என் மலர்
நீலகிரி
- உறைபனியுடன் கடும் குளிரும் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
- அதிகாலையில் பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பனிக்காலம் நிலவும்.
குளுகுளு சீதோஷ்ண காலநிலை நிலவும் ஊட்டியில் கடந்த மாதம் இறுதியில் இருந்து உறைபனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறைபனி கொட்டி வருகிறது. இதனால் வழக்கத்தைவிட கடுமையான குளிரும் நிலவுகிறது.
இன்று காலை ஊட்டியில் பல்வேறு இடங்களில் உறைபனி தாக்கம் அதிகமாக காணப்பட்டது. ஊட்டி தாவரவியல் பூங்கா, ரெயில் நிலைய வளாகம், குதிரை பந்தய மைதானம், காந்தல் உள்ளிட்ட பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.
அந்த பகுதிகளில் உள்ள பசுமையான புல்வெளிகள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல காட்சி அளித்தது. மரங்கள், செடிகள், கொடிகளிலும் உறைபனி படர்ந்திருந்தது.
இதுதவிர வீடுகளின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது பனிகட்டி உறைந்திருந்தது.
இதனை பொதுமக்கள் கையில் எடுத்து ரசித்து பார்த்தனர்.
ஊட்டியில் இன்று அதிகபட்சமாக 23.9 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 1.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி இருந்தது.
உறைபனியுடன் கடும் குளிரும் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குளிரில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் சுவர்ட்டர் அணிந்து கொள்கின்றனர். வேன், ஆட்டோ டிரைவர்கள் சாலையின் ஓரங்களில் ஆங்காங்கே தீ மூட்டி குளிர்காய்ந்து வருகிறார்கள். தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் சுவர்ட்டர், மப்புலர் உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குன்னூர், கோத்தகிரி, பர்லியார், கொடநாடு, ஒட்டுப்பட்டறை, வண்டிச்சோலை உள்ளிட்ட பகுதிகளிலும் உறைபனியின் தாக்கம் காணப்பட்டது. அதிகாலையில் பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர்.
- விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது.
- ஏராளமான டிரைவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
அரவேனு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் சாலை பாதுகாப்பு வாரம் கடந்த 11-ந் தேதி முதல் 17 தேதி வரை அனுசரிக்கப்பட்டது. இதில் சாலை விதிகளை கடைபிடித்தல், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிதல், காரில் பயணம் செய்யும் போது சீட் பெல்ட் அணிதல், அதிவேகத்தில் வாகனங்களை இயக்கக்கூடாது என விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது.
இதன் ஒரு பகுதியாக சாலை பாதுகாப்பு வாரத்தின் நிறைவு நாளான நேற்று கோத்தகிரி போக்குவரத்து காவல்துறை சார்பில், தனியார் மருத்துவமனையுடன் இணைந்து ஆட்டோ, டாக்சி மற்றும் சுற்றுலா வாகன டிரைவர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதற்கு இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முகாமில் ஏராளமான டிரைவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
- முதலாவதாக வந்த சென்னை அணிக்கு முதல் பரிசாக 20000ரூபாய் வழங்கப்பட்டது.
- லீக் மற்றும் நாகௌட் முறையில் நடைபெற்றது.
கோத்தகிரி,
கோத்தகிரி காந்திமைதானத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோத்தகிரி கைப்பந்து கழகம் சார்பில் 11-வது மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது.இந்த கைப்பந்து போட்டியில் தமிழ்நாடு, கேரளா, சென்னை, கோவை என பல மாநில மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான கைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.
இந்த கைப்பந்தாட்ட போட்டி லீக் மற்றும் நாகௌட் முறையில் நடைபெற்றது. இந்த கைப்பந்தாட்ட காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டி பகல் நேரங்களில் நடைபெற்றது. இறுதிப்போட்டியானது நேற்று இரவு நடந்தது. இதில் சென்னை அணியும், நெல்லை கண்ணன் அணியும் மோதின. இந்த போட்டிக்ஷயில் 19-24 என்ற நேர் செட் கணக்கில் சென்னை அணி வெற்றி பெற்றது. முதலாவதாக வந்த சென்னை அணிக்கு முதல் பரிசாக 20000ரூபாயும், நெல்லை கண்ணன் அணிக்கு 2-ம் பரிசாக 15000 ரூபாயும் அணிக்கு 3-ம் விவி பிரதர்ஸ் அணி 3பரிசாக 10000 ரூபாயும், 4-ம் பரிசாக ஆல்வின் பிரதர்ஸ் அணிக்கு 7000 ரூபாயும் வழங்கப்பட்டது.
