என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகையில் தொழிலாளி வெட்டிக் கொலை
    X

    நாகையில் தொழிலாளி வெட்டிக் கொலை

    நாகையில் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் அண்ணா நகர் அக்கரை குளத்தை சேர்ந்த ராஜன் மகன் தங்கபாண்டியன் (வயது 36) தொழிலாளி.

    இவர் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தங்கபாண்டியனை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றிய தகவல் பரவியதும் அங்கு ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் நாகை டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தங்கபாண்டியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த கொலைக்கு என்ன காரணம்? என்பது மர்மமாக உள்ளது. இந்த கொலையில் துப்பு துலக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வருகின்றனா. முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? தங்கபாண்டியனை கொலை செய்தது யார்? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×