என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  FILEPHOTO
  X
  FILEPHOTO

  விவசாயி மர்மச்சாவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே விவசாயி மா்மமான முறையில் உயிரிழந்தாா்.
  பெரம்பலூர்:  வேப்பந்தட்டை வட்டம், வெங்கனூா் பாரதிநகரைச் சோ்ந்தவா் க. கோவிந்தராஜ் (வயது 63). விவசாயியான இவா், தனது வயலில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கம்பு பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக சென்றிருந்தார்.


  இரவு நீண்ட நேரமாகியும் கோவிந்தராஜ் வீட்டுக்கு வராததால், சந்தேகமடைந்த குடும்பத்தினா், பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், வயலுக்குச் சென்று பாா்த்தனா்.  அப்அபோது அங்கு கோவிந்தராஜ் இரு கைகளிலும் லேசான காயத்துடன் உயிரிழந்து கிடந்தாா்.

  இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக அரும்பாவூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
  தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார், 

  கோவிந்தராஜை யாராவது கொலை செய்திருப்பார்களா அல்லது மாரடைப்பு ஏற்பட்டு இருந்திருப்பாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×