search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    பெரம்பலூர் எஸ்.பி.-கணவருக்கு கொரோனா

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து சளி, காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நிஷா பார்த்திபன் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் பார்த்திபன். வட மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் பார்த்திபன் பெரம்பலூர் வந்திருந்தார். அப்போது முதல் அவருக்கு லேசான உடல் நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சலும் தொடர்ந்து இருந்ததால் அவருக்கு ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

    இதற்கிடையே பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான நிஷா பார்த்திபனுக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து சளி, காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இருவரும் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று முன்தினம் பெரம்பலூரில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் எஸ்.பி. நிஷா பார்த்திபன் கலந்து கொண்டார்.

    அதேபோல் நேற்றும் வாகன சோதனை ஆய்வு உள்ளிட்ட பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். இந்த நிலையில்தான் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    எனவே அவருடன் பணியாற்றிய மற்ற போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×