என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலாடுதுறையில் மளிகை கடையை உடைத்து ரூ.44 ஆயிரம் கொள்ளை
    X

    மயிலாடுதுறையில் மளிகை கடையை உடைத்து ரூ.44 ஆயிரம் கொள்ளை

    மயிலாடுதுறையில் மளிகை கடையை உடைத்து ரூ.44 ஆயிரம் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகிறார்கள்.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை சாந்துகாப்பு தெருவில் வசிப்பவர் தியாகராஜன் (வயது 40). இவர் மயிலாடுமாபடுகை ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு தியாகராஜன் கடையை பூட்டி விட்டு சென்று விட்டார். இதனை நோட்ட மிட்ட கொள்ளையன் கடையின் மேற்கூரையை உடைத்து கடைக்குள் புகுந்து அங்கு வைக்கப்பட்டு இருந்து ரூ.44 ஆயிரம் ரொக்கம் மற்றும் லேப்–டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டான்.

    இதுபற்றி தியாகராஜன் மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் பணம் திருடிய கொள்ளையனை தேடிவருகிறார்கள்.

    இந்த சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×