என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த தற்போதைய மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன். அருகில் மு
அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான அமைப்பு தேர்தல்
அ.தி.மு.க.கட்சி அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான அமைப்பு தேர்தல் நடந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூரில் உள்ள மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான அமைப்பு தேர்தல் நேற்று நடந்தது. பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர்களான தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன்,
எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் சத்யா ஆகியோர் மாவட்ட நிர்வாகிகள் பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர்களிடமிருந்து வேட்பு மனுவினை பெற்றனர்.
மாவட்ட செயலாளர் பதவிக்கு ரூ. 25 ஆயிரமும், மாவட்ட அவைத்தலைவர், இணை செயலாளர், துணை செயலாளர்,
பொருளாளர், பொதுக்குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு ரூ. 5 ஆயிரமும் பணம் கட்டி தேர்தலில் போட்டியிடுவோர் வேட்பு மனுவினை அளித்தனர்.
இதில் மாவட்ட செயலாளர் பதவிக்கு தற்போதைய மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஆர்,டி. இராமச்சந்திரன் உட்பட பலர் வேட்பு மனு அளித்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்எ தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் ராஜபூபதி, ஒன்றிய செயலாளர்கள் செல்வக்குமார், கர்ணன், சிவப்பிரகாசம், வக்கீல் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






