என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் அருகே பெண்ணை ஆபாசமாக திட்டிய முதியவர் கைது
    X

    வேதாரண்யம் அருகே பெண்ணை ஆபாசமாக திட்டிய முதியவர் கைது

    வேதாரண்யம் அருகே பெண்ணை ஆபாசமாக திட்டிய முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம் செட்டிப்புலம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது47). இவரது பக்கத்து வீட்டுக்காரர் சுப்பிரமணியன் (66). இவர்களிடையே நிலப் பிரச்சினை இருந்து வருகிறது.

    இது தொடர்பாக தமிழ்ச்செல்வி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் சுப்பிரமணியன் பிரச்சினைக்குரிய இடத்தில் மண்கொட்டி வேலி வைக்க முயன்றுள்ளார். இதனை தமிழ்ச்செல்வி தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சுப்பிர மணியன் மற்றும் அவர் மகன் பழனிவேலும் தமிழ்ச்செல்வி எதிரில் நிர்வாணமாக நின்று கொண்டு ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து தமிழ்ச்செல்வி கரியாப்பட்டினம் போலீசில் புகார் செய்தார். சப்– இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து சுப்ரமணியனை கைது செய்து தலைமறைவான பழனிவேலை தேடி வருகிறார்.

    Next Story
    ×