என் மலர்
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்:
டாஸ்மாக் சில்லரை மதுபானக் கடைகள் மற்றும் கடையுடன் இணைந்த மதுக்கூடங்கள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டும் செயல்பட வேண்டும் என தமிழக அரசால் உத்தரவிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம், அவரிக்காடு பகுதியில் அமைந்துள்ள மதுபானக்கடையுடன் இணைந்த மதுக்கூடம் அரசு உத்தரவை மீறி மதியம் 12 மணிக்கு முன்னதாகவே திறந்து மது விற்பனை செய்யப்படுவதாக வரப்பெற்ற புகாரின் பேரில், மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி நாகப்பட்டினம் டாஸ்மாக் மாவட்ட மேலாளரால் மேற்படி மதுக்கூடம் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. மதுக்கூட உரிமதாரர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
வேதாரண்யம் அருகே வாய்மேடு சிறுதலைகாடு கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (வயது 45). இவரது மனைவி சித்திரா. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் பன்னீர்செல்வம் நேற்று மாலை வீரபத்திரன் என்பவரது படகை எடுத்துக்கொண்டு அதே ஊரைச்சேர்ந்த சிவா, கார்த்திக் ஆகிய 2 பேருடன் கோடியக்கரை ஆற்று முகதுவார கரைக்கு மீன்பிடிக்க சென்றார். இரவு கடற்கரையோரம் மீன்பிடிப்பதற்காக வலையை வீசியுள்ளனர். இதையடுத்து அதிகாலை வலையை மேலே இழுப்பதற்காக 3 பேரும் ஒவ்வொரு பக்கமாக நின்று வலையை மேலே இழுத்துள்ளனர்.
அப்போது சிவா மற்றும் கார்த்திக் ஆகியோர் மேலே வந்தனர். பன்னீர்செல்வம் மட்டும் வரவில்லை உடனே இருவரும் கடற்கரையில் இறங்கி பார்த்துள்ளனர்.
அப்போது பன்னீர் செல்வம் சேற்றில் சிக்கி இறந்து கிடந்தார். அதிர்ச்சி அடைந்த இருவரும் இறந்த அவரது உடலை கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் கடலோர காவல்படை டி.எஸ்.பி. சிவசங்கர் சம்பவ இடத்திற்கு வந்து பன்னீர்செல்வத்தின் உடலை பார்வையிட்டார். பின்னர் பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகே முதலியார் தெருவில் ஆட்டோ ஸ்பேர்பாட்ஸ் கடை நடத்தி வருபவர் ஹீரா ராம் படேல். இவர் அதே பகுதியில் வசித்து வருகிறார்.
இன்று காலை 7 மணியளவில் ஹீரா ராம் படேல் மகன் கமலேஷ் படேல் கடைக்கு வந்தார். அப்போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்ப ட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் கடையின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த பணப்பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் பணத்தை காணவில்லை.
அதனை கொள்ளை கும்பல் எடுத்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து மயிலாடுதுறை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் கைரேசை நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.
கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்டப்டு உள்ளது. அவர்கள் தீவிர தேடுல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆட்கள் நடமாடட்டம உள்ள பஸ் நிலையம் அருகே உள்ள கடையில் கொள்ளை நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ராம கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 53). இவர் அதே ஊரைச் சேர்ந்த புகழேந்தி என்பவரது குடும்பத்தை பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அன்பரசன், மோகன்ராஜ்(28), கார்த்தி(24), புகழேந்தி ஆகிய 4 பேரும் சேர்ந்து சீனிவாசன் வீட்டில் புகுந்து அங்குள்ளவர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டி டி.வி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கிவிட்டு ஓடிவிட்டார்களாம்.
இதுகுறித்து சீனிவாசன் வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மோகன்ராஜ், கார்த்தி ஆகிய இருவரை கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது மாரியம்மன் கோவில். இந்த கோவிலை நிர்வகிக்கும் அறங்காவலர் நியமனம் உரிமை தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்சினை இருந்து வருகிறது.
இந்நிலையில் கோவிலில் வழக்கமாக நடைபெறும் ஆண்டு திருவிழாவிற்கான காப்பு கட்டும் நிகழ்ச்சி கடந்த 21–ந்தேதி இரவு நடத்துவதற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
அறங்காவலர் நியமனம் உரிமை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காத வரை திருவிழா நடத்தக் கூடாது. திருவிழாவை தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கூறியும் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என ஒரு பிரிவைச் சேர்ந்த ராஜரத்தினம் (வயது 70) மருதூர் தெற்கு கடை வீதியில் அமைந்துள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டினார்.
தகவலறிந்த வாய்மேடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து முதியவரிடம் பேசி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்ததும் அவர் செல்போன் கோபுரத்திலிருந்து இறங்கி வந்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவதாஸ் தற்கொலைக்கு முயன்றதாக ராஜரத்தினம் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (வயது 55). இவர் வேதாரண்யம்– திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் கருப்பம்புலம் ஆப்பக்கண்ணி பாலத்தில் நடந்து வந்த போது அரசு பஸ் மோதி பலத்த காயமடைந்தார்.
உடனே அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.
நாகப்பட்டினம்:
திருச்சி மேலகற்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 37). இவர் திருச்சியில் கடன் தவணையில் ஒரு கார் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 6 மாதமாக அதற்கான கடனை கட்ட முடியாமல் அவர் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 20–ந்தேதி திருச்சியில் இருந்து புறப்பட்டு அவர் வேளாங்கண்ணிக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் இன்று காலை வேளாங்கண்ணி பஸ் ஸ்டாண்டு அருகில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து தகவலறிந்த வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சந்திரகாசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம் செட்டிப்புலம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது47). இவரது பக்கத்து வீட்டுக்காரர் சுப்பிரமணியன் (66). இவர்களிடையே நிலப் பிரச்சினை இருந்து வருகிறது.
