என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே விவசாயி மா்மமான முறையில் உயிரிழந்தாா்.
    பெரம்பலூர்:



    வேப்பந்தட்டை வட்டம், வெங்கனூா் பாரதிநகரைச் சோ்ந்தவா் க. கோவிந்தராஜ் (வயது 63). விவசாயியான இவா், தனது வயலில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கம்பு பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக சென்றிருந்தார்.


    இரவு நீண்ட நேரமாகியும் கோவிந்தராஜ் வீட்டுக்கு வராததால், சந்தேகமடைந்த குடும்பத்தினா், பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், வயலுக்குச் சென்று பாா்த்தனா்.  அப்அபோது அங்கு கோவிந்தராஜ் இரு கைகளிலும் லேசான காயத்துடன் உயிரிழந்து கிடந்தாா்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக அரும்பாவூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
    தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார், 

    கோவிந்தராஜை யாராவது கொலை செய்திருப்பார்களா அல்லது மாரடைப்பு ஏற்பட்டு இருந்திருப்பாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்தில் சமூக நல்லிணக்க விழா நடை பெற்றது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவ னங்களின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் சமூக நல்லிணக்க விழா நடந்தது.

    விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்து பேசுகையில், இது ஒரு மத நல்லிணக்க விழா.

    எவ்வித வேறுபாடும் இல்லாமல் உலகுக்கு ஒற்றுமையை வலியுறுத்து வதற்காக நடத்தப்படும் விழா சமத்துவம்,சமூக நீதி, விடுதலை புரட்சிகரதத்துவங்களை இம்மண்ணில் நிலைநிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.கல்வி நிறுவன செயலா ளர் நீலராஜ் முன்னிலை வகித்தார்.


    விழாவில் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் முஹம்மதுமுனீர் ஹஜ்ரத், மாவட்ட அரசு காஜி அப்துல்சலாம்தாவூதி, மாவட்ட ஐக்கிய ஜமாத் பேரவை தலைவர் சுல்தான் இப்ராகீம், லெப்பைக்குடிக்காடு

    மேற்கு மஹல்லம் தலை வர்சுல்தா   ன்மொய்தீன்,சமூக நீதி படைப்பாளர்கள் சங்க மாநில செயலாளர் தாஹீர்பாட்சா. நகராட்சி முன்னாள் துணை தலைவர் மோகன்ராஜ் உட்பட பலர் பேசினர்.  

    பின்னர் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில் ஏராளமான இஸ்லாமியர் கலந்து கொண்டனர்.


    பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்தில் இன்று விவாகரத்து வழக்கில் ஆஜராக வந்த மனைவியை, கணவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ் (வயது 47). இவரது மனைவி சுதா (40). கருத்து வேறுபாடு காரணமாக தம்பதியினர் சில காலம் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு 15 வயதில் ஒரு மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    இதற்கிடையே அவர்கள் தங்களுக்கு விவாகரத்து வழங்க வேண்டி பெரம்பலூர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பான வழக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக பெரம்பலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் விசாரணைக்காக சுதா மற்றும் காமராஜ் ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.

    அப்போது நீதிமன்ற நுழைவாயிலில் எதிர்பாராதவிதமாக காமராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுதாவை சராமரியாக உடலில் பல இடங்களில் குத்தினார்.

    இது கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை பார்த்த நீதிமன்ற பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் அழகேசன் காமராஜை தடுக்க முயன்றார். இதில் அவருக்கும் பலத்த கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. மேலும் காமராஜூம் படுகாயம் அடைந்தார்.

    உடனடியாக மற்றவர்கள் அவர்களை மீட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த சுதாவை அருகிலுள்ள வழக்கறிஞர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் காயம் அடைந்த காமராஜ், போலீஸ்காரர் அழகேசன் ஆகியோரும் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருச்சி சோமரசம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (60). இவரது கணவர் சுரேஷ் (66), ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சுரேஷ், ராஜேஸ்வரியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் ராஜேஸ்வரி கோர்ட்டில் தனக்கு தன்னுடைய கணவர் தன்னை கவனித்துக் கொள்ள பணம் தர வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு திருச்சி கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கானது ராஜேஸ்வரிக்கு சாதகமாக முடிந்தது.

