என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் அருகே கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் சேற்றில் சிக்கி சாவு
    X

    வேதாரண்யம் அருகே கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் சேற்றில் சிக்கி சாவு

    வேதாரண்யம் அருகே கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் பன்னீர் செல்வம் சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே வாய்மேடு சிறுதலைகாடு கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (வயது 45). இவரது மனைவி சித்திரா. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் பன்னீர்செல்வம் நேற்று மாலை வீரபத்திரன் என்பவரது படகை எடுத்துக்கொண்டு அதே ஊரைச்சேர்ந்த சிவா, கார்த்திக் ஆகிய 2 பேருடன் கோடியக்கரை ஆற்று முகதுவார கரைக்கு மீன்பிடிக்க சென்றார். இரவு கடற்கரையோரம் மீன்பிடிப்பதற்காக வலையை வீசியுள்ளனர். இதையடுத்து அதிகாலை வலையை மேலே இழுப்பதற்காக 3 பேரும் ஒவ்வொரு பக்கமாக நின்று வலையை மேலே இழுத்துள்ளனர்.

    அப்போது சிவா மற்றும் கார்த்திக் ஆகியோர் மேலே வந்தனர். பன்னீர்செல்வம் மட்டும் வரவில்லை உடனே இருவரும் கடற்கரையில் இறங்கி பார்த்துள்ளனர்.

    அப்போது பன்னீர் செல்வம் சேற்றில் சிக்கி இறந்து கிடந்தார். அதிர்ச்சி அடைந்த இருவரும் இறந்த அவரது உடலை கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் கடலோர காவல்படை டி.எஸ்.பி. சிவசங்கர் சம்பவ இடத்திற்கு வந்து பன்னீர்செல்வத்தின் உடலை பார்வையிட்டார். பின்னர் பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×