என் மலர்
நாகப்பட்டினம்
மயிலாடுதுறை செம்பதனிருப்பு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகள் திவ்யா (வயது–21) இவரும், வசிட்டச்சேரி அண்ணாநகரை சேர்ந்த ராமசாமி மகன் வினோத்குமார் (27) என்பவரும் செல்போனில் பேசி அறிமுகமாகி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து தினமும் பேசிவந்த வினோத்குமார் கடந்த 16–ந்தேதி திவ்யா வீட்டுக்கு சென்று அவரை திருமணம் செய்வதாக ஆசைகாட்டி கற்பழித்துள்ளார். நேற்றும் அவர் திவ்யா வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி திவ்யா கூறி உள்ளார். இதற்கு வினோத்குமார் மறுப்பு தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்த திவ்யா இதுபற்றி மயிலாடுதுறை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராணி வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தார்.
இந்த சம்பவம் செம்பதனிருப்பில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் 15 முதல் மே 29–ந் தேதி வரை 45 நாட்கள் விசைப்படகில் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம்.
இந்த கால கட்டத்தில் விசைப்படகினர் யாரும் கடலுக்கு சென்று மீன் பிடிப்பதில்லை. இந்த தடைகாலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது. இதனையடுத்து நள்ளிரவு முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
நாகை மாவட்டத்தில் பழையாறு, திருமுல்லைவாசல், தென்னம்பட்டினம், பூம்புகார், வானகிரி, தரங்கம்பாடி, சின்னங்குடி, நாகூர், சில்லடி, நாகை, வானவன் மகாதேவி, வெள்ளப்பள்ளம், ஆறுகாட்டுத்துறை, வேதாரண்யம், கோடியக்கரை ஆகிய பகுதிகளில் உள்ள மீனவர்கள் ஆயிரக்கணக்கான படகுகளில் மீன் பிடிக்க சென்றனர்.
45 நாட்கள் கழித்து கடலுக்கு செல்வதால் மீனவர்கள் உற்சாகமாக சென்றனர். கடந்த ஆண்டு மீன்பாடு சரியாக இல்லாததால் பல படகுகள் சரியாக கடலுக்கு செல்லவில்லை.
இந்த ஆண்டாவது நல்ல மீன்பாடு இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். நேற்று நள்ளிரவு முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று உள்ளதால் மீன் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாதேவன் அங்குள்ள பட்டமங்கலம் வண்ணான் குளம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த சாராய வியாபாரி குமாரை பிடித்து சோதனை செய்த போது அவரிடம் 580 கிராம் டயோசிபாம் எனப்படும் போதை பவுடர் இருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் குமாரை கைது செய்தனர்.
இதே போல் மயிலாடுதுறை அடுத்துள்ள முலப்பாக்கம் பகுதியிலும் இன்ஸ்பெக்டர் சோதனையில் ஈடுபட்டார். அங்குள்ள செருகுடி சாலையில் ஒரு கட்டிடத்தின் ஓரமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து சோதனை செய்தார்.
அவரிடமும் 500 கிராம் டயோசிபாம் போதை பவுடர் இருந்தது. அவரை விசாரித்ததில் முலப்பாக்கத்தை சேர்ந்த சாராய வியாபாரி அழகர் சாமி (43) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்தனர்.
நாகப்பட்டினம், மே.29–
நாகப்பட்டினம் அண்ணா நகர் அக்கரைகுளத்தை சேர்ந்த ராஜன்மகன் தங்கபாண்டியன் (வயது–36) ஆட்டோ டிரைவரான இவர் மீது நாகை டவுன் போலீசிலில் பல வழக்குகள் உள்ளது. அப்பகுதியில் ரவுடியாக இருந்த தங்க பாண்டியனுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்தநிலையில் கடந்த 27–ந்தேதி நள்ளிரவு வீட்டுக்கு நடந்து வந்த தங்கபாண்டியனை மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் நாகை டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தங்கபாண்டியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
அவர்கள் இந்த கொலையில் தொடர்புடைய தனபால் மகன் சிங்காரவேலு (19), சேகர் மகன் வினோத்குமார் (29) நாகேஸ்வரன் மகன் கமல்நாத் (22), கணேசன் மகள் விஜயபாரதி (20), மதியழகன் மகன் சிலம்போலியன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையுண்ட தங்க பாண்டியனுக்கு பிருந்தா (28) என்ற மனைவியும், திவ்யபாரதி (12), என்ற மகளும், உக்கிரபாண்டி (4) என்ற மகனும் உள்ளனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே உள்ள சேந்தங்குடி துர்க்கா பரமேஸ்வரி காலனியை சேர்ந்தவர் சந்திரமோகன் (30). ஆட்டோ டிரைவர்.
இவர் நேற்று இரவு மயிலாடுதுறையில் இருந்து சேந்தங்குடிக்கு ஆட்டோவில் சென்றார். அங்குள்ள ஆர்ச் பகுதியில் சென்ற போது சிதம்பரத்தில் இருந்து திருப்பூர் சென்ற அரசு பஸ் ஆட்டோ மீது மோதியது.
இதில் சந்திரமோகன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.
இந்த தகவல் கிடைத்ததும் அப் பகுதி மக்கள் திரண்டு வந்தனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது.
விபத்தில் பலியான சந்திரமோகனுக்கு மனைவி, ஒரு குழந்தை உள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள தெற்குபொய்கை நல்லூரை சேர்ந்தவர் அர்ஜூனன். இவரது மனைவி சீதா (வயது45). இவர்களுக்கு அமுதா (18) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.அர்ஜூனன் வெளியூரில் உள்ளார்.
