என் மலர்
செய்திகள்

மயிலாடுதுறையில் வியாபாரியை தாக்கி ரூ.4½ லட்சம் பறிப்பு: 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
மயிலாடுதுறையில் இன்று அதிகாலை வியாபாரியை தாக்கி ரூ. 4½ லட்சம் பணத்தை பறித்து சென்ற 5 பேர் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை கூரைநாடு நாச்சிமுத்து நகரில் வசித்து வருபவர் அப்துல் ரபாத். இவர் கொரநாடு சுந்தரம் டாக்கீஸ் எதிர்புறம் நகராட்சி கட்டிடத்தில் வெற்றிலை மண்டி நடத்தி வருகிறார்.
இன்று அதிகாலை 4 மணி அளவில் இவர் தனது வெற்றிலை மண்டிக்கு மொபட்டில் சென்றார். அப்போது பையில் ரூ. 4½ லட்சத்தை எடுத்து சென்றார்.
மயிலாடுதுறை கணபதி நகரில் சென்ற போது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் 3 பேர் வந்தனர். அதே சமயத்தில் எதிரே ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தது. அதில் 2 பேர் இருந்தனர்.
திடீரென 5 பேரும் அப்துல் ரபாத் மொபட்டை வழி மறித்தனர். பின்னர் அவரை தாக்கி கீழே தள்ளி விட்டு அவர் வைத்திருந்த ரூ. 4½ லட்சம் பணத்தை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்துல் ரபாத் மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற 5 பேர் கும்பலை தேடி வருகிறார்கள்.
வியாபாரியை தாக்கி பணத்தை பறித்த சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story