிற்குள் உள்ள நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் அன்னமங்கலம், நெற்குணம் ஆகிய கிராமங்களில் இருந்து இளைஞர்கள் தானாக முன்வந்து ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். நேற்றைய தினத்தில் மட்டும் 55 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து ஒரு வாரம் நடக்கும் இந்த முகாமில் வேப்பந்தட்டை தாலுகாவை சேர்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோவன், முரளிதரன், ஊராட்சி மன்ற தலைவர் தனலெட்சுமி கலியமூர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் பிரேம்குமார், சுகாதார ஆய்வாளர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×