என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 274 பேருக்கு கொரோனா

    பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 274 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 123 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 60 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 53 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 38 பேரும் என மொத்தம் 274 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 7,305 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஏற்கனவே 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மருத்துவமனைகளில் 4,516 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,737 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா பாதித்த 48 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் 1,025 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று 1,650 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 104 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியும் என மொத்தம் 1,754 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 48,082 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    Next Story
    ×