என் மலர்
செய்திகள்

வேதாரண்யத்தில் வீடு புகுந்து பொருட்களை சேதப்படுத்திய 2 பேர் கைது
வேதாரண்யத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக வீடு புகுந்து பொருட்களை சேதப்படுத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ராம கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 53). இவர் அதே ஊரைச் சேர்ந்த புகழேந்தி என்பவரது குடும்பத்தை பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அன்பரசன், மோகன்ராஜ்(28), கார்த்தி(24), புகழேந்தி ஆகிய 4 பேரும் சேர்ந்து சீனிவாசன் வீட்டில் புகுந்து அங்குள்ளவர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டி டி.வி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கிவிட்டு ஓடிவிட்டார்களாம்.
இதுகுறித்து சீனிவாசன் வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மோகன்ராஜ், கார்த்தி ஆகிய இருவரை கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.
Next Story