    அப்போது சுரேஷ் ராஜேஸ்வரி குறிப்பிட்ட தொகையை காசோலை மூலமாக வழங்குவதாக ஒப்புதல் அளித்து காசோலை வழங்கியுள்ளார். ஆனால் அது பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. இதனால் மீண்டும் ராஜேஸ்வரி சுரேஷ் மீது நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளார். அது சம்பந்தமாக கடந்த 26ந்தேதி திருச்சி நீதிமன்றத்திற்கு ராஜேஸ்வரி வந்து விட்டு வீட்டிற்கு செல்லும் பொழுது திருச்சி அரசு மருத்துவமனை அருகே அதிக ஆத்திரத்தில் இருந்த சுரேஷ் புதிய அரிவாளால் தன் மனைவி என்று கூட பாராமல் 7 இடங்களில் சரமாரியாக வெட்டினார்.

    இதனால் ராஜேஸ்வரி நிலைதடுமாறி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவியை கொலை முயற்சி செய்யும் வகையில் 7 இடங்களில் அரிவாளால் வெட்டிய ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    கலந்தாய்வு மூலம் பணியிடங்களுக்கு சென்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    பெரம்பலூர்:

    பள்ளிக்கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடந்த பணி நிரவல் கலந்தாய்வு மூலம் தேவையான  பணி யிடங்களுக்கு சென்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கவேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி, முது நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.


    இது குறித்து அச்சங்க மாநில தலைவர் மகேந்திரன், மாநில பொதுசெயலாளர் சுந்தரமூர்த்தி, மாநில பொரு ளாளர் துரைராஜ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரி வித்துள்ளதாவது, பள்ளிக்க ல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடந்த பணி நிரவல் கலந்தாய்வு மூலமாக தேவை பணியிட ங்களுக்கு சென்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு 35 நாட்களை கடந்தும் மாத ஊதியம்  இது நாள் வரை வழங்கப்படவில்லை.

     
    இது குறித்து நிர்வாகத்தை தொடர்ந்து நேரிலும், தெலைபேசி வாயிலாகவும் மற்றும் கடிதம் மூலமாக மாத ஊதியம் பெறுவதற்கு பணியிடங்களை தோற்று வித்த அரசாணைகள் அனைத்தையும் அச்செய லியில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே சாத்தி யம் என்கின்றனர்.

    எனவே மேற்கண்டவாறு பதிவேற்றம் செய்திடுவதில் உள்ள இடர்பாட்டை விரைந்து களைந்து இந்த மாத ஊதியமும், பெற இயலாத பட்சத்தில் இரண்டு மாதமாக ஊதியமின்றி தங்களுக்கான தேவைகளை நிறைவேற்ற இயலாது தடுமாற்றத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் பெற்றிட வழிவகை செய்யவேண்டும் என தெரிவித்திருந்தனர்.
    குன்னம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது கழிவறை அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில்  வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில்  பணி யாற்றும் ஊழியர்களுக்கு மட்டும் கழிவறை உள்ளது என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இந்த அலுவலகத்திற்கு தின ம்தோறும் 500 மேற்பட்டோர் தங்களுக்கு தேவையான சான்றிதழ்கள் வாங்கவும் மற்றும் வருவாய் வட்டாட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளிக்க வரும் பட்சத்தில் பொது கழிவறை இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர்.   

    மேலும் குன்னம் வரு வாய் வட்டாட்சியர்அலுவ லகத்தில் உள்ள 2 கழி வறைகளும் சரியான பரா மரிப்பின்றி முள்பு தர்கள் அடங்கி பயன்படுத்த முடி யாத நிலையில் அமைந்துள்ளது.  

