என் மலர்
செய்திகள்

வேளாங்கண்ணியில் கடன் பிரச்சினை காரணமாக வாலிபர் தற்கொலை
நாகை அருகே வேளாங்கண்ணி போலீஸ் சரகம் பஸ் ஸ்டாண்ட் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
நாகப்பட்டினம்:
திருச்சி மேலகற்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 37). இவர் திருச்சியில் கடன் தவணையில் ஒரு கார் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 6 மாதமாக அதற்கான கடனை கட்ட முடியாமல் அவர் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 20–ந்தேதி திருச்சியில் இருந்து புறப்பட்டு அவர் வேளாங்கண்ணிக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் இன்று காலை வேளாங்கண்ணி பஸ் ஸ்டாண்டு அருகில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து தகவலறிந்த வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சந்திரகாசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story