- சுழற் கோப்பையும் வழங்கப்பட்டது.
- மஞ்சூர் கெட்சிக்கட்டி மைதானத்தில் நடைெபற்று வந்தது.
ஊட்டி,
தி.மு.க தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நல்லாசியுடன், தி.முக இளைஞரணி செயலாளரும், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக் அறிவுறுத்தல் படி நீலகிரி மாவட்ட இளைஞரணி சார்பில் சின்னவர் டிராபி என்ற மாபெரும் கிரிக்கெட் போட்டிகள் கடந்த டிசம்பர் 25-ந் தேதி முதல் மஞ்சூர் கெட்சிக்கட்டி மைதானத்தில் நடைெபற்று வந்தது.
16-ந் தேதி இறுதி போட்டி நடந்தது.
இறுதி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.கே.எஸ்.பாபு தலைமை தாங்கினார். ஊட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பில்லன், கீழ்குந்தா பேரூர் செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர்.
இந்த போட்டியில் வெற்றிபெற்ற கிண்ணக்கொரை அணிக்கு ரூ.5000 ரொக்கபரிசும் மற்றும் சுழற்கோப்பையும், 2-ம் பரிசாக வெற்றி பெற்ற சேரனூர் அணிக்கு 3000 ரூபாய் ரொக்க பரிசும், மற்றும் சுழற் கோப்பையும் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் கேடயங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
- சந்தனம், தேக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள் உள்ளது.
- மரங்கள் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட முதுமலை புலிள் காப்பகத்தின் வெளி மண்டல பகுதியாக மசினகுடி, சிங்காரா, சீகூர் வனச்சரகங்கள் உள்ளன.
இங்கு சந்தனம், தேக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள் உள்ளது. இதுதவிர காட்டு யானைகள், புலிகள், செந்நாய்கள், கரடிகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்தநிலையில் மசினகுடி அருகே உள்ள சீகூர் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில், துணை இயக்குனர் அருண்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து சந்தன மரங்களை வெட்டி கடத்தியவர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டது.
இதையடுத்து சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சந்தன மரங்களை வெட்டி கடத்தியது உறுதி செய்யப்பட்டது. மேலும் பலர் அதற்கு உடந்தையாக இருப்பது கண்டுபி டிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக தெங்குமரஹாடா பகுதியை சேர்ந்த பண்டன் (வயது 32), மசினகுடி பகுதியை சேர்ந்த பாலன், சந்திரன் ஆகிய 3 பேர் மீது சீகூர் வனச்சரகர் முரளி உள்ளிட்ட வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து பண்டன், பாலன், சந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கூடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, சந்தன மரங்கள் வெட்டி கடத்திய வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு உள்ளது. இதனால் அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர். மசினகுடி அருகே வனப்பகுதியில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அக்னி வீரர்களின் முதல் குழு, கடந்தாண்டு டிசம்பர் முதல் அந்தந்த பயிற்சி மையங்களில் பயிற்சி மேற்கொள்ள தொடங்கினர்.
- கொரோனா தொற்று காரணமாக, 3 வருட இடைவெளிக்குப் பிறகு, அக்னி வீரர்களுக்கு முதன்முறையாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
குன்னூர்:
இந்திய அரசால் தொடங்கப்பட்ட அக்னிபாத் திட்டம் மூலமாக, நாடு முழுவதும் ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
அக்னி வீரர்களின் முதல் குழு, கடந்தாண்டு டிசம்பர் முதல் அந்தந்த பயிற்சி மையங்களில் பயிற்சி மேற்கொள்ள தொடங்கினர்.
