search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேப்பூர் அரசு மகளிர் கல்லூரி ஆண்டு விழாவில் அமைச்சர் சிவசங்கர் பேசும் போது எடுத்தப்படம்.
    X
    வேப்பூர் அரசு மகளிர் கல்லூரி ஆண்டு விழாவில் அமைச்சர் சிவசங்கர் பேசும் போது எடுத்தப்படம்.

    வேப்பூர் அரசு கலை கல்லூரி ஆண்டு விழா

    வேப்பூர் அரசு கலை கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது.
    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், வேப்பூர் அரசு கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின 8-வது ஆண்டு விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு, கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசுகையில், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, பெண்களுக்கு திருமண உதவி திட்டம் என்று பல்வேறு திட்டங்களை 1989-ம் ஆண்டு தி.மு.க.ஆட்சியில் கருணாநிதி கொண்டு வந்தார்.

    தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் பெண்களுக்கு நகர பேருந்தில் இலவச பயணம் என்பது, இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

    மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து, 25 சதவிகிதம் பேர் மட்டுமே சேர்ந்து வந்த கல்லூரி படிப்புகளில், இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே கல்லூரி படிப்பை 50 சதவிகிதம் மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது என்றும் இந்திய அளவில் தமிழகம் கல்லூரி படிப்பில் மிகுந்த வளர்ச்சியை எட்டியுள்ளது.

    இப்படி மகளிர்களுக்காக எண்ணற்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவிகள் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பெண்களின் முன்னேற்றம் மற்றும் கல்லூரிப் படிப்பின் அவசியம் பற்றிப் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில், கலெக்டர் வெங்கட்பிரியா, கல்லூரி முதல்வர் மீனா, வேப்பூர் ஒன்றிய பெருந்தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, கவுன்சிலர் டாக்டர் அ.கருணாநிதி,  வேப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் தனம்பெரியசாமி, லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி தலைவர் ஏ.எஸ். ஜாஹிர் உசேன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வி.எஸ்.பெரியசாமி,

    வேப்பூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் மதியழகன், வேப்பூர் தெற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் சி.ராஜேந்திரன், ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் சன்.சம்பத், துணை அமைப்பாளர் வரகூர்.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×