    எனவே மாவட்ட  கலெக்டர் குன்னம் வட்டாட்சி யர் அலுவலகத்திற்கு பொது மற்றும் மாற்றுத்தி றனாளிகளுக்கான கழிப்பறை அமைத்து தர வேண்டும் என்றும், சிதலமடைந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறையை சீரமைத்து தர  வேண்டும் என  பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இறந்த தொழிலாளியின் உடலை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    பெரம்பலூர்:

    குன்னம் அடுத்துள்ள கீழப்புலியூர் சிலோன் காலனியை சேர்ந்தவர் மதியழகன் (வயது36) இவரிடம் கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் ம பொடையூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் அங்கமுத்து (45) 3 மாதமாக தங்கி வேலை செய்து வந்தார். 

    இந்நிலையில் நேற்று உடல் நல குறைவால் அங்கமுத்து இறந்துவிட்டார். இவரது உடலை மதியழகன் கீழப்புலியூர் உள்ள சுடுகாட்டில் ஊர் பொது மக்களிடம்கூறாமல் தானே அடக்கம் செய்ய சென்றுள்ளார் இதை அறிந்த ஊர் மக்கள் அவ்வாறு செய்வதை எதிர்த்து இவருடன் தகராறில் ஈடுபட்டனர். 

    பின்னர் இதுகுறித்து மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மங்களமேடு காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலட்சுமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்  சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உடலை கைப்பற்றி 

    பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணையில் அங்கமுத்து உறவினர்கள் குறித்து தகவல் தெரியாததால் தானே புதைக்க ஏற்பாடு செய்ததாகவும் மதியழகன் கூறியதாக தெரிகிறது. மங்களமேடு போலீஸார் அங்கமுத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    பெரம்பலூர் :

    பெரம்பலூர் அருகே செங்குணம் கை.காட்டி பகுதியில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இலவசமாக வரும் 29ந்தேதி நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து அந்த மையத்தின் தலைவர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் 29ந்தேதி நாட்டு கோழி வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி நடைபெற உள்ளது.

    இப்பயிற்சியில் நாட்டு கோழி இனங்கள் மற்றும் வளர்க்கும் முறை, கொட்டகை அமைக்கும் முறை, தீவன மேலாண்மை, கோழி குஞ்சுகளை பராமரிக்கும் முறை,  இனப்பெருக்க மேலாண்மை மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    பயிற்சியில் சேர விரும்பும் விவசாயிகள், பண்ணை மகளிர் மற்றும் இளைஞர்கள் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு நேரிலோ அல்லது 93853 07022 தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு பெயர் பதிவு செய்து கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
    அ.தி.மு.க.கட்சி அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான அமைப்பு தேர்தல் நடந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் உள்ள மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான அமைப்பு தேர்தல் நேற்று நடந்தது. பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர்களான தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன்,

    எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் சத்யா ஆகியோர் மாவட்ட நிர்வாகிகள் பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர்களிடமிருந்து வேட்பு மனுவினை பெற்றனர்.

    மாவட்ட செயலாளர் பதவிக்கு ரூ. 25 ஆயிரமும், மாவட்ட அவைத்தலைவர், இணை செயலாளர், துணை செயலாளர்,
    பொருளாளர், பொதுக்குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு ரூ. 5 ஆயிரமும் பணம் கட்டி தேர்தலில் போட்டியிடுவோர் வேட்பு மனுவினை அளித்தனர்.