கொரோனா தொற்று காரணமாக, 3 வருட இடைவெளிக்குப் பிறகு, அக்னி வீரர்களுக்கு முதன்முறையாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
அனைத்து பயிற்சி மையங்களிலும் உடல் பரிசோதனைகள், மருத்துவ பரிசோதனை, எழுத்து தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய நான்கு கட்ட கடினமான சோதனைகள் மற்றும் வடிகட்டுதல் செயல்முறைகளுக்கு பிறகு, முதல் குழு வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் மையத்தில் பயிற்சிக்கு இணைந்துள்ளனர். அவர்களை, மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டண்ட் பிரிகேடியர் எஸ்.கே.யாதவ் வரவேற்றார்.
பின்னர் அவர் பேசும்போது, "இந்திய ராணுவத்துக்கு நன்கு பயிற்சியளிக்கப்பட்ட, ஒழுக்கமான, அதிக உந்துதல் மற்றும் புத்திசாலியான வீரர்களை உருவாக்க, அக்னி வீரர்கள் 31 வாரங்களுக்கு திட்டமிடப்பட்ட பயிற்சி முறைக்கு உட்படுத்தப்படுவார்கள்" என்றார்.
மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரால் பயிற்சியை சீராக நடத்துவதை உறுதி செய்வதற்காக ஏராளமான பயிற்சி, உள்கட்ட மைப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 1,500 அக்னி வீரர்கள் பயிற்சி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுதப்படைகள் மற்றும் தேசத்தை வலுப்படுத்துவதில் நாட்டின் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு வகிக்க உதவும். அவர்கள் நான்கு ஆண்டுகள் கட்டாயமாக பணிபுரிவார்கள். ஒழுக்கம், திறமை மற்றும் ராணுவ நெறிமுறைகளுடன் அதிகாரம் அளிப்பது தேசத்துக்கும், சமுதாயத்துக்கும் நன்மை பயக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு கடந்த 5 தினங்களில் மட்டும் 60 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
- ஊட்டி படகு இல்லத்தில் 48 ஆயிரம் பேர் படகு சவாரி செய்துள்ளனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள இயற்கை அழகினையும், அங்குள்ள சுற்றுலா தலங்களையும் கண்டு ரசிப்பதற்காக நாள்தோறும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள்.
குறிப்பாக கோடை விடுமுறை, விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.
கடந்த 13-ந்தேதி முதல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்தனர். நேற்று காணும் பொங்கலையொட்டி அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
அவர்கள் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மலர்களை கண்டு ரசித்தனர்.
புல்வெளியில் குடும்பத்துடன் அமர்ந்து பேசியும், விளையாடியும் மகிழ்ந்தனர். அழகான மலர் செடிகள் முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.
இதேபோல் ஊட்டி படகு இல்லத்திலும் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். தொட்டபெட்டா மலைசிகரம், ரோஜா பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, கொடநாடு காட்சி முனை, கேத்ரின் நீர்வீழ்ச்சி, லேம்ஸ்ராக் காட்சி முனை, முதுமலை புலிகள் காப்பகம் உள்பட மாவட்டத்தின் அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு கடந்த 5 தினங்களில் மட்டும் 60 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். ஊட்டி படகு இல்லத்தில் 48 ஆயிரம் பேர் படகு சவாரி செய்துள்ளனர்.
தொடர் விடுமுறை நேற்றுடன் முடிந்ததால் மதியத்திற்கு பிறகு சுற்றுலா தலங்களில் கூட்டமானது குறைய தொடங்கியது. சுற்றுலா பயணிகள் தங்கள் ஊர்களுக்கு செல்ல தொடங்கியதால் வாகன போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. பஸ் நிலையங்களிலும் பஸ்சுக்காக ஏராளமான பயணிகள் காத்திருந்தனர்.
- 18-வது ஆண்டு பொங்கல் திருவிழா நடைபெற்றது.
- ஆடல், பாடலுடன் ஊர்வலமாக வந்தனர்.