இந்த நிலையில் தெற்கு பொய்கை நல்லூரை சேர்ந்த செட்டி மகன் அப்பு (24) என்பவர் சீதாவிடம், அமுதாவை திருமணம் செய்துவைக்கும்படி கட்டாயபடுத்தி வந்தார்.
அவருக்கு மகளை திருமணம் செய்து கொடுக்க விரும்பாத சீதா தனது மகன், மகளை அழைத்து சென்று கத்தரிபுலம் கோவில் குத்தகை என்ற இடத்தில் வசித்து வந்தார்.
இதுபற்றி அறிந்த அப்பு அவரது நண்பன் தினேஷ்குமார் (25) ஆகியோர் நேற்று கத்தரிபுலம் கோவில் குத்தகைக்கு வந்து சீ தாவை சந்தித்து தகராறு செய்தனர். மேலும் வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.
இதுபற்றி சீதா கரியாப்பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து அப்பு, தினேஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தார்.
இவர்கள் மீது வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை அடுத்துள்ள மணல்மேடு காவல் நிலையத்திற்குட்பட்ட கேசிங்கன் பகுதியை சேர்ந்தவர் சக்ரவர்த்தி மகன் நித்தியராஜ்(21). அதே பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் குணாளன்(42) இவர் எலக்ட்ரீசியன். இவருக்கு மனைவி நாகஜோதி, 3 பெண் குழந்தைகளும், 1 ஆண் குழந்தை உள்ளனர். குணாளனும் நித்தியராஜிம் மணல்மேட்டில் இருந்து கேசிங்கன் நோக்கி மதியம் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.
அப்போது மயிலாடுதுறையில் இருந்து திருச்சிற்றம்பலம் சென்ற அரசு பஸ் இருவர் மீதும் மோதியதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் உடல் நசுங்கி பலியாகினர்.
இதுகுறித்து தகவலறிந்த மணல்மேடு இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் ஓட்டுனர் கல்யாணசுந்தரத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் அண்ணா நகர் அக்கரை குளத்தை சேர்ந்த ராஜன் மகன் தங்கபாண்டியன் (வயது 36) தொழிலாளி.
இவர் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தங்கபாண்டியனை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது பற்றிய தகவல் பரவியதும் அங்கு ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் நாகை டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தங்கபாண்டியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த கொலைக்கு என்ன காரணம்? என்பது மர்மமாக உள்ளது. இந்த கொலையில் துப்பு துலக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வருகின்றனா. முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? தங்கபாண்டியனை கொலை செய்தது யார்? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் சாரநாத். இவர் சம்பவத்தன்று போலீஸ் நிலையம் வந்த வக்கீல் அழகுராஜாவிடம் குடிபோதையில் தகராறு செய்தது அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து வக்கீல் அழகுராஜா இன்ஸ்பெக்டர் ராஜசேகரிடம் புகார் செய்தார். அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணனிடம் தகவல் தெரிவித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு சாரநாத் குடிபோதையில் தகராறு செய்தது தெரிய வந்ததின் பேரில் அவரை தற்காலிக பணி நீக்கம் செய்து இன்று நடவடிக்கை எடுத்தார்.
இந்த நிலையில் வக்கீல் தாக்கப்பட்டதை கண்டித்து வேதாரண்யத்தில் வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
படித்த இளைஞர்கள் தங்களுக்குள்ள வேலைவாய்ப்புகள், தொழில்திறன் பயிற்சிகள், வழிகாட்டுதல் தகவல்கள் போன்ற விபரங்களை தேசிய அளவில் அறிந்து கொள்வதற்கு வசதியாக http://www..ncs.gov.in இணையதளம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய மாநில அரசுகளால் போட்டித் தேர்வுகளின் மூலம் நிரப்பப்படும் பணிக்காலியிட விபரங்கள் வாரந்தோறும் http:\\www.tnvelaivaaipv.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. போட்டித் தேர்வுகளின் மூலம் பணிவாய்ப்பு பெறவிரும்பும் மாணவர்களுக்கு நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக இலவச பயிற்சி வகுப்புகளும், நூலக வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலை தேடும் இளைஞர்கள் தேசிய மற்றும் மாநில அளவிலான இணைய தள வசதியினை பயன்படுத்தி பயனடையலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள ஆலங்குடிச்சேரி மெயின் ரோட்டில் வசித்து வருபவர் சீத்தா (47).
இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டை பூட்டி விட்டு நாகையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். நேற்று மாலை அவர் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது.
அதில் வைக்கப்பட்டு இருந்த 15 பவுன் நகை, ரூ. 20 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை காணவில்லை.
இதனை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து சீத்தா திட்டச்சேரி போலீசில் புகார் செய்தார். கைரேகை நிபுணர் பன்னீர் செல்வம் வரவழைக்கப்பட்டார். அவர் கொள்ளையர்களின் ரேகைகளை சேகரித்தார்.
இந்த கொள்ளை குறித்து திட்டச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், அம்புரோஸ், தமிழ் அரசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை சாந்துகாப்பு தெருவில் வசிப்பவர் தியாகராஜன் (வயது 40). இவர் மயிலாடுமாபடுகை ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு தியாகராஜன் கடையை பூட்டி விட்டு சென்று விட்டார். இதனை நோட்ட மிட்ட கொள்ளையன் கடையின் மேற்கூரையை உடைத்து கடைக்குள் புகுந்து அங்கு வைக்கப்பட்டு இருந்து ரூ.44 ஆயிரம் ரொக்கம் மற்றும் லேப்–டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டான்.
இதுபற்றி தியாகராஜன் மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் பணம் திருடிய கொள்ளையனை தேடிவருகிறார்கள்.
இந்த சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