இது தொடர்பாக தமிழ்ச்செல்வி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் சுப்பிரமணியன் பிரச்சினைக்குரிய இடத்தில் மண்கொட்டி வேலி வைக்க முயன்றுள்ளார். இதனை தமிழ்ச்செல்வி தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சுப்பிர மணியன் மற்றும் அவர் மகன் பழனிவேலும் தமிழ்ச்செல்வி எதிரில் நிர்வாணமாக நின்று கொண்டு ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
இது குறித்து தமிழ்ச்செல்வி கரியாப்பட்டினம் போலீசில் புகார் செய்தார். சப்– இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து சுப்ரமணியனை கைது செய்து தலைமறைவான பழனிவேலை தேடி வருகிறார்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு பகுதியை சேர்ந்தவர் கேசவன் (வயது 30). அதே ஊரைச் சேர்ந்த ஓர் பெண் குழந்தை, ஓர் ஆண் குழந்தை பெற்றெடுத்த ராஜேஸ்வரி (30) என்பவரை கேசவன் திருமணம் செய்து கொண்டாராம்.
இந்நிலையில் கோடியக்காட்டு கோவில் திருவிழாவிற்கு குழந்தைகளுடன் ராஜேஸ்வரி சென்று விட்டாராம். நீண்ட நேரம் கழித்து வீடு திரும்பியவரை கேசவன் தட்டிக்கேட்ட போது பிரச்சனை ஏற்பட்டது. பின்பு ராஜேஸ்வரி அங்குள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மனமுடைந்த கேசவன் வீட்டில் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டாராம். கேசவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்து விட்டார். புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் சிறப்பு சப்– இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை கூரைநாடு நாச்சி முத்து நகரில் வசித்து வருபவர் அப்துல் ரபாத். இவர் கொரநாடு சுந்தரம் டாக்கீஸ் எதிர்புறம் நகராட்சி கட்டிடத்தில் வெற்றிலை மண்டி நடத்தி வருகிறார்.
இன்று அதிகாலை 4 மணி அளவில் இவர் தனது வெற்றிலை மண்டிக்கு மொபட்டில் சென்றார். அப்போது பையில் ரூ. 4½ லட்சத்தை எடுத்து சென்றார்.
மயிலாடுதுறை கணபதி நகரில் சென்ற போது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் 3 பேர் வந்தனர். அதே சமயத்தில் எதிரே ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தது. அதில் 2 பேர் இருந்தனர்.
திடீரென 5 பேரும் அப்துல் ரபாத் மொபட்டை வழி மறித்தனர். பின்னர் அவரை தாக்கி கீழே தள்ளி விட்டு அவர் வைத்திருந்த ரூ. 4½ லட்சம் பணத்தை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்துல் ரபாத் மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற 5 பேர் கும்பலை தேடி வருகிறார்கள்.
வியாபாரியை தாக்கி பணத்தை பறித்த சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை கூரைநாடு நாச்சிமுத்து நகரில் வசித்து வருபவர் அப்துல் ரபாத். இவர் கொரநாடு சுந்தரம் டாக்கீஸ் எதிர்புறம் நகராட்சி கட்டிடத்தில் வெற்றிலை மண்டி நடத்தி வருகிறார்.
இன்று அதிகாலை 4 மணி அளவில் இவர் தனது வெற்றிலை மண்டிக்கு மொபட்டில் சென்றார். அப்போது பையில் ரூ. 4½ லட்சத்தை எடுத்து சென்றார்.
மயிலாடுதுறை கணபதி நகரில் சென்ற போது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் 3 பேர் வந்தனர். அதே சமயத்தில் எதிரே ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தது. அதில் 2 பேர் இருந்தனர்.
திடீரென 5 பேரும் அப்துல் ரபாத் மொபட்டை வழி மறித்தனர். பின்னர் அவரை தாக்கி கீழே தள்ளி விட்டு அவர் வைத்திருந்த ரூ. 4½ லட்சம் பணத்தை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்துல் ரபாத் மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற 5 பேர் கும்பலை தேடி வருகிறார்கள்.
வியாபாரியை தாக்கி பணத்தை பறித்த சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம்:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இறைச்சக்குளம் தரேஸ்புரத்தை சேர்ந்தவர் பானு (வயது–42). இவர் தனது மகன்களுடன் நேற்று வேளாங்கண்ணி மாதா ஆலயத்துக்கு வந்துள்ளார்.
இவர் இரவு தங்கும் விடுதிக்கு செல்ல நடந்து சென்றபோது அவர் வைத்திருந்த கைப்பையை மர்மநபர் அபேஸ் செய்து விட்டான். அதில் 32½ பவுன் நகை இருந்தது. அதன் மதிப்பு ரூ.6½ லட்சம் ஆகும்.
இதுபற்றி அறிந்த பானு கதறி அழுதார். அவர்வேளாங்கண்ணியில் பல இடங்களில் தேடியும் அவரது கைப்பை கிடைக்க வில்லை.
இது குறித்து அவர் வேளாங்கண்ணி போலீசிலில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பழனிசாமி வழக்குப்பதிவு செய்து பானுவிடம் இருந்து நகைப்பையை அபேஸ் செய்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பவம் வேளாங்கண்ணியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