குன்னூர்,
தமிழகம் முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. புது நெல்லரிசி, மஞ்சள், கரும்பு உள்பட விளை பொருட்களை வைத்து பொங்கலை கொண்டாடினர். மாட்டு பொங்கல் நேற்று கொண்டாடப்பட்டது. குன்னூரில் பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காந்திபுரம் இந்திரா நகரில் நாகம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 18-வது ஆண்டு பொங்கல் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து தந்தி மாரியம்மன் கோவிலில் இருந்து செண்டை மேளம் முழங்க அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவில் விநாயகர், முருகப்பெருமான், ஆஞ்சநேயர், பத்ரகாளி, பெருமாள் போன்ற சாமி வேடங்கள் அணிந்து பக்தர்கள் ஆடல், பாடலுடன் ஊர்வலமாக வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
- ரூ.3,12,08,875 அபராதம் வசூலிக்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் போக்குவரத்து விதிமீறியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த ஆண்டில் போக்குவரத்து மீறியதாக 1,96,195 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்வது, அதிவேகமாக வாகனத்தை இயக்குவது, செல்போன் பேசி கொண்டே வாகனம் ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாமல் செல்வது போன்ற போக்குவரத்து விதிமீறலுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இதே தவறை மீண்டும் செய்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என வாகன ஓட்டிகளை எச்சரித்து வருகிறோம்.
அபராத தொகை அதிகரிக்கப்பட்டதால் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டில் 2,32,248 வழக்குகள் பதியப்பட்டு, ரூ.3,12,08,875 அபராதம் வசூலிக்கப்பட்டது. கடந்த ஆண்டு 1,96,195 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.3.86 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- குழந்தைகளின் நடனம் மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
- கேடயங்கள் கொடுத்து கவுரவிக்கப்பட்டனர்.
அரவேணு,
கோத்தகிரி மார்க்கெட் திடலில் குன்றின் குரல்கள் சார்பில் 9-ம் ஆண்டு தமிழர் திருநாள் பொங்கல் விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து வந்த குழந்தைகளின் நடனம் மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை சில்ரன் சேரிடபில் டிரஸ்ட், விடியல் டிரஸ்ட் மற்றும் கோத்தகிரி ரேடியோ தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சியில் பொதுமக்கள் குழந்தைகள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர். மேலும் ஆத்தங்குடி இளையராஜாவின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவிற்கு கோத்தகிரி ஒன்றிய செயலாளர் கண்ணன், கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி மற்றும் பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கோத்தகிரி பகுதிகளில் சிறப்பாக செயல்பட்ட சேவை மையங்களின் உரிமையாளர்களுக்கு கேடயங்கள் கொடுத்து கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
- சிறப்பாக கோலமிட்டவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
- பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பா.ஜ.க சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் நிகழ்ச்சி ஊட்டி அருகே காந்தலில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். இதில் மகளிருக்கான கோலப்போட்டி நடைபெற்றது.
போட்டியில் பங்கேற்ற ெபண்கள் வண்ண வண்ண கோலங்களிட்டு அசத்தினர்.இதில் சிறப்பாக கோலமிட்டவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. விழாவில் பா.ஜ.க நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
- 118 மதுபாட்டில்கள்-ரூ.2340 பறிமுதல் செய்தனர்.
- போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கோத்தகிரி,
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நேற்று மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நீலகிரி சுற்றியுள்ள பகுதிகளில் மதுபாட்டிகள் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஊட்டி, கோத்தகிரி போலீசார் அந்த பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கோத்தகிரி போலீசார் கட்டபெட்டு பகுதியில் மது பாட்டிலை பதுக்கி வைத்து விற்பனை செய்த ஊட்டியை சேர்ந்த நாகராஜ்(வயது 27), ராம்சந்த் பகுதியில் அனையட்டியை சேர்ந்த சந்திரன் (52), கப்பட்டியை சேர்ந்த பன்னீர் செல்வம் (49), ராப்ராய் பகுதியை சேர்ந்த வெங்கடாச்சலம் (45), குமரவேல் (70)ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 113 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். ஊட்டி போலீசார் தேவர் சோலை பஜார் பகுதியில் மதுபாட்டிலை பதுக்கி விற்ற அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (53) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 5 மதுபாட்டிகள் மற்றும் ரூ.1990-யை பறிமுதல் செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஒேர நாளில் மதுபாட்டிலை பதுக்கி விற்ற 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 118 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.2340-யை பறிமுதல் செய்தனர்.