    இதில் மாவட்ட செயலாளர் பதவிக்கு தற்போதைய மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஆர்,டி. இராமச்சந்திரன் உட்பட பலர் வேட்பு மனு அளித்தனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்எ தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் ராஜபூபதி, ஒன்றிய செயலாளர்கள் செல்வக்குமார், கர்ணன், சிவப்பிரகாசம், வக்கீல் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    பல்துறை பணிவிளக்க கண்காட்சியினை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்துவைத்தார்.
    பெரம்பலூர்:

    செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் 75-வது சுதந்திர  தின விழா  சுதந்திரத்திருநாள் அமுதப்பெருவிழாவினை முன்னிட்டு பெரம்பலூர் பாலக்கரை பகுதியில்  அமைக்கப்பட்டுள்ள  பல்துறை  பணிவிளக்க  கண்காட்சியினை போக்குவரத்துத்துறை  அமைச்சர்  எஸ்.எஸ்.சிவசங்கர் மாவட்ட கலெக்டர் ப.ஸ்ரீவெங்கட பிரியா ஆகியோர் திறந்து வைத்து  பார்வையிட்டனர். பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

    செய்தி மக்கள் தொடர்புத்துறை, போக்குவரத்துத்துறை, காவல்துறை வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பட்டுவளர்ச்சித் துறை, கனிமவளத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டஅரசுத்துறைகளின் அரங்குகளை துவக்கி வைத்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன.

    மேலும் அரசின் திட்டங்கள் குறித்த விளக்க பதாகைகளை பார்வையிட்டு, பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 328 நபர்களுக்கும் 10 வேளாண்மை குழுவினர்களுக்கும் என  ரூ.80.40 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்.
    போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
    பெரம்பலூர் :

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஹிந்து நாடார் கல்லூரியில், கல்லூரிகளுக்கிடையேயான பல்வேறு போட்டிகள் கடந்த 23-ந்தேதி நடைபெற்றது. இதில், பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகவியல் துறையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    இதில், வணிகவியல் தொடர்பான சைகை நாடகம், குறும்படம், ரங்கோலி, வணிகம் தொடர்பான வினாடி வினா, மணப்பெண் அலங்காரம், நெருப்பில்லா சமையல், புகைப்படம் எடுத்தல், கழிவுகளிலிருந்து கலைப் பொருள்கள் தயாரிப்பு உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

    இப் போட்டிகளில், நெருப்பில்லா சமையல் மற்றும் புகைப்படம் எடுத்தல் ஆகிய போட்டிகளில் 2 ஆம் இடத்தையும், குறும்படத்தில் 3 ஆம் இடத்தையும் வென்று பரிசுகளும், சான்றிதழ்களும் பெற்றனர். இதையடுத்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தர் சீனிவாசன், செயலாளர் நீலராஜ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியின் போது, கல்லூரி முதல்வர் முனைவர் வெற்றிவேலன், துணை முதல்வர் பேராசிரியர் ரவி, வணிகவியல், வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவர்கள் முனைவர் கார்த்திகா, முனைவர் குமார் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

    தொழில் போட்டி உள்ளிட்ட காரணங்களால் மர்மநபர்கள் ரெங்கராஜை வெட்டி கொலை செய்துவிட்டு இதனை ஒரு விபத்து போல் நாடகம் ஆடுவதற்காக இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தி விட்டு சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
    பாடாலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கராஜ் (வயது 47). அ.தி.மு.க. பிரமுகரான இவர் நாரணமங்கலம் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் ஆவார். அரசு ஒப்பந்த பணிகளையும் மேற்கொண்டு வந்தார்.

    இந்த நிலையில் ரெங்கராஜ் தொழில் சம்பந்தமாக தனக்கு வேண்டப்பட்டவரை சந்திப்பதற்கு ஆலத்தூர் கேட் பகுதிக்கு வந்திருந்தார். பின்னர் தனது பணிகளை முடித்து விட்டு மீண்டும் அங்கிருந்து வீட்டுக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றார்.

    ஆலத்தூர் கேட்டில் இருந்து குறுக்கு பாதையான காரை வழியாக நாரணமங்கலம் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வந்தது.

