என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் அருகே பஸ் மோதி முதியவர் படுகாயம்
    X

    வேதாரண்யம் அருகே பஸ் மோதி முதியவர் படுகாயம்

    வேதாரண்யம் அருகே பஸ் மோதி பாலத்தில் நடந்து வந்த முதியவர் பலத்த காயமடைந்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (வயது 55). இவர் வேதாரண்யம்– திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் கருப்பம்புலம் ஆப்பக்கண்ணி பாலத்தில் நடந்து வந்த போது அரசு பஸ் மோதி பலத்த காயமடைந்தார்.

    உடனே அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

    Next Story
    ×