என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலாடுதுறையில் கடையில் ரூ. 2 லட்சம் கொள்ளை
    X

    மயிலாடுதுறையில் கடையில் ரூ. 2 லட்சம் கொள்ளை

    மயிலாடுதுறையில் கடையின் ஷட்டரை உடைத்து ரூ. 2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகே முதலியார் தெருவில் ஆட்டோ ஸ்பேர்பாட்ஸ் கடை நடத்தி வருபவர் ஹீரா ராம் படேல். இவர் அதே பகுதியில் வசித்து வருகிறார்.

    இன்று காலை 7 மணியளவில் ஹீரா ராம் படேல் மகன் கமலேஷ் படேல் கடைக்கு வந்தார். அப்போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்ப ட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் கடையின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த பணப்பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் பணத்தை காணவில்லை.

    அதனை கொள்ளை கும்பல் எடுத்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து மயிலாடுதுறை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் கைரேசை நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.

    கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்டப்டு உள்ளது. அவர்கள் தீவிர தேடுல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆட்கள் நடமாடட்டம உள்ள பஸ் நிலையம் அருகே உள்ள கடையில் கொள்ளை நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×