    இதனால் பதட்டம் அடைந்த அவரது மனைவி அருகில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் துணையோடு அக்கம்பக்கத்தில் பார்த்து வருமாறு கூறினார். இதையடுத்து அவர்களும் பல்வேறு இடங்களுக்கு தொடர்பு கொண்டு ரெங்கராஜ் குறித்து விசாரித்தனர். ஆனால் யாரும் தங்களுக்கு தெரியாது என்று கூறிவிட்டனர்.

    இந்த நிலையில் நாரணமங்கலம், காரை ஆகிய ஊர்களுக்கு இடைப்பட்ட குறுகிய சாலையில் ரெங்கராஜ் ரத்த வெளத்தில் பிணமாக கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாடாலூர் போலீசார் பார்த்த போது ரெங்கராஜ் உடலில் ஏராளமான காயங்கள் இருந்தன. மேலும் அவரது பின்னந்தலையில் அரிவாளால் வெட்டப்பட்டதற்கான அடையாளம் இருந்தது. ஆனால் இது விபத்துதான் என்று போலீசார் தெரிவித்தனர்.

    அதே நேரத்தில் அவரது இருசக்கர வாகனத்தின் வலது கைப்பிடி சேதமடைந்து காணப்பட்டது. அதன் மூலம் விபத்தில் ரெங்கராஜ் உயிரிழந்ததாக போலீசார் உறுதிபட கூறினர். ஆனால் அரிவாள் வெட்டு காயம் இருப்பதால் இது கொலை தான் என்று உறவினர்கள் மற்றும் நாரணமங்கலம் கிராம மக்கள் தெரிவித்தனர்.

    நள்ளிரவில் பொதுமக்கள் பலர் சம்பவ இடத்தில் திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தொழில் போட்டி உள்ளிட்ட காரணங்களால் மர்மநபர்கள் ரெங்கராஜை வெட்டி கொலை செய்துவிட்டு இதனை ஒரு விபத்து போல் நாடகம் ஆடுவதற்காக இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தி விட்டு சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    அதே வேளையில் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் இது கொலையா அல்லது விபத்தா? என்பது உறுதிப்படுத்தப்படும் என்றும், அதன் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை உடனடியாக தொடங்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
    வேப்பூர் அரசு கலை கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது.
    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், வேப்பூர் அரசு கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின 8-வது ஆண்டு விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு, கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசுகையில், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, பெண்களுக்கு திருமண உதவி திட்டம் என்று பல்வேறு திட்டங்களை 1989-ம் ஆண்டு தி.மு.க.ஆட்சியில் கருணாநிதி கொண்டு வந்தார்.

    தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் பெண்களுக்கு நகர பேருந்தில் இலவச பயணம் என்பது, இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

    மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து, 25 சதவிகிதம் பேர் மட்டுமே சேர்ந்து வந்த கல்லூரி படிப்புகளில், இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே கல்லூரி படிப்பை 50 சதவிகிதம் மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது என்றும் இந்திய அளவில் தமிழகம் கல்லூரி படிப்பில் மிகுந்த வளர்ச்சியை எட்டியுள்ளது.

    இப்படி மகளிர்களுக்காக எண்ணற்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவிகள் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பெண்களின் முன்னேற்றம் மற்றும் கல்லூரிப் படிப்பின் அவசியம் பற்றிப் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில், கலெக்டர் வெங்கட்பிரியா, கல்லூரி முதல்வர் மீனா, வேப்பூர் ஒன்றிய பெருந்தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, கவுன்சிலர் டாக்டர் அ.கருணாநிதி,  வேப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் தனம்பெரியசாமி, லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி தலைவர் ஏ.எஸ். ஜாஹிர் உசேன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வி.எஸ்.பெரியசாமி,

    வேப்பூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் மதியழகன், வேப்பூர் தெற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் சி.ராஜேந்திரன், ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் சன்.சம்பத், துணை அமைப்பாளர் வரகூர்.